சிராத்த விதி முரைகள்>
ப்ராமணன் பிறக்கும் போதே மூன்றூ கடன்கலூடன் பிறக்கிறான் என்றூ வேதம் கூறூகிரது. பிரம்மசர்ய நிலையில் வேதாத்யானம் மூலம் ரிஷிகலீன் கடனையும் ,கிரஹஸ்த நிலையில் யாகம் முதலியவைகளால் தேவர் கடனையும், நல்ல ஆண் சந்ததியை அடைவதால் அவர்கள் மூலம் பித்ருக்கள் கடனையும் போக்கி கொள்கிறான்.
பித்ருக்கள் கடன் சிராத்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு கார்ய மூலமாகத்தான் தீரும். புண்ய பூமியில், யோக்கியதை உள்ள ப்ராமணர் களீடத்தில், சாஸ்த்ர சம்மதமான, நியாயமான முரையில் சம்பாதிக்கபட்ட திரவ்யங்களுடன் , சிரத்தையுடன், விதிப்படி, பித்ருக்கலை உத்தேசித்து எந்த காரியத்தில் கொடுக்க படுகிறதோ நியமத்துடன் ஆயுள் முடியும் வரை ஒவ்வொரு வருஷமும் செய்யும் கர்மாவிற்கு சிராத்தம் என்றூ பெயர்.
நம்பிக்கை இல்லை என்றூ செய்யாமல் விட்டால் கோடி ஜன்மங்கள் மிகவும் கீழ் நிலையை அடைகிறான்.என்கிறது தர்ம சாஸ்திரம்..
சிராத்த கர்மா செய்பவன் வியாதி இல்லாதவனாய், ஆயுள்< புத்ரன், பெளத்ர ஸந்ததியுடன் கீர்த்தி, தன, தான்ய ஸம்வ்ருத்தியுடன், புஷ்டி, பலம், ஸூகம், இதர தனங்களூடன் இங்கு வாழ்ந்து, பரலோகத்திலும் உயர்ந்த ஸ்திதி அடைவான்
அவர்கள் இறந்த தமிழ் மாத திதியில் .சிராத்தம் செய்யாவிடில் இறந்தவர்கள் ஆத்மா கஷ்டப்படும். கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நம் குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும். சந்ததி வ்ருத்தியாகாது.
இவர்கலை ரக்ஷிக்கும் விச்வேதேவர்கள் சாபம் கொடுப்பார்கள் தக்ஷ ப்ரஜாபதியின் பெண், விச்வா என்றவளூக்கு பிறந்த புத்ரர்கள் தான் விச்வே தேவர்கள் இவர்கள் சிராத்தத்தை எப்போதும் ரக்ஷிக்க ப்ரமாவினால் அனுப்ப பட்டவர்கள்.
8 வசுக்கள்: 11 ருத்திரர்கள்:12 ஆதித்யர்கள்;12 விசுவேதேவர்கள் சிராத்தத்தை காக்க நியமிக்கபட்டவர்கள்.. .
தேவ பித்ருக்களீல் வசுக்கள் பித்ருக்கள், ருத்ரர்கள் பிதாமஹர்கள் ஆதித்யர்கள் ப்ரபிதாமஹர்களாகவும் சாஸ்திரத்தில் சொல்லபட்டிருக்கிறது.
ப்ராஹ்மனண் சாப்பிடாததை தேவ பித்ருக்கள் சாப்பிடுவதில்லை. பித்ருக்களீன் த்ருப்திக்காகவே ப்ராஹ்மண போஜனம். நாம் தேவர்களூக்கும் பித்ருக்களூக்கும் கொடுக்கும்
ஹவ்ய கவ்யாதிகலை ஏற்றூக் கொள்வதற்காகவே ப்ராஹ்மனன் சிருஷ்டிக்க பட்டான்.. நமக்கு ஒரு வருஷம் தேவதைகலுக்கு ஒரு நாள்.. இந்த சிராத்தம் பார்வணமாகத்தான் செய்ய சொல்லி இருக்கிறது
அதாவது (பித்ரு, பிதாமஹ, ப்ர்பிதாமஹர்கலை உத்தேசித்து ஹோமம், ப்ராஹ்மன போஜனம், பிண்டதானம்)… ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்ய சாஸ்திரம் சொல்லவில்லை.
மனைவி மாதவிடாயாக இருந்தாலும் உரிய திதியில் தான் செய்ய வேணடும்.
ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தில் ஹோமம் கிடையாது. ஸங்கல்ப ரூபமாக சிராத்தம் செய்ய வேண்டும். புத்ரனில்லாததால் ஸ்த்ரீகள் செய்யும் சிராத்த விஷயத்தில் மாதவிடாய் குறூக்கிட்டல் ஐந்தாவது நாளீல் செய்யலாம்.
ஸங்கல்ப சிராத்தத்தில் அர்க்கியம், ஆவாஹனம், ஹோமம், விகிரான்னம், பிண்ட தானம் இல்லை.
நான்காவது நாளே சிராத்த திதியாக வந்து விட்டால் அன்றூ காலை மறூபடியும் சிராத்த சுத்திக்காக 10-30 மணீக்கு மேல் ஸ்நானம் செய்து பஞ்ச கவ்யம் சாப்பீட்டு ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தை ( கை பில் மூலமாக) நடத்தலாம்.
க்ரஹணங்கள் குறூக்கிட்டால் அன்றூ முழுவதும் உபவாசம் இருந்து மறூ நாள் செய்யலாம்
சூர்ய கிரஹணம் கர்ம காலத்திற்கு முன்பே மோக்ஷமானால் அன்றூ சிராத்த காலமான அபராஹ்னத்தில் செய்ய வேண்டியது.
சிராத்த தினத்தில் சமையல் ஆரம்பித்த பிறகு தீட்டு கேள்விபட்டால், கர்த்தா சிராத்தத்தை முடித்து விட்டு தீட்டு காக்கவும்.
ப்ராஹ்மணர்கலை வரித்த பிறகு, ப்ராஹ்மணர்களூக்கு தீட்டு தெரிந்தால் , தாம்பூலம் வாங்கி கொண்டு எழுந்த பிறகே அவர்களூக்கு தீட்டு தொடரும்..
பித்ரு கர்மாக்கள் மூன்றூ விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அமாவாசை. , ப்ரத்யாப்தீகம், மஹாளயம் இப்படி நியதமான காலத்தில் விதிக்கப்பட்டது நித்யம் எனவும்,.
ஏகோதிஷ்டம், சபிண்டிகரணம் மாசிகம், சோதகும்பம் க்ரஹணம், தீர்த்த சிராத்தம் ஸங்கிரமணம் முதலிய நிமித்தத்தில் விதிக்கப்பட்டது நைமித்திகம் எனவும், நம்முடைய இஷ்ட ஸீத்திக்காக செய்வது காம்யம் எனவும் படும்= நாந்தி..=காம்ய சிராத்தம்.
அமாவாசை அன்றூ ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்ய நேர்ந்தால் சிராத்தம் செய்த பிறகே அமாவாசை தர்பணம் செய்ய வேண்டும்.. அமாவாசை அன்றூ ஸோதகும்பம்,/அல்லது மாசிகம் வந்தாலும் முதலில் சோதகும்பம்/அல்லது /மாசிகம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.
ஸோதகும்ப சிராத்தம் தினமும் வருடம் 365 நாட்கலூம் செய்ய வேண்டியது.
(நித்யம்) . மாசிகம் மாதத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியது.. இவை இரண்டும் ஒரே நாளீல் வந்தால் மாசிகம் மாத்திரம் செய்தால் போதும்..
இங்கு ஒன்றூ செய்தாலே’ ப்ரஸங்காத்’ மற்றோன்றூம் செய்ததாக ஆகி விடும்.இது தக்ஷ மஹரிஷியின் வாக்கியம்...ஓரே நாளீல் ஒரே கர்த்தா ஒரே பித்ருக்கலை உத்தேசித்து இரண்டு சிராத்தங்கள் செய்ய தேவையில்லை.
பெற்றோர்கலின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பும் ஒன்றாக வந்தால் முதலில் மாத பிறப்பு தர்பணம் பிறகு சிராத்தம்.
அமாவசையும் மஹாளயமும் ஒன்றாக ஸம்பவித்தால் முதலில் அமாவாசை பிறகு மஹாளயம்.
தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்றோருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளீல் நேர்ந்தால் முதலில் வருஷ சிராத்தம் செய்துவிட்டு பிறகுதனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.
விபத்தில் பெற்றோர் காலமானால் ஒரே நாளீல் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். முதலில் தகப்பனாருக்கு; பிறகு தாயாருக்கு. அன்னம், பாயசம் மட்டும் தனியாக செய்ய வேண்டும் .இங்கு யார் முதலில் இறந்தார்கள் என பார்க்க வேண்டாம்
ஆனால் தீட்டு அல்லது திதி த்வயத்தாலோ ஒரே நாளீல்செய்யும்படி நேர்ந்தால் தனி தனி சமைலாக செய்து தந்தைக்கும் பிறகு தாய்க்கும் சிராத்தம் செய்ய வேண்டும்.. கர்த்தாவின் கோத்திர ப்ராஹ்மணர்கலை பித்ருக்களாக வரிக்க கூடாது... வேதம் முழுவதும் கற்றவரும் , அனுஷ்டானமுள்ள.வருமான ப்ராஹ்மனர்கலை
சிராத்தத்தில் வரித்து போஜனம் செய்விக்க வேண்டும். இதனால் கர்த்தாவின் பித்ருக்களூக்கு 7 தலை முரை வரை த்ருப்தி உண்டாகிறது
தாயார் அல்லது தகப்பனார் சிராத்தம் மஹாளய பக்ஷத்தில் வந்தால் இவர்கள் சிராத்தம் செய்த பிறகுதான் மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் கூட்டு குடும்பம் இல்லாததால் முதலில் இளயவன் மஹாளயம் செய்த பிறகு தான் மூத்தவன் மஹாளயம் செய்ய வேண்டும்.
சகோதரர்கள் தனிதனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும்.. . ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும்..
சிராத்தம் ஸம்பூர்ணமாவதற்கு முக்கியமாக தேசம் ,காலம், தகுதியுள்ள ப்ராஹ்மணர்கள்.,திரவ்யம், அக்கரையுள்ள கர்த்தா,, சிராத்தம் செய்யும் ஹோம குண்டத்தில் நிறப்ப பட்ட மண் தெற்கு பக்கம் சரிந்து இருக்க வேண்டும்..
சிராதத்திற்கு வரிக்கபடும் ப்ராஹ்மணர் வேதம் முழுவதும் அறீந்தவராகவும், மனைவியோடு கூடியவன், அனுஷ்டாதா, அங்கஹீனம் இல்லாதவன் (ஆறூ விரல்கள் உட்பட ) .( குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், சொத்தை நகம் முதலியன இல்லாதவன் ) இவர்கலை தர்ம சாஸ்திரம் முதல் பக்ஷமாக கூறூகிரது..
பிராமணரின் மனைவி 6 மாததிற்கு மேல் கர்பமாய் இருந்தாலும்,மாத விடாயாக இருந்தாலும், அவருக்கு தீட்டு இருந்தாலும் அவரை வரிக்ககூடாது.
வரிக்கபடும் இரு ப்ராஹ்மணர்கள் சகோதரர்களாக இருந்தாலும், அல்லது, தகப்பன், மகனாக இருந்தாலும் இவர்கலை சேர்த்து வரிக்ககூடாது.
இரண்டாம் பக்ஷமாக யோக்கியதை உள்ள பந்துகலையும், , விசுவேதேவ ஸ்தானத்திற்கு வேத அத்யயனம் செய்த ப்ரஹ்மசாரியும், த்ருஸூபர்ணம், மதுத்ரயம் மந்த்ரங்களாவது தெரிந்தவனையும், ப்ரதி வசனம் சொல்ல தெரிந்தவனும் வரிக்கலாம்..
கடைசீ பக்ஷமாக காயத்ரீ மந்த்ரம் ஜபம் மட்டிலுமாவது செய்யும் ப்ராஹ்மணணாக இருத்தல் அவசியம்.
: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01
முதல் நாள் இரவே முடிந்தால் ப்ராஹ்மணர்கள் இரவு சாப்பாடு முடிந்த பின் அவர்கள் வீட்டிற்கு சென்றூ உபவீதியாய் விசுவேதேவரையும் ,ப்ராசீனாவீதியாய் பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரையும் வரிக்க்வேண்டும் என்றூ தர்ம சாத்திரம் கூறூகிரது.
அப்படி வரிக்கப்பட்டவர் சிராத்தம் முடியும் வரை நியமத்தை கடை பிடிக்க வேண்டும்
.விஷ்ணூ இல்லாத சிராத்தம் நஷ்டம் என்றூ தர்ம சாஸ்திரம் கூறூகிறது ஆகையால் ப்ரத்யக்ஷமாக ப்ராஹ்மனர் அந்த இடத்தில் வைக்க முடியாவிடில் இலையாவது போட்டு பரிமாரலாம்.
முடிந்தவுடன் இதை பசு மாட்டிற்கு கொடுக்கலாம் . ஸம்ப்ரதாயப்படி ஒரு ப்ரஹ்மசாரியை சாப்பிட சொல்லும் பக்ஷத்தில் பித்ரு சேஷமான அன்னம், முதலிய வஸ்துக்கள் போடக்கூடாது.
கர்த்தா சிராத்தத்திற்கு முதல் நாள், அன்றூ, மறூநாள் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்
சிராத்த தினத்தன்றூ கோபம் கூடாது. பொய் சொல்லக்கூடாது .தாம்பூலம் போட கூடாது. அப் ப்ராமணரிடம் பேசக்கூடாது. பகலில் தூங்ககூடாது.டூத் பிரஷால் பல் தேய்க்கலாம்.. வேப்பங்குச்சி, அரசங்குச்சிகலால் பல் தேய்க்க வேண்டாம்.
பல் குச்சியால் பல் தேய்பதால் ரத்தம் வெளீயாகலாம். பித்த நீர் சுரந்து பசி ஏற்படலாம் இவைகளை தடுப்பதற்காக பல் தேய்க்க கூடாது .. ஆதலால் பற்கலை கை
விரல்களால் நன்றாக குழப்பி 12 தடவை வாய் கொப்பலீக்க வேண்டும்.அன்றூ காலையில் காபி கூட சாப்பிட கூடாது. அன்றூ ஒரே வேலை சாப்பாடு தான். அன்றூ இரவு பாலும் பழமும் தான் சாப்பிட. லாம்..பக்ஷணங்கலும் இரவில் சாப்பிடக்கூடாது..
அன்றூ வேத அத்யயனம் செய்ய கூடாது. சிராத்தத்திற்கு உரிய தானங்கலை தவிர மற்ற தானங்கள் கொடுப்பது வாங்குவது கூடாது. சிராத்தத்தன்றூ காலை நித்ய ஸ்நானம், ஸந்தியா வந்தனம், சமிதாதானம்// ஓளபாசனம்
மாத்யானிகம் இவைகலை தவிர வேறூ தேவ கார்யங்கள் செய்யக் கூடாது.
.சிராத்தத்திற்கு மறூநாளூம் க்ஷவரம்,,,எண்னைய் தேய்த்து குளீப்பது,,பரான்னம்; ப்ரதிக்ரஹம் உடலுறவு கூடாது. மாத்யானிக ஸ்நானம் செய்யுமுன்னர் மல ஜல விசர்ஜனம் செய்து விட வேண்டும்,
சிராத்தம் ஆரம்பித்த பிறகு முடியும் வரை மல ஜல விசர்ஜனம் செய்யக்கூடாது. அடக்கி கொண்டும் சிராத்தம் செய்ய கூடாது
கர்த்தா கன்ணீர் விடாதவனும், கடுமையாக பேசாமலும், உற்றூ பார்க்காமலும்,, கோபம் இல்லாதவனும்,வேறூ இடத்தில் மனம் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்..
தேவ பூஜை, ப்ருஹ்மயஞ்கம் சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும். சிராத்தம் உபவாசம் அநுஷ்டிக்கும் நாளீல் வந்தால் சிராத்தம் முடித்து பித்ரு சேஷம் அவசியம் சாப்பிட வேண்டும்
யாசகம் வாங்கிய பொருளால் சிராத்தம் செய்யக்கூடாது. இரும்பு பாத்ரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் சமையலுக்கோ பரிமாரவோ உபயோகபடுத்த கூடாது. .சமையல் செய்யும் பாத்திரங்கலை நன்றாக தேய்த்து
அலம்பிய பிறகு உபயோகபடுத்தவும் .ப்ராஹ்மணர்களூக்கு பரிமாறூம்போது பதார்த்தங்கள் சூடாக இருக்க வேண்டும். இரண்டாவது முரை வேக வைக்க கூடாது. சிராத்த முதல் நாள் எந்த பக்ஷணமும் தயார் செய்து வைத்து , சிராத்தத்தில் போடக்கூடாது. வீட்டில் கோலம் மணீஓசை அன்றூ கூடாது.
பெற்றோருக்கு ஆப்தீகம் முடியும் வரை எங்கும் சிராத்தம் சாப்பிட போக கூடாது. சிராத்தம் செய்து வைக்கலாம்.
போக்தா:_=-வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் முதல் நாளோ அன்றோ மறூநாளோ வேறூ எங்கும் சிராத்தம் சாப்பிடக்கூடாது.
சிராத்தம் சாப்பிட்ட நாளீல் சிராத்த சாப்பாட்டிற்கு முன்போ அல்லது பின்போ
சிராத்த சாப்பாட்டை தவிர மறூபடியும் பால், காபி உள்பட எதையும் சாப்பிடாமலிருத்தல், நீண்ட தூரம் ப்ரயாணம் செய்யாமலிருத்தல்;; அதிகமான சுமையுள்ள பொருட்கலை சுமக்காமலிருத்தல்;
சிராத்தம் சாப்பிட்ட நாள் முழுவதும் வேதம், சாஸ்திரம், புராணம் போன்றவற்றை சொல்லாமலும், சொல்லி கொள்ளாமலுமிருத்தல்; அன்றூ முழுவதும் இந்திரிய கட்டுபாட்டுடன் தனியாக வசித்தல்;;
சிராத்தம் சாப்பிடும் முன்போ பின்போ எந்த விதமான தானமும் வாங்காமலிருத்தல் ;ஸந்தியா வந்தனத்தை விஸ்தாரமாக செய்யாமலிருத்தல்; ஒளபாசனத்தை தவிர வேறூ எந்த ஹோமமும் செய்யாமலிருத்தல்.; நிர்ணய சிந்து-286.
சிராத்த சாப்பாடு ஜீரணமாகும் வரை பித்ருக்கள் ஸூக்ஷமமாக சாப்பிட்ட நபரிடம் இருப்பதாக ஐதீகம்..
சிராத்தம் சாப்பிட்ட நாளன்றூ மாலையில் வலது கையில் சிறீது சுத்தமான ஜலத்தை எடுத்துக்கொண்டு 10 முரை காயத்ரி ஜபம் செய்து விட்டு அந்த ஜலத்தை குடித்து விட வேண்டும்.
. பிறகு தான் சுத்தி ஆகி ஸாயம் கால சந்தியாவந்தனம், ,ஒளபாசனம் செய்யலாம் என்கிறார் உசநஸ் என்னும் மஹரிஷி.
பித்ருக்கலை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்றூ முரையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு பித்ருக்கலை த்ருப்தி செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்பட்டு நீண்ட ஆயுள், அழியா புகழ்,,உடல் வலிமை.,செல்வம், பசு, தான்யங்கள், சுகம் ஆகியவற்றை அனுக்கிரஹிக்கிறார்கள் என்கிறது யம ஸ்ம்ருதி,.
சிராத்தம் சாப்பிட்ட அன்றூ இரவும் சாப்பிடக்கூடாது அத்யயனம் செய்யக்கூடாது தூர தேசம் போகக்கூடாது. ப்ரஹ்மசர்யம், வேறூ இடத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காமல் இருப்பது
அன்றூ காலை க்ஷவரம் செய்து கொள்ளாமல் இருப்பது இவைகலை கடை பிடிக்க வேண்டும்..வேறூ எந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது. தாம்பூலம் போடலாம்.
சிராத்த ப்ராஹ்மணர் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது.
ராக்ஷஸர் முதலியவர்கலை துரத்துவதற்காக ப்ராஹ்மணர் சாப்பிடும்போது அபிச்ரவணம் மற்றவர்கலை கொண்டு சொல்லசெய்ய வேண்டும்.. அதற்காக சில ப்ராஹ்மணர்கலை வரிக்க வேண்டும்..
ருக் வேதம், சுக்ல யஜுஸ்: க்ருஷ்ண யஜுஸ் ஸாம வேதம் இவைகலீல் அபிசிரவண மந்திரங்கள் உள்ளன.. வசதி உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லலாம்.. அல்லது அவர்களது வேத அபிசிரவண மந்திரம் சொல்ல ஒருவரையாவது வரச்சொல்லலாம். .எத்தனை பேர் வேன்டுமானாலும் சொல்லலாம்.
.
அவர்களூக்கு தக்ஷினை, சுண்டல், பழம் கொடுக்க வேண்டும்.
அபிசிரவண மந்திரங்கள் சொல்ல வேண்டியவை- அபிசிரவனம்-ப்ராஹ்மணர்கள் போஜனம் செய்யும் போது தானோ அல்லது மற்றவர்கலை கொண்டோ செய்ய சொல்ல வேண்டும்.
காயத்ரீ மந்த்ரம் மும்முரைசொல்லவும், புருஷஸூக்த அனுவாகங்கலையும்,
க்ருனுஷ்வபாஜ; ரக்ஷோஹணோ; ஸோமாய பித்ருமதே; உசந்தஸ்த்வா
ஹவாமஹே; பக்ஷேஹிமாவிச; த்ருவாஸீதருனா; அக்னஉததே; சிரோவாஏதத் யஞ்யஸ்ய;;அஸாவாதித்யோஸ்மின்; ; ஸந்ததிர்வா; ; ஏகவிம்சஏஷபவதி ;இந்த்ரோவ்ருத்ரகும்ஹத்வா ;வைச்வதேவநவை;; அக்னயதேவேப்யஹ;
உசாந்தஸ்த்வாஹவாமஹே; ஆநோ; அயம்வாவ்யஹ பவதே; உசன்ஹவைதகும்ஹைதமேகே; யோப்ரத்மாமிஷ்டகாம்; ருசாம்பாசி; பித்ரு ஸூக்தம்.
முதலிய மந்த்ரங்கலையும், கங்காவதரனம்;, இதிஹாஸம் முதலியவையும் சொல்லலாம்.
.
பிண்டதானம் செய்து கர்மா முடிவதற்குள் ஹோமம் செய்த அக்னி அணைய கூடாது. இது முக்யம். அனைந்தால் அன்றூ உபவாசம் இருந்து மறூநாள் சிராத்தம் செய்ய சொல்லியிருக்கிறது.
ஏகோதிஷ்டம், சபிண்டீகரணம்.,, மாசிகம், அநு மாசிகம், நாந்தி கயா சிராத்தம் மஹாளயம் முதலியவைகளூக்கு அபிஸ்வரணம் கூடாது.
சிராத்தத்தில் அன்னத்தால் ஒரு மாதமும், நெய்யினால் ஒரு வருஷமும், கோதுமையினால் மூன்றூ வருஷமும், தேன் சேர்ப்பதால் அளவில்லா காலம் பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள்.
: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் -1
பாத ப்ரக்ஷாளனம்;
பாத ப்ரக்ஷாலானத்திற்காக வீட்டின் வாசப்ரதேசத்தில் எதிரில் விச்வேதேவருக்கு 12 அங்குலம் சதுரமாகவும், அதற்கு தென்புரத்தில் ஒரடி இடைவெளீ விட்டு பித்ரு மண்டலத்திற்கு 12 அங்குலம் வட்டமாகவும் பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும்.
விச்வேதேவ மண்டலத்தில் அக்ஷதையும், தர்பம் கிழக்கு வடக்கு நுனியாகவும், பித்ரு மண்டலத்தில் எள்ளூம், தர்பம் தெற்கு நுனியாக போடவும்.
முதலில் விச்வேதேவருக்கும், பிறகு பித்ருக்கலையும்,பிறகு விஷ்ணூவை சதுர மண்டலத்தில் கனுக்காலை அலம்ப வேன்டும் .ப்ராஹ்மனர்களீன் கணூக்காலுக்கு மேல் அலம்ப கூடாது .பின்பாகம் சரியாக அலம்ப வேன்டும் .உள்ளங்காலை அலம்ப கூடாது. நின்றூகொண்டு அலம்பகூடாது. பவித்ரம் காதில் வைத்துகொண்டு குந்திட்டு உட்கார்ந்து அலம்ப வேண்டும்.
சந்த்னம் பூசும்போது பவித்ரம் கையில் இருக்ககூடாது. சந்தனம் கொடுக்கும்போது இருக்கலாம்.சந்தனம் பூசி விடுவதும் சாஸ்திர சம்மதமே
.
கோமயத்துடன் கூடிய நெய்யை ப்ராஹ்மணர்களீன் அடி கால்களீல் பூசினால் அவனது பித்ருக்கள் கல்ப காலம் முடியும் வரை அம்ருதத்தை அடைகிறார்கள் என்றூ ஸ்ம்ருதி சொல்கிறது. கால் கட்டை விரல் உள்ளங்கால் பக்கம் பூசினால் போதும்.
. ஸ்தர்னத்தில் வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் பாத ப்ரக்ஷாளனத்தின் போது பத்னி விச்வேதேவர் கால் அலம்பும் போது கர்த்தாவுக்கு இடது பக்கத்திலும்,
பித்ருக்களூக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கத்திலும் இருந்து ஜலம் விட வேண்டும்.
விஷ்ணூவுக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவிற்கு இடது.பக்கத்திலிருந்து ஜலம் விட வேண்டும்..
ப்ரமாணம் நிர்ணய ஸீந்து==பக்கம் 1528;1529 வால்யூம்-3.
வைத்தினாத தீக்ஷீதீயம்=சிராத்த காண்டம் உத்தர பாகம்.பக்கம் 445ல் பித்ருக்களூடைய பாதப்ரக்ஷாளன ஜலத்தை தெற்கு முகமாயிருந்து வெளீயில் விட வேண்டும் என்றூ இருக்கிறது.
பிறகு கர்த்தா வடக்கு நோக்கி ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு ப்ராஹ்மணர்கள் ஆசமனம் செய்ய வேண்டும்.
விசுவேதேவர் கால் அலம்பிய ஜலமும் பித்ரு ப்ராஹ்மணர் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..நடுவில் ஒரு துணீயோ மணலோ போடவும்.
அல்லது பித்தலை தாம்பாளத்தில் கால் அலம்பிய பின் வெவேறூ இடங்கலீல் ஜலத்தை கொட்டவும்.
ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ரஹ்மணர் காலை, பாத்திரத்தை , அன்னத்தை அபிகாரம் செய்யாதே.
விசுவேதேவரின் கால் அலம்பிய ஜலத்தை கர்த்தாவும் மனைவியும் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளலாம்.
.
ஆவாஹனம்,, அர்க்கியம், ஸங்கல்பம், பாத்யம், சாப்பிடும்போதும், திலோதகம், அக்ஷையோதகம், சொல்லும் போதும் ,பிண்ட தானத்திலும், கோத்ர நாமங்களை தவறாது சொல்லித்தான் ஆகவேண்டும்.
வைத்தினாத தீக்ஷிதீயம் ச்ராத்த காண்டம் உத்தர பாகம் பக்கம் 451-452 ஆதாரப்படி ஆசமனம், அக்னிமுகம், ஆஜ்ய பாகங்கள்< ஆகார ஸமித்துகள் ,ப்ரதக்ஷிணம், பின் செல்வது, ப்ராயசித்த ஹோமம்,ஸ்விஷ்டக்ருத் ஹோமம், செய்யும் போதும், நமஸ்காரம், அபிசிரவனம் சொல்லும் போதும்,
.உபவீதியாகவே செய்ய வேண்டும்..
ஆஸனத்திற்காக கொடுக்கும் தர்பைகள் கையில் கொடுக்க கூடாது. விசுவேதேவருக்கு வலது பக்கத்திலும், பித்ருக்களூக்கு இடது பக்கத்திலும் உட்காருமிடத்தில் போட வேண்டும்..
அர்க்கிய பாத்திரத்தை ப்ராஹ்மணர்களீன் அருகில் வைத்து தெற்கு நுனியாக பவித்ரத்தை வைத்து , ஜலம் நிரப்பி,எள்லை போட்டு வைக்க வேண்டும். திறந்து வைக்க கூடாது. தூக்கவும் கூடாது..உத்தரணீயால் எடுத்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்..
குதப காலத்தில் ( 12 மணீக்கு மேல் ) தர்ப்பம், கறூப்பு எள் இவைகலை உபயோகிப்பது அதிக பலனை தரும் என்றூ தர்ம சாஸ்த்ரம் கூறூகிறது.
ஆபோஜனம் போடுவதற்கு கங்கா ஜலம் சிறந்தது..
துளசி எப்போது சிராதத்தில் சிரசில் தரிக்கபட்டதோ அப்போதே கர்த்தா, போக்தா; பிதா மூவரும் விஷ்ணூ லோகத்தில் சிறப்பை அடைகின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம்...
சிராதத்தில் வஸ்திரம் கொடுக்காதவன் ஏழு ஜன்மங்கள் தரித்ரனாக பிறப்பான் என்கிறது தர்ம சாஸ்திரம்…பூணலாவது கொடுக்க வேண்டும்.
வித்யை, அனுஷ்டானம் இவைகளீல் சிறந்தவரை முதலில் விசுவேதேவர் ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும். மற்றோருவரை பித்ரு ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும்.
போஜனத்திற்கு விசுவேதவரை கிழக்கு முகமாகவும், பித்ரு ஸ்தானத்தை வடக்கு முகமாகவும், விஷ்ணூ ஸ்தானத்தை கிழக்கு முகமாகவும் உட்கார வைக்கவும்..
சிராத்தம் முடியும் வரை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளகூடாது.. கர்த்தா மற்றூம் கர்த்தாவின் மனைவி பரிமாறூவது சிலாக்கியம்....இரண்டு கைகளாலும் தட்டில் கொண்டு வந்து கரண்டி சப்தமில்லாமல் கரண்டி மூலமாக பரிமார வேண்டும். மர கரண்டிகளால் பரிமாரலாம்..
இலையில் அபிகாரம் செய்தவுடனே கர்த்தாவும்,போக்தாவும் பூராவும் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை பரிமாறூவது நீடிக்க வேண்டும். சீக்கிரம் பரிமாரி முடித்தால் ப்ராஹ்மணர்கள் மந்திரங்கள் பூராவும் சொல்ல வாய்ப்பு இல்லை.
.போஜனத்திற்கு பலாச இலை உசிதம். வாழை இலை நுனியோடு கூடியது, அகலமுள்ளது .கிழியாதது நரம்பை கிழிக்காமலும், இரண்டு அடி நீளமுள்ளது போடலாம்..இரண்டு இலைகள் ஒவ்வொருவருக்கும் போட வேண்டும். சிலர்
விஷ்ணூவிற்கு ஒரு நுனி இலை .போடுகிறார்கள்.விசுவேதேவருக்கு 2, பித்ருவிர்கு 2; மஹாவிஷ்ணூவிற்கு 2 தொன்னைகள்>. மொத்தம் 6 தொன்னைகள்.ஒரு தொன்னயில் பருப்பும் மற்றோரு தொன்னயில் நெய்யும் விட வேண்டும்.நரம்புக்கு கீழே அன்னம், பாயசமும் நரம்புக்கு மேலே காய், கனி, .பக்ஷணங்கள் பரிமாற வேண்டும்
முதலில் விசுவேதேவருக்கும் அடுத்த்து பித்ருவிற்கும், பிறகு விஷ்ணூவிற்கும்.பரிமார வேண்டும்..இதே வரிசையில் தான் முதலிலிருந்து கடைசி வரை ஞாபகமாக பரிமாரவும்.. பரிமாரிகொண்டு வந்த வஸ்துக்கலை கரண்டியில் எடுத்தது முழுவதும் அந்த இலைக்கே பரிமார வேண்டும் .மிச்சம் வைத்து மற்றோரு இலைக்கு பரிமாரக்கூடாது..
போஜனத்தில் ஒருவருகொருவர் எச்சில் பட்டுவிட்டால் அந்த இலையை தொடாமல் எடுத்துவிட்டு பசுஞ்சாணீயால் சுத்தம் செய்து பிறகு வேறூ இலையை போட்டு பரிமாரி பரிசேஷனம் செய்து சாப்பிட வேன்டும்..
போக்தாவிற்கு சாப்பிடும்போது ஏதாவது அன்ன பானம் தேவைபட்டால் ப்ராஹ்மணர்கள் கை ஜாடையால் தான் காண்பிக்க வேண்டும். அதே மாதிரி வேண்டியதில்லை என்றாலும் வாயினால் சொல்லக்கூடாது.
உப்பு முதலியவை அதிகம், குரைவு இருந்தாலும் அதை நன்றாக ஆக்குவதர்க்கு மறூபடியும் கேட்க கூடாது. பரிசேஷனம் முடியும் வரை இடது கை விரலாலும் , தீர்த்தம் சாப்பிடும் போது வலது கை விரலாலும் போஜன இலையை தொட்டுக்கொன்டு இருக்க வேண்டும்..
சாப்பிடுபவர்கள் அன்னத்தின் குணத்தை சொல்லக்கூடாது.. கையில் எடுத்த பதார்தத்தை முழுவதும் சாப்பிட வேண்டும். கொஞ்சம் சாப்பிட்டு மீதியை இலையில் வைக்க கூடாது. அதே மாதிரி எடுத்த தீர்த்தம் குடித்து மீதி இருந்தால் அதை மறூபடியும் உபயோகிக்க கூடாது.
பாயசம், நெய், பால், தயிர், தேன் இவைகலை மீதி வைக்காமல் சாப்பிட கூடாது. அன்னத்தை பிறர் பார்கக்கூடாது. உச்சிஷ்டமான மீதி பதார்த்தங்கள் இறந்த உபநனமாகாதவர்களூக்கும், ,குல ஸ்த்ரீகளூக்கும், முக்தியடைந்த ஸந்யாஸீகளூக்கும் பாகமாக அடைகிறது. இவர்கள் உச்சிஷ்டபாகி என்றூ அழைக்க படுகிறார்கள்.. உட்காரும் ஆஸனத்தில் பாதம் படகூடாது.
போஜனம் சாப்பிடும்போது மல மூத்ர விசர்ஜனத்திற்காக செல்லக்கூடாது. அடக்கி கொண்டும் இருக்க கூடாது. ஸ்நானம் செய்யு முன்னரே மல ஜல விசர்ஜனம் செய்து கொள்ள வேண்டும்.
விசுவேதேவ ப்ராஹ்மணர் சாப்பிடும்போது வாந்தி எடுத்தால் இலையை எடுத்து விட்டு லெளகீகாக்னி ப்ரதிஷ்டை செய்து , அவருடைய ஸ்தானம்,நாமம், கோத்ரம் , ஆசனம் இவைகலை சொல்லி அன்னத்தால்
அக்னியில் ப்ரானாயஸ்வாஹா,முதலிய 5 ஹோமங்கலை 6 ஆவர்த்தி (மொத்தம் 30 ஆவர்த்தி) ஹோமம் செய்து , பிறகு உதானாயஸ்வாஹா, ஸமாநாயஸ்வாஹா என்ற இரண்டு மந்திரங்கள் சொல்லி 2 ஆவர்த்தி ஹோமம் ( மொத்தம் 32 ஆவர்த்தி ))ஹோமங்கள் செய்து சிராத்த சேஷத்தை முடிக்க வேண்டும்..
இதுவே பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர் வாந்தி எடுத்தால்.மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்.
பிண்ட தானத்திற்கு பிறகு வாந்தி ஏற்பட்டால் இந்திராய ஸோம என்ற ஸூக்தத்தை ஜபிக்கவும்..
வாயஸ பிண்டத்தை காக்கை மட்டும் எடுக்கும் படியாக பார்த்து கொள்ளவும் வேறூ எந்த ப்ராணீகளூம் தொடக்கூடாது. இதராளூம் பார்கக்கூடாது..அப்படி ஏற்பட்டால் அன்றூ உபவாசம் இருந்து மறூ நாள் மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
போஜனத்திற்கு பிறகு முதலில் பித்ரு வர்க்க ப்ராஹ்மணருக்கும்,பிறகு விசுவேதேவருக்கும் பிறகு மஹா விஷ்னூவிர்க்கும் கை கால் அலம்ப ஜலம் கொடுக்க வேண்டும்.. இவர்கள் ஆசமனமும் இதே க்ரமத்தில் தான் செய்ய வேண்டும்.
பிண்டதானம் செய்யுமிடம் போஜன இலையில் படாத படி சமீபத்தில் செய்யவும்.
.
போஜனம் முடிந்து அந்த இலைகளை தானோ புத்திரனோ ஸ்வஸ்தி வாசனத்திற்கு முன் அவச்யம் நகர்த்த வேண்டும். ஸ்த்ரீகள், சிறூவர்கள் இதை செய்யக் கூடாது. பிண்ட தானத்திற்கு பிறகு தான் ஸ்தல சுத்தி செய்ய வேண்டும்.
பிண்ட தானத்திற்கு பிறகு கர்த்தா சிராத்தான்னத்தை சாப்பிடுவதோ அல்லது முகர்வதோ சிராத்தகர்மா அங்கமாகும்..
சிராத்த தினத்தன்றூ பிண்ட தானம் முடியும் வரை அந்த வீட்டில் குழந்தைகளூக்குகூட போஜனம் கூடாது.
கர்த்தா வைஸ்வதேவம் செய்வதானால் சிராத்தம் முடிந்த பிறகு சிராத்த சேஷத்தினாலேயே செய்யலாம்.
பித்ரு சேஷத்தை ஞாதிகள் சாப்பிடலாம். சிராத்தம் முடிந்த பிறகு பிண்டங்கலை பசுவிற்கு கொடுக்கலாம்..அல்லது ஜலத்தில் போட வேண்டியது.. பூமியில் புதைக்கலாம்..