• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தக்ஷிணகாளி உபாசனை

Status
Not open for further replies.
தக்ஷிணகாளி உபாசனை

காளி வித்யாகிரமத்தின் முக்யமான அம்சங்கள்



இப்பூவுலகில் சக்தி வழிபாட்டு முறை தோன்றிய காலத்தில்
ஸ்ரீ காளிதேவியின் வழிப்பாட்டு முறை தான் முதன் முதலில்
வழக்கத்திற்கு வந்தது. காளிமாதேவியை தேர்ந்தெடுக்க
காரணமான சில முக்யமான அம்சங்களை இங்கே காண்போம் :-

ஸ்ரீ காளிமாதா பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள்
அவள் கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும்
ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு
பயங்கரி, மிகஉக்கிரகமானவள் என்று நினைத்து அவள் உருவப்
படத்தைக்கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.

உண்மைமையில் ஆனந்தமும் பிரேமையும் நிறைந்த கருணா
மூர்த்தியாகிய இந்த தேவியைக்கண்டு நாம் சற்றும் பயப்படத்
தேவை இல்லை. அவளுடைய தோற்றமும் ஆபரணங்களும்
மற்றும் ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த
ஸாரமான கருத்துக்களையும் மந்தர சாஸ்திர தத்துவங்களையும்
அடிப்படையாக கொண்ட குறிப்புகளாகும்.

உதாரணமாக தேவியின் விரிந்து பரவி ஆடிக்கொண்டிருக்கும்
கூந்தல் இவள் கட்டிலடங்காத நிலையில் உள்ள பரம்பொருளின்
ஸ்வரூபத்தினள் என்ற உண்மையை குரிப்பதாகும்.


இவள் உடலில் வஸ்த்ரம் இன்றி இருப்பது இவள் குணங்கடந்த
கோலத்தினள் அதாவது நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை
குறிப்பதாகும்.

இவள் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான சக்தியின்
சின்னமாகும்.

இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட சிரஸானது ஒரு
யோகியானவன் பிரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து
ஆனந்த நிலையில் திளைத்திருப்பதைக் காட்டும் சின்னமாகும்.

மேலும், இவள் தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை
கோத்த மேகலையை தரித்திருப்பது கர்மயோக ஸித்தியின்
மகிமையை காட்டும் சின்னமாகும்.

இவள் ஸ்ரீ மஹாகாளரின் இதயத்தில் வலப்பாதம் வைத்து ஸதா
ஆடிக் கொண்டிருப்பது ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையை
காட்டுகிறது.

பரம கருணாமூர்த்தியாகிய இந்த தேவி, தன் குழந்தைகளாகிய
எல்லா ஜீவன்களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைத்து
மகிழ்ந்து ஆடிய வண்ணம் அருளைப் பொழிகின்ற வேளையில்,
தனது வலது பாதத்தை தன் அன்பு நாயகராகிய மகாகாளரின்
ஹ்ருதய ஸ்தானதிலே அமர்த்துகிறாள். தன் பிரிய தேவியின்
பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின்
அருட்செயலின் ஆற்றலைக் கண்டு தன் இயல்பான இயக்கம்
செயல் அற்றுப் போவதை உணர்கிறார். செயலற்றுப் போன
மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த
கூத்தை பேரின்பத்துடன் அனுபவித்துக் கொண்டிருக்கிரார்.

இந்த நிலையை தியானிக்கும், எந்த உபாசகனும் தானும் அந்த
மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர
பீதிக்கு இரையாகமாட்டான்.

இந்த தேவியின் வழிப்பாட்டுக் கிரமத்தில் பலியிடுதல் ஒரு
அம்சமாகும். ஜீவன்களை கொன்று அர்ப்பணித்தல் தான்
பலி என்று நாம் கருதக்கூடாது. தேவியைஉபாசிப்பவர்கள்
தங்களுள் குடிகொண்டிருக்கும் காமம், குரோதம், லோபம்,
மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைவர்களை
தேவியின் மந்தர ஜபம் என்கிற ஹோம அக்னியில்
அர்ப்பணித்தலே பலியிடுதல் ஆகும்.

காளி தேவியின் மூல மந்திரத்துக்கு " வித்யாராஜ்ஞீ " என்று
பெயர் அதாவது வித்யைகளுக்கெல்லாம் "பேரரசி" என்கிறது
காளி தந்த்ரம். எந்த ஒரு தெய்வ வழிபாட்டிற்கும் பிரதானமானது
அதன் மூலசக்தியே. இந்த மூலசக்தி பல பாதைகளில் இயங்கி
பல ஸ்வரூபங்கள் கொள்கிறது. அவற்ரில் எல்லாம் இந்த
மந்திரத்தின் வலிமையே இயக்கும் சக்தியாக விளங்குவதால்
இந்தமூல சக்தி மூர்த்தியே மேலானது. இதுவே பராசக்தி

மூர்த்தி என்று காளி தந்திரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
ஆதிகாலம் முதல் பராசக்தியின் வழிபாட்டு கிரமங்கள் 1.காளி
2. தாரா 3. சுந்தரி 4. புவனேஸ்வரி 5.பைரவி 6.சின்னமஸ்தா
7. தூமாவதி 8.பகளாமுகி 9. மாதங்கி 10.. கமலாத்மிகா என்ற
பத்து மூர்த்திகளின் உபாஸனை முறைகளாக பழக்கத்தில்
இருந்து வருகின்றன.

இந்த வித்தைகளை " தச மஹா வித்யா " என்று அழைப்பார்கள்.
இவைகளுள் காளி வழிபாடே முதன்மையானதாக உள்ளதால்
காளியை ஆதிபராசக்தி என்று வழங்குவது மரபாயிற்று.

வட நாட்டில் காளிவித்யா வாமாச்சாரமாக தாந்த்ரீக முறையில்
அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால் நாம் தக்ஷிணாசாரமாக உபநிஷத்து,
வேதங்கள், மற்றும் சூக்தங்கள் அடிப்படையில் உபாசிக்கிறோம்.

கைலாசத்தில் ஒருமுறை முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ
மஹாகாளர் காளிகையை விஸ்தாரமாக பூஜித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தேவி காளிகை அவர்கள் முன் தோன்றி உடனேயே
மறைந்துவிடுகிறாள். மஹாகாளர் மீண்டும் சமஷ்டியாக, தன்
பூஜையில் பங்கேற்க வந்த ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரி உள்ளிட்ட
அனைவரும் மிக தீவிரமாக பிரார்த்திக்க, காளி தேவி மனமிரங்கி
மறுபடியும் ஆவிர்பவித்து அநுக்ரஹிக்கிறாள். அந்த சமயத்தில்
ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரி காளிகையிடம் தனக்கு சக்தி யை வரமாக
அருளவேண்டும் என்று பிரார்த்திக்க, காளிகாதேவி கருணையுடன் "
என்னுடைய சஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம் என்னால் பூர்வத்தில்
அமைக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி பாராயணம் செய்து
வந்தால் பூரண "சக்தி" ஏற்படும் " என்று திருவாய் மலர்ந்து அருளி
மறைந்தனள்.

அன்று முதல் ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரியானவள் " ஸ்ரீ ஸர்வஸாம்ராஜ்ய
மேதா" என்று அழைக்கப்படும் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை
பக்தியுடன் பாராயணம் செய்து வருவதால் சக்தி பெற்று
சக்தியில்லையேல் சிவம் இல்லை என்று கூறும் அளவிற்கு
எல்லோரும் இன்புற தன் அருளை பொழிகிறாள்.

சக்தி, மற்றும் காளி உபாசகருக்கு இந்த மந்த்ர ஸ்தோத்ரங்கள்
தேவி நமக்கு கொடுத்திருக்கும் வரமாகும். அனைவருக்கும்
உபாசனை வெற்றி பெற சக்தியும் சகல சௌபாக்கியங்களையும்
கொடுத்து அருளுகிறாள் ஆக இந்த வித்யாக்ரமத்தில் உபாசகன்
தன்னால் இயன்ற பூஜை, ஹோமம், தர்ப்பணம், யோகினி
ஸந்தர்பணைகளும் , பரோபகாரமும், எப்பொழுதும் காளிதேவியின்
ப்ரேம த்யான த்துடன் மந்தர ஜபங்களும் குருவின் தேவைகளையும்
வேண்டிய உதவிகளும் செய்து வந்தாலே போதுமானதாகும்.

சுபம்


 
Kreem Hreem Heem Shri Mathurakalike Kreem Hreem Hoom

My Kula Deivam is Mathura Kali. I chant lot of Mantras/Slokas
pertaining to Kali. Shri Kali Suktham is also a very important
Sloka besides Kalika Sahasranamam one can chant daily, particularly
during Navaratri time.

Badrakaali Karaaleecha Mahakaali Tilothama
Kali Karaala Vakthraantha Kamakshi Kaamatha Suba

Devim Triloga Jananim Charanam Prabadhye

Balasubramanian
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top