• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

Status
Not open for further replies.
தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

ghost+brown-lady.jpg


படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்

பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
………………
(விவேக சிந்தாமணி—பாடல் 30)

பெண்களை நம்பாதே என்ற பாடலில் முதலில் “உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம், பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம்…………….. என்று சொல்லிக்கொண்டே போய் “நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே” என்று முடிகிறது கவிதை.


யார் இந்த பழையனூர் நீலி?

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய்.


சிங்காரவேலு முதலியார் பழைய தமிழில் தொகுத்தளித்த அபிதான சிந்தாமணி (என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம்) கூறும் கதையை முதலில் பார்ப்போம்:

1.“இவள் முற்பிறப்பில் நவஞ்ஜயென்னும் பார்ப்பனி. தன் கணவனையும் குமாரனையும் ஒருவன் கொலை செய்ததால் பழிக்குப்பழி வாங்க திருவாலங்காட்டில் புரிசைக்கிழாருக்குப் புத்திரியாகப் பிறந்து அவன் பேயென்று நீக்க அலைந்து திரிந்து தரிசன செட்டியாகப் பிறந்திருக்கும் தன் கணவனைக் கண்டு களித்து அவனைப் பலவாறு மயக்கி பழையனூர் வெள்ளாளரிடம் முறையிட்டு அவர்கள் 70 பேரையும் அவன் உயிர்க்கு பிணையாக இருக்க உடன்படுத்தினள். அவர்கள் அவ்வாறு பிணை இருப்பதாக செட்டிக்குக் கூறி அவளுடன் இருக்கும்படி உடன்படுத்தினர். இவள் அவனிடம் இருந்த மந்திர வாளை நீங்கச் செய்து அவனுடனிருந்து அவனைக் கொலைபுரிந்து மீண்டும் செட்டியின் தாய் போல வந்து வேளாளர் 69 பேரையும் தீயில் முழுகச் செய்வித்து மிகுந்த ஒருவன் போயிருந்த கழனியிடம் அவன் மகள் போலச் சென்று நடந்த செய்தி கூறிப் பழி வாங்கினள். வேல மரத்தில் இருந்த அண்ணன் இறந்ததற்கு ஊரார் வெட்டிய வேல மரம் காரணமாதலால் ஊரார் எழுபது பெயரையும் பழிவாங்கினள்.”

2. சங்கமன் என்ற வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிருக்க முற்பிறப்பில் அவனைச் சபித்தவள் (சிலப்பதிகாரம்)


இது நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் நடை. சுருக்கமான கதை இதோ:
திரு ஆலங்காட்டுக்குப் பக்கத்தில் பழையனூர் இருக்கிறது. அங்கே நீலிக்கு ஒரு கோவிலும் உண்டு. தமிழில் நீலிக் கண்ணீர் வடிக்காதே என்ற பழமொழியும் இருக்கிறது. நீலியின் கதை தெரியாதோருக்கு இது என்ன என்று தெரியாது. நீலி கதை இரண்டு ஜன்மங்களில் நடந்த கதை.
நவக்ஞானி என்ற பார்ப்பனி காசியில் தந்தையுடன் வசித்துவந்தார். அவருடைய தந்தை காஞ்சீபுரத்தில் இருந்து வந்த ஒரு வணிகரை விருந்துக்கு அழைத்தார். அவர் ஏற்கனவே திருமணமாகியும் கூட விருந்து கொடுத்தவரின் மகளான நவக்ஞானியை மணம் புரிந்தார். ஊருக்குத் திரும்பிய அவர் வீட்டுக்கு வரும் முன்னரே ஆலங்காட்டில் நவக்ஞானியக் கொலை செய்து விடுகிறார். அவளுடைய மறு அவதாரம்தான் நீலி. அந்தப் பெண்ணுடன் வந்த அண்ணன் தூக்குப் போட்டு இறக்கிறான்.

மறு பிறப்பில் நீலியாகப் பிறந்த பெண்ணும் அண்ணனும் பேயாகத் திரிந்து ஆடு மாடுகளை வதம் செய்கின்றனர். அவ்விருவரையும் பெற்றெடுத்தோர் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் நீலி, தன் கணவர் தரிசன செட்டியாகப் பிறந்ததை அறிந்து பழிவாங்கக் காத்திருந்தாள். தரிசன செட்டிக்கு எப்படியோ உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரிந்தது. மந்திர தந்திரம் அறிந்தோரிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க ஒரு மந்திர வாளை பெற்றுக் கொண்டார்.

ghosts-of-gettysburg.jpg


இது இப்படி இருக்க நீலியின் அண்ணன் தங்கியிருந்த வேல மரத்தை பழையனூர் வணிகர்கள் கலப்பை செய்ய வெட்டிச் சென்றுவிட்டனர். அந்தப் பேய்க்கிருந்த வீடும் போய்விட்டது. அதுவும் பழிவாங்கக் காத்திருந்தது. இதற்கிடையில் அதன் தொல்லை தாங்காதபடி ஒருவர் அந்த பேய்க்கு முடிவுகட்டுகிறார்.

நீலியின் ஆத்திரம் தரிசன செட்டி மீது மட்டும் இல்லாமல், வேளாளர் மீதும் பாய்ந்தது. உரிய தருணத்துக்காக காதிருந்தாள். நீலி வேறு ஒரு தந்திரம் செய்தாள். ஒரு மரக் கிளையை ஒடித்து அதைக் குழந்தையாக ஆக்கி ஊர் ஜனங்கள் அனைவரையும் கூட்டி தரிசன செட்டி தன் கணவர் என்றும் அவர் பெற்ற குழந்தைதான் இது என்றும் கதறி அனுதாபத்தைப் பெற்றாள். (இதுதான் நீலிக் கண்ணீர் !!) ஊர் ஜனங்களின் கெட்ட காலம்-- 70 வேளாளர்கள் பஞ்சாயத்து கூடி அவளுடன் செல்ல உத்தரவிட்டனர். பெண்ணுடனும் குழந்தையுடனும் இரவில் தங்கும் போது வாளுக்கு வேலை இல்லை என்று கூறி அதை விட்டுப் போகச் சென்றனர். தரிசன செட்டிக்கு பயம் வந்தது. எவ்வளவோ மன்றாடியும் வாளை விட்டுத் தூங்கவேண்டிய தருணம் வந்தது. இதற்குக் காரணம் 70 பேரும் “உங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் நாங்கள் 70 பேரும் தீக்குளித்து உயிர்விடுவோம்” என்று சூளுரைத்ததுதான்.

woman+ghost.jpg


நீலிப்பேயின் ஆற்றலை அறியாத அப்பாவிகள் அவர்கள். அன்றிரவு தரிசன செட்டியைத் தீர்த்துக்கட்டியது நீலிப் பேய். மறு நாள் சத்தியத்துக்குக் கட்டுப் பட்ட 69 பேர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இதுதான் பாரதத்தின் பெருமை. உண்மைக்கும் சொன்ன சொல்லுக்கும் அவ்வளவு மதிப்பிருந்த காலம் அது.ஒருவர் மட்டும் ஒளிந்து கொண்டார். விடடுவாளா நீலி? அவன் ஒளிந்திருந்த கழனிக்குப் போய், அவன் மகள் போல நடித்து அவனையும் ஏமாற்றிக் கொன்றாள்.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களில் ஒரு நீலி வருகிறாள். அவள் முற்பிறப்பில் கோவலனைச் சபித்ததால்தான் கோவலன் கொலை உண்டான் என்பது சிலப்பதிகாரத்தின் பூர்வ கதை.


நீலி கொன்றது 70+1 பேர் மட்டும் அல்ல. புளியங் கொப்பை ஒடித்து குழந்தை ஆக்கினாள் அல்லவா? அதையும் காலுக்கடியில் போட்டு மிதித்துக் கொன்றதாக பழையனூர் கதைகள் கூறுகின்றன.. அந்த இடங்கள் இன்னும் பழையனூரில் இருக்கின்றன. இதே இடம் எங்கள் இங்கிலாந்தாக இருந்திருந்தால் பேய் நகரம் என்று பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக/ சுற்றுலாத் தலமாக ஆகி இருக்கும். இங்கிலாந்தில் ஆண்டு தோறும் பேய் தினமான ஹாலோவீன் தினத்தில் பேய் வீடு சுற்றுலா நடத்துகிறார்கள். பேய்கள் நடமாடும் பிரபல பத்து இடங்களுக்கு நிறைய பேர் தைரியமாகப் போவார்கள். ஆனால் பழையனூர் நீலியைப் பற்றிக் கேட்டால் அவர்களும் நடுங்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.


Please read earlier Ghost Stories posted by me in the past:
1. Most feared Numbers 666 and 13
2. Aladdin’s Magic Lamp and Tamil saints
3. கடலில் தோன்றிய மர்மத் தீ
4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
5. Largest Story Collection in the World
5.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்
6.டெல்பி ஆரூடமும் குறிசொல்லுவோரும்
7.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்
8. Mysterious disappearance of Great Hindu saints
9. Time Travel by Two Tamil Saints
10. Do Hindus believe in E.T.s and Alien Worlds?
 
We also has ghost, we call it as thunder unexpected blown on innocent "Price hike" Every second we fear that next second there will be a huge price hike announcement fro Government that will reflect in a common man. It will be pre dated say from 1st Jan 2000!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top