• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நடந்தது

Status
Not open for further replies.
சாண்டொ சின்னப்பா தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்கொண்டிருந்த போது மிகமோசமான விபத்து நடந்தது. அதில் சின்னப்பதேவருக்கு அவ்வளவாக காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவச்தானம் எனப்படும் பிரமபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரை பார்த்து வணங்கி விபத்து நேர்ந்து விட்டது என்று சொன்ன மாத்திரத்தில் "கண்ணதாசன் எப்படி இருக்கிறான் என்று பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க, வியப்பும் வருத்தமுமாய் "அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்" என நா தழுதழுக்க கூறினார்.


தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர் "சரி, கவலைபடாதே.இந்த விபூதியை கொண்டு பொய் அவன் நெற்றியில் இட்டு, சிறிது வாயிலும் போடு, மீதி இருப்பதை அவன் தலைஅண்ணைக்கு கீழே வைத்துவிடு" என்று தனது திருக்கரங்களால் விபூதி எடுத்து தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவர் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியை பெறுகிறார்.


தேவரின் தயக்கத்துக்கு காரணம் கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும், சனாதன தர்மத்தையும்,நாக்கில் நரம்பு இல்லாததுபோல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாக பேசி மடாதிபதிகளை இழிவு படுத்தி பேசி இருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படி கொடுப்பது என்பது தான் தேவரின் பெரிய தயக்கமாய் இருந்தது.
ஆனால் முக்கலுமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனதயக்கத்தை உணர்ந்து தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சிலசமயம் மேகம் மறைபதுபோல் நாத்திக மேகம் அவனை இதுவரை மறைத்து இருந்தது. இனி அவன் சூரியனாக திகழ்வான். அவன் எப்பேர்பட்ட பரம்பரையை சேர்ந்தவன் தெரியுமா? கோயில் திருப்பணிக்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணியை செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத்தாத்தா. ஏகம்பரநாதர் கோவில் திருப்பணியை செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி அம்மன் கோவில் திருப்பணியை செய்தவர் அவருடைய தகப்பனார். இப்ப புரிகிறதா" என திருவாய் மலர்ந்து அருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்கு சென்றார். நினைவிழந்து படுத்து இருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதி பூசிவிட்டு சிறிது வாயிலும் இட்டு, மீதியை தலையணை யின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனை எல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது. மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோதுகண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண்விழித்து இருந்தார். தேவரை பார்த்துடன் "வாங்க எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை கொடுங்களேன்,என் முகத்தை பார்க்கணும் என்றார். நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன முகம் கண்ட கண்ணதாசன் 'இதென்ன விபூதி என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க வேறு வழியின்றி, வந்தது வரட்டும் என்று தான் பெரியவரை பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும்சொல்ல கண்ணதாசனின் விழிகளில் அருவி என கொட்டியது கண்ணீர். திகைத்த நின்ற தேவரின் செவிகளில் தேனாக பாய்நதது கண்ணதாசனின் வாரத்தைகள்."எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை .... ஐயோ? என்று வாய்விட்டு புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளயும் சமர்பித்தார். எனக்கு உடல்நலமாகி ம ருத்துவ மனையிலிரிந்து வேளியேறும் சமயம் நான் வீட்டிற்கு செல்லமாட்டேன். இந்த பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் தயவு செய்து அழைத்துசெல்லுங்கள் என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டிய படியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது.மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம். வீ றி ட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையயை
எடுஉ த்துக்கொண்டு பெரியவரை நேரில் கண்டு வணங்கி கவிதையயை சமர்ப்பித்தார் கண்ணதாசன். அந்த கவிதை இதோ :


பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த் த்தபெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞான கருத்துணர்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வு லகை காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மததோரும் சம்மததுடன் தம்மதத் தலைவன்என எங்கும்
தொழுதேத்தும் தெய்வ கமலக் கழல் தொழுவோம் வாரீர்


கவிதை வரிகளை கண்ட பெரியவர், கண்ணதாசனை பரிவோடு நோக்கி, அனந்த கோடி அற்புத லீலா சாஹித்ய மாயமானுஷாய நமோ நமஹ. அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகனுக்கல்வோ இது பொருந்தும் என்று அருளாசி கூறி, அங்கிங்கெனாதபடிஎங்கும் நிறை ந்திருக்கும் நிர்மல பொருள் ஞானஸூ ரியனாம் மதத்தின் பெருமையை எழுது என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் "அழகாய் அறும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது


பெரியவா பாத சரணம்.
தெய்வம் மனுஷ ரூபேண.
 
அர்த்தமுள்ள இந்துமதம் பிறந்த கதை இது தானோ??? :ear:

அற்புதமாக இருக்கிறது பின்புலக் கதையும், அந்த விபத்தும்!!! :thumb:

காரணமின்றிக் காரியமில்லை... காரியமின்றிக் காரணமில்லை. :decision:

எத்தனை உண்மையான வாக்கு!!! உண்மையான ஷாக் வைத்தியம்!!! :clap2:
 
"உண்மையில் நடந்தது என்ன?" என்ற தலைப்புக் கொடுத்திருந்தால்

கற்பழிப்போ? கொலையோ? ஆள் கடத்தலோ??? என்று அறிந்துகொள்ள

ஜனக் கூட்டம் வந்து குவிந்திருக்கும். தலைப்பு பாதி, கருத்து மீதி!!! :rolleyes:

மஹா பெரியவரின் தாசர்களைக் கூடக் காணோமே!!! :bolt:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top