• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தேவி நீயே துணை!

Status
Not open for further replies.
தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

த்வம் வைஷ்ணவீ ச'க்திரானந்த வீர்யா
விச்வஸ்ய பீ3ஜம் பரமாஸி மாயா |
ஸம்மோஹிதம் தே3வி ஸமஸ்தமேதத்
த்வம் வை ப்ரஸன்னா பு4வி முக்திஹேது || (5)

அளவுகடந்த வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே!
உலகத்தின் வித்தாககிய மஹாமாயையும் நீயே!
எல்லாமே உன்னாலேயே மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன!
நீ அருள் செய்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்.

 
தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

வித்3யா: ஸமஸ்தாஸ் தவ தே3வி பே4தா3:
ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகலா ஜக3த்ஸு |
த்வயைகயா பூரித மம்ப3யைதத்
கா தே ஸ்துதி: ஸ்தவ்ய பராபரோக்தி: || (6)

எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே ஆகும். கலையுடன் கூடிய எல்லாப் பெண்களும் உன்னுடைய வெவ்வேறு வடிவங்களே ஆவார்கள். உன்னாலேயே உலகு முழுவதும் நிறைந்து உள்ளதால் நீயே அனைத்துக்கும் ஒரே தாய். துதி செய்வதற்கு உரிய பரமும் அபரமும் ஆகிய வாக்குகளே நீ என்னும் போது, உன்னைத் துதிப்பது எங்கனம் என்று கூறு?
 
தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 7.

ஸர்வ பூ4த யதா3 தே3வி ஸ்வர்க3 முக்தி ப்ர3தாயிநீ|
த்வம் ஸ்துதா ஸ்துதயே காவா ப4வந்து பரமோக்தய : ||

எல்லாமாக நீயே உள்ளாய்! போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும் பரதேவதையும் நீயே! இத்தனை சிறப்புக்கள் உடைய உன்னை எத்தனை சிறப்புடைய சொற்களாலுமே துதிக்க முடியாது.

# 8.

ஸர்வஸ்ய புத்3தி4 ரூபேண ஜனஸ்ய ஹ்ருதி3 ஸம்ஸ்திதே|
ஸ்வர்க்கா3பவர்க3தே3 தே3வி நாராயணி நமோஸ்துதே ||

எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும், புத்தி வடிவிலும் உறைபவளும்; சுவர்க்கத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நாராயணீ தேவிக்கு நமஸ்காரம்.
 
# 9.

கலா காஷ்டாதி3ரூபேண பரிணாம ப்ரதா3யினி |
விச்'வஸ்யோபரதௌ ச'க்தே நாராயணீ நமோஸ்துதே ||


கலை வடிவிலும், காலத்தின் அளவாகிய காஷ்டை முதலிய வடிவங்களிலும் இருந்து கொண்டு,
மாற்றங்களை ஏற்படுத்தி, உலகின் ஒடுக்கத்துக் காரணசக்தியாக இருக்கும் நாராயணிதேவியே நமஸ்காரம்.


# 10.

ஸர்வமங்க3ள மாங்க3ல்யே சி'வே ஸர்வார்த்த2 ஸாதி4கே |
ச'ரண்யே த்ரயம்ப3கே கௌ3ரி நாராயணீ நமோஸ்துதே ||

எல்லா மங்கலப் பொருட்களின் மங்களமாகத் திகழ்பவளே!
எல்லா நன்மைகளையும் தருபவளே!
எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுபவளே!
சரணம் அடைவதற்கு தகுந்தவளே!
மூன்று நயனங்களை உடையவளே!
நாராயணீ தேவியே ! நமஸ்காரம்.
 
# 11.
ஸ்ருஷ்டி ஸ்தி2தி வினாசா'னாம் ச'க்திபூ4தே ஸநாதனி |
கு3ணாச்'ரயே கு3ணமயே நாராயணீ நமோஸ்துதே ||

ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்னும் மூன்று தொழில்களுக்கும் காரண சக்தியானவளே! என்றும் இருப்பவளே! எல்லா குணங்களின் இருப்பிடம் ஆனவளே! குணங்களையே உன் வடிவாகக் கொண்டுள்ளவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 12.
ச'ரணாக3த தீ3னார்த்த பரித்ராண பராயணே |
ஸர்வஸ்யார்த்தி ஹரே தே3வி நாராயணீ நமோஸ்துதே ||

ன்னைச் சரணம் அடைந்த தீனர்களையும், துன்பத்தில் உழல்பவர்களையும் காப்பாற்றுவதையே உன் தொழிலாகக் கொண்டுள்ளவளே! எல்லோர் துயரையும் துடைப்பவளே!
நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 
தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).


# 13.

ஹம்ஸயுக்த விமானஸ்தே ப்3ரஹ்மாணீ ரூப தா4ரிணி |
கௌசாம்ப4: க்ஷரிகே தே3வி நாராயணீ நமோஸ்துதே ||

ஹம்சப் பறவை பூட்டிய விமானத்தில் உறைபவளே ! பிரம்மாணீ வடிவை எடுத்தவளே! கூர்ச்சத்தினால் தீர்த்தத்தைப் புரோக்ஷிப்பவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 14.

த்ரிசூ'ல சந்த்3ராஹி த4ரே மஹா வ்ருஷப4வாஹினி |
மாஹேச்'வரி ஸ்வரூபேண நாராயணீ நமோஸ்துதே ||

மகேஸ்வரியாக வடிவம் எடுத்து திரிசூலத்தையும், சந்திரனையும், விஷ நாகத்தையும் அணிபவளே! விருஷபத்தை வாகனமாகக் கொண்டவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 
தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 15.

மயூர குக்குட வ்ருதே மஹாச'க்தி த4ரோனகே4 |
கௌமாரீ ரூப ஸம்ஸ்தாநே நாராயணீ நமோஸ்துதே ||

கௌமாரீ தேவியாக வடிவம் எடுத்துப் பெரிய வேலாயுதத்தைத் தங்கியவளே! மயிலும், சேவலும் சூழப் பெற்றவளே! பாபமற்றவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 16 .

ச'ங்க சக்ர க3தா3 சா'ர்ங்க3 க்3ருஹீத பரமாயுதே4 |
ப்ரஸீத வைஷ்ணவி ரூபே நாராயணீ நமோஸ்துதே ||

வைஷ்ணவீ தேவியாக வடிவம் எடுத்து சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தியவளே! நாராயணீ தேவியே! அருள் புரிவாய்!
 
# 17.

க்3ருஹீதோக்3ர மஹாசக்ரே த3ம்ஷ்ட்ரோத்3த்4ருத வஸுந்த4ரே|
வராஹ ரூபிணி சி'வே நாராயணீ நமோஸ்துதே ||

தெற்றுப் பல்லில் பூமியையே தூக்கிக் கொண்டு நின்ற வராஹரூபம் தரித்து, பெரிய சக்கராயுதத்தை ஏந்திய மங்கள வடிவினளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 18 .

ந்ருசிம்ஹ ரூபேணோக்3ரேண ஹந்தும் தை3த்யான் க்ருதோத்3யமே |
த்ரைலோக்ய த்ராண ஸஹிதே நாராயணீ நமோஸ்துதே ||

உக்கிரமான நரசிம்ஹ வடிவம் எடுத்துக்கொண்டு, மூவுலகையும் காப்பதற்காக அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 
# 19 .

கிரீடினி மஹாவஜ்ரே ஸஹஸ்ர நயநோஜ்ஜ்வலே |
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்3ரி நாராயணீ நமோஸ்துதே ||

கிரீடம் தரித்து, பெரிய வஜ்ஜிராயுதத்தைத் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் சக்தியே! விருத்திராசுரனை அழித்தவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 20.

சி'வதூ3தி ஸ்வரூபேண ஹததை3த்ய மஹாப3லே |
கோ4ரரூபே மஹாராவே நாராயணீ நமோஸ்துதே ||

கோரமான வடிவமும், பயம் தரும் த்வனியையும் உடையவளே! மிகுந்த பலம் பொருந்திய சிவதூதியின் வடிவில் அசுரர்களை அழித்தவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

 
Matsamah pathaki nasti papagni tvatsama na hi
Evam jnatva Mahadevi yatha yogyam tatha kuru

Oh Great Goddess, there is no greater evil doer than I, and there is
no other that takes away sin as you. With such understanding, do what
is proper ( Give what I deserve).

It could also be interpreted as

Do with me as you please.


Sorry. If I am out of tune with this thread, I will delete the post.
 
Last edited:
Dear Sir,

There is no need to delete the post!

You have spoken the truth about human beings!

Welcome to share more universal truths!

with warm regards, :pray2:
Visalakshi Ramani.
 
# 21 .

த3ம்ஷ்ட்ரா கரால வத3னே சி'ரோமாலா விபூ4ஷணே |
சாமுண்டே3 முண்ட3 மத2னே நாராயணீ நமோஸ்துதே ||

தலைமாலையை ஆபரணமாகத் தரித்துக்கொண்டு, தெற்றுப் பற்களுடன் விளங்கும் சாமுண்டா தேவியே! முண்டாசுரனை வதைத்தவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 22.

லக்ஷ்மி லஜ்ஜே மஹா வித்3யே ச்'ரத்3தே4 புஷ்டி ஸ்வதே4 த்4ருவே |
மஹா ராத்ரி மஹா வித்3யே நாராயணீ நமோஸ்துதே ||

லக்ஷ்மி தேவியாகவும், லஜ்ஜையாகவும், மஹாவித்யையாகவும், சிரத்தையாகவும், புஷ்டி அளிக்கும் ஸ்வதா தேவியாகவும், மஹாராத்ரியாகவும், மஹா மாயையாகவும் நிலை பெற்று விளங்குபவளே ! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

 
Maa Visalakshi Ramani has been doing a wonderful job of translating the Devi Sthudhis of the Devi Mahatmyam.

I would like to add some Prayoga Vidhis for the information of the members.

The sthudhi in the 11th chapter also known as Narayani Sthudhi is considered to be one of the most beautiful poems in the Puranic literature.

The sthudhi actually starts with

Devi prappnarthi hare preesida, preesida matharjagathoakilasya |

and so on. I request Visalakshi Ramani to post the missing verses.

The eleventh chapter is recited at the end of the Bhagavathi Sevai conducted in Kerala. Most Tamil Brahmins from Kerala do it. While reciting the priest and all those present do Namaskaram at the end of each verse ending with Narayani Namoasthudhe. Thus it is also called Namaskara Japam.

Doing so many sashtanga Namaskarams one after the other is a back bending exercise.

Of course in the typical Brahmin tradition most of the comments would be about the quality of Aravanai. Aravanai is a variation of Nei Payasam.

In Bhavani Sahasranama MAA is called Gudaanna Priyayai namah!

Jai MAA KAALI !!!
 
dear Sir,

The verse mentioned by you has been posted in # 49 on 26th April.


Surely I won't miss such an important verse.

The translation is not done entirely by me. I use another old translation

and make minor changes to make the meaning more clear or break the

sentences to make them more readable and understandable.


with warm regards,
Visalakshi Ramani. :pray2:
 
If people are fit enough to do so many namaskaars,

in a place filled with and overflowing with people,

they must really be in excellent shape!
:thumb:
 
# 23.

மேதே4
ரஸ்வதி வரே பூ4தி ப3ப்4ராவி தாமஸி |
நியதே தம் ப்ரசீதே3சே' நாராயணி நமோஸ்துதே ||

சிறந்தே மேதா தேவி நீயே! சரஸ்வதியும் நீயே ! ஐஸ்வரியமும், விஷ்ணு சக்தியும் நீயே! தாமஸ வடிவினளாகவும், இயற்கை வடிவினள் ஆகவும் விளங்குபவள் நீயே! ஈஸ்வரி அருள் புரிவாய்! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

# 24.

ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வ ச'க்தி ஸமன்விதே |
ப4யேப்யஸ் த்ராஹி நோ தே3வி து3ர்க்கே தே3வி நமோஸ்துதே ||

அனைத்து வஸ்துகளின் வடிவம் நீயே!
அனைத்தையும் ஆள்பவள் நீயே!
அனைத்து சக்தியும் பொருந்தியவள் நீயே!
பயங்கரமானவைகளில் இருந்து எங்களைக் காப்பாய்!
துர்க்கா தேவியே! நமஸ்காரம்!

 
# 25.

ஏதத்தே வத3னம் ஸௌம்யம் லோச்சனத்ரய பூ4ஷிதம் |
பாது ந: ஸர்வ பீ4திப்4ய: காத்யாயனி நமோஸ்துதே ||

அழகு மிகுந்து விளங்குவதும், மூன்று கண்களால் அலங்கரிக்கப் பட்டதும் ஆன உன்னுடைய முகம் எங்களை எல்லா பயங்களில் இருந்தும் காக்க வேண்டும். காத்யாயனீ! உனக்கு நமஸ்காரம்.

# 26 .

ஜ்வாலா கரால மத்யுக்3ர மசேஷாஸுர ஸூத3னம் |
த்ரிசூ'லம் பாது நோ பீ4தே பத்3ரகாலி நமோஸ்துதே ||

பயங்கரமான சுவாலை வீசுவதும், மிகுந்த கூர்மை உடையதும்,
அசுரர்களை மொத்தமாக அழிக்கும் உன்னுடைய த்ரிசூலம் எங்களை பயத்திலிருந்து காக்க வேண்டும். பத்ரகாளியே! உனக்கு நமஸ்காரம்.

 
# 27.

ஹிநஸ்தி தை3த்ய தேஜாம்ஸி ஸ்வனேனாபூர்யா யா ஜகத் |
ஸா க4ண்டா பாது நோ தே3வி பாபேப்4யோsன: ஸுதானிவ ||

தன் நாதத்தினால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்ற அந்த மணி, சகடத்திடையில் விழுவதில் இருந்து புத்திரர்களைத் தாய் காப்பது போல எங்களைப் பாவங்களில் இருந்து காக்கட்டும்.


# 28.

அஸுராஸ்ருக்3வஸாபங்க சர்ச்சிதஸ்தே கரோஜ்ஜ்வல: |
சு'பா4ய கட்3கோ3 ப4வது சண்டி3கே த்வம் நதா வயம் ||

அசுரகளின் ரத்தமும், கொழுப்பும் கலந்த சேற்றால் பூசப்பட்டதும்; கிரணம் விடும் ஒளி பொருந்தியதுமான உனது வாள் நன்மை பயக்கட்டும். சண்டிகையே! உன்னை நாங்கள் வணங்குகின்றோம்.

 
# 29.

ரோக3னசே'ஷா னபஹம்சி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீ4ஷ்டான் |
த்வாமாச்'ரிதானாம் ந விபன் நராணாம்
த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ||

தேவி! நீ சந்தோஷம் அடைந்தால் எல்லா வியாதிகளையும் அறவே போக்குகின்றாய்! கோபத்தினால், வேண்டப்படும் ஆசைகளை எல்லாம் அறவே ஒழிக்கின்றாய்! உன்னை அண்டியவர்களுக்கு எந்த விபத்தும் நேராது. உன்னை அண்டுபவர்கள் பிறர் அண்டுதற்குத் தகுதி அடைத்து விடுகின்றார்களே!

# 30 .

ஏதத் க்ருதம் யத் கத3னம் த்வயாத்3ய
த4ர்மத்3விஷம் தே3வி மஹா ஸுராணாம் |
ரூபைரநேகைர் ப3ஹுதா4த்ம மூர்த்திம்
க்ருத்வம்பி3கே தத் ப்ரகரோதி கான்யா||

தேவி! தர்மத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களை வதைக்க, உன் மூர்த்தியையே பலவாக்கி, பல வடிவங்களில் பல அசுரர்களை அழித்து போல, உன்னைத் தவிர யாரால் செய்ய இயலும் ?

 
# 31.

வித்3யாஸு சா'ஸ்த்ரேஷு விவேக தீ3பேஷ் -
வாத்3யேஷு வாக்யேஷு ச கா த்வத3ன்யா |
மமத்வக3ர்தேதி மஹாந்த4காரே
விப்4ராமயத்யேத த3தீவ விச்'வம் ||

வித்தைகளிலும், சாஸ்திரங்களிலும், விவேகத்தின் விளக்காகிய வேதங்களின் வாக்கியங்களிலும் பேசப்படுவது உன்னை அன்றி வேறு எவர்? இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய அஞ்ஞான இருளில் உழலவும், சுழலவும் வைப்பது உன்னை அன்றி வேறு எவர்?

# 32.

ரக்ஷாம்ஸி யத்ரோக்3ர விஷாச்'ச நாகா3
யத்ராரயோ தச்'யுப3லானி யத்ர |
தா3வானலோ யத்ர ததா2ப்3தி4 மத்3யே
தத்ர ஸ்தி2தா த்வம் பரிபாஸி விச்'வம் ||

ராக்ஷசர்கள் உள்ள இடத்திலும், கொடிய விஷ நாகங்கள் உள்ள இடத்திலும், சத்ருக்கள் நிறைந்த இடத்திலும், திருடர்கள் கூட்டம் நிறைந்துள்ள இடத்திலும், காட்டுத் தீ பரவிய இடத்திலும், நடுக்கடலிலும், அங்கங்கு இருந்தவாறு நீயே உலகை எல்லாம் ரக்ஷிக்கின்றாய்.
 
# 33.

விச்'வேச்'வரி தம் பரிபாஸி விச்வம்
விச்'வாத்மிகா தா4ரயஸீதி விச்வம் |
விச்'வேச' வந்த்3யா ப4வதி ப4வந்தி
விச்'வாச்'ரயா யே த்வயி பக்தி நம்ரா : ||

உலக நாயகியாகிய நீ உலகைக் பாலிக்கின்றாய்.
உலக வடிவினளாக நீ உலகையே தாங்குகின்றாய்.
உலகத்தின் நாயகர்களால் நீ பூஜிக்கப் படுகின்றாய்.
உன்னை உள்ளன்போடு வணங்குபவர்கள் உலகினுக்கே புகலிடம் ஆவார்கள்.

# 34 .

தே3வி ப்ரஸீத3 பரிபாலய நோsரி பீ4தேர்
நித்யம் யதா2ஸுரவதா4 த3து4னைவ ஸத்3ய: |
பாபானி ஸர்வ ஜக3தாம் ப்ரச'மம் நயாசு'
உத்பாத பாக ஜனிதாம்ச்'ச மஹோபஸர்கா3ன் ||

தேவி! அருள் புரிவாய்! இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தது போன்றே எப்போதும் சத்ரு பயத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து பாவங்களையும், தீய செயல்களின் பயனாகத் தோன்றும் பெருங்கொடுமைகளையும் நீ விரைந்து நாசம் செய்ய வேண்டும்.

 
# 35.

ப்ரணதானாம் ப்ரஸீத த்வம் தே3வி விச்'வார்த்தி ஹாரிணி |
த்ரைலோக்ய வாஸீனாமீட்3யே லோகானாம் வரதா3 ப4வ ||

தேவி! மூன்று உலகங்களில் வசிப்பவர்களும் போற்றுபவளே! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குகின்றவளே! நீ உலகங்களுக்கு சிறந்த நன்மைகளையே புரிவாய். உன்னை வணங்குவோருக்கு அருள் பாலிப்பாய்.

# 36.

தே3வ்யு வாச||

# 37.

வரதா3ஹம் ஸுரக3ணா வரம் யன் மனசேச்ச2த |
த்வம் வ்ருணுத்4வம் ப்ரயச்சா2மி ஜக3தமுபகாரகம் ||

தேவி கூறியது :-
தேவ கணங்களே!உலகுக்கு பயன் அளிக்கும் எந்த வரத்தையும் நீங்கள் என்னிடம் கோரலாம். நான் அதை உங்களுக்கு அளிப்பேன்.

 
# 38.
தே3வா ஊசு : ||

# 39 .
ஸர்வாபா3தா4 ப்ரச'மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்'வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மாத்3வைரி விநாச'னம் ||

அகில உலகின் நாயகியே! இவ்வாறே மூன்று உலகங்களின் துன்பங்கள் முழுவதும் அழிக்கப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்ருக்கள் நாசம் செய்யப்பட வேண்டும்.

# 40.
தேவ்யுவாச ||

# 41 .
வைவஸ்வதேன்தரே ப்ராப்தே
அஷ்டாவிம்ச்திமே யுகே3 |
சு'ம்போ நிசு'ம்பாஸ் சைவான்யா
வுத்பத்ஸ்யேதே மஹா ஸுரௌ ||

தேவி கூறியது:-

வைவஸ்வத மன்வந்தரத்தில், இருபத்தெட்டாவது சதுர் யுகம் நிகழும்போது, சும்பன், நிசும்பன் என்ற இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகின்றார்கள்.
 

# 42.

நந்த3கோ3ப க்3ருஹே ஜாதா யசோ'தா3 க3ர்ப்ப4 ஸம்ப4வா |
ததஸ்தௌ நாச'யிஷ்யாமி விந்த்4யாசல நிவாஸிநீ ||

யசோதையின் கர்ப்பத்தில் தோன்றி, நந்தகோபர் இல்லத்தில் பிறந்து, விந்தியாசலத்தில் வசிக்கப்போகும் நான், அப்போது அந்த அசுரர்களை நாசம் செய்யப்போகின்றேன்.

# 43 .

புனரப்யதிரௌத்3ரேண ரூபேண ப்ருதிவீதலே |
அவதீர்ய ஹநிஷ்யாமி வைப்ரசித்தாம்ஸ்து த3னவான் ||

மீண்டும் பூலோகத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து,
வைப்ரசித்தர்கள் என்னும் அசுரர்களையும் நாசம் செய்வேன்.

# 44

ப4க்ஷயந்த்யாச்'ச தானுக்3ரான் வைப்ரசித்தான் மஹாஸுரான் |
ரக்த த3ந்தா ப4விஷ்யந்தி தா3டி3மீ குஸுமோபமா : ||

மிகவும் கொடிய அசுரகள் ஆகிய அந்த வைப்ரசித்தர்களை நான் உண்ணும் போது, என்னுடைய பற்கள் மாதுளம் பூவைப் போன்று சிவந்து காணப்படும்.
 
# 45 .

ததோ மாம் தே3வதா : ஸ்வர்கே3 மர்த்ய லோகே சா மானவா: |
ஸ்துவந்தோ வ்யாஹரிஷ்யந்தி ஸததம் ரக்த த3ந்திகாம் ||

அதனால் சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும், மனித உலகில் வாழும் மனிதர்களும் என்னை 'ரக்ததந்திகா' என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

# 46.

பூ4யச்'ச ச'த வார்ஷிக்யா மனாவ்ருஷ்ட்யா மனாம்ப4ஸி |
முனிபி4:ஸம்ஸ்துதா பூ4மௌ ஸம்பவிஷ்யாம்யயோநிஜா ||

மறுபடியும் நூறு வருடங்கள் மழை பெய்யாமல் இருக்க, முனிவர்களால் துதிக்கப்பட்டு நீரின்றி வறண்ட பூமியில், கர்ப்பவாசம் செய்யாமலேயே நான் தோன்றுவேன்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top