• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நமசிவாய என்பதன் சிறப்பு

Status
Not open for further replies.
நமசிவாய என்பதன் சிறப்பு

நமசிவாய என்பதன் சிறப்பு

LRG_20150224134315343202.jpg



நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந் துவருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாக்கர மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.


மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது. ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாய நம என்ற பஞ்சாக்கர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது. ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும். அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாக்கர மந்திரமே. உயிர்கள் என்று துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர்.

தூல பஞ்சாக்கரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாக்கரம்-சிவாயநம
காரண பஞ்சாக்கரம்-சிவ(õ)ய சிவ.
மகாகாரண பஞ்சாக்கரம்-சிவ.
மகாமனு பஞ்சாக்கரம் -சி.

தூல பஞ்சாக்கரம்- நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும். மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி - ந
திருஉந்தி - ம
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி - ய

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான் ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.


சூக்கும பஞ்சாக்கரம்-சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார். இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர். உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது.

நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தே சூக்கும பஞ்சாக்கரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.

வா - தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்.

ய - அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.

ந - அனலேந்திய இடக்கரம்.

ம - முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின் இரண்டாவது படி இது.

காரண பஞ்சாக்கரம் - சிவயசிவ

ய என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம் போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாக்கரம்-சிவசிவ

சிவசக்திக்குள்ளே ய கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் சிவனும் தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாக்கரம் -சி

சி என்பது மகாமனு பஞ்சாக்கர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் வ என்னும் அருள் சக்தியும் ய என்னும் உயிரும் ந என்னும் மறைப்பாற்றலும் ம என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில் திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர ஜெபமுறைகள் கூறப்பட்டுள்ளன. மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும் கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம். பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உலக இன்பத்தை மட்டும் துய்க்க ÷ வண்டுமென விரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதலாம்.

உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவளிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றிநிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி, உமது அருளால் ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்பதே பஞ்சாக்கரத்தின் பொருள்.

ந ஆகிய திரோதன சக்தி ம என்ற மலத்தை ஒழித்து, அதுவே வ ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்ட பஞ்சாக்கரத்தைவிட மேலான தாரக மந்திரம் வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப நிஷதம் கூறுகின்றது.


Namah Shivaya | ??????? ??????? ??????? ?????????
 
அன்புள்ள பி.ஜெ.
தாங்கள் பகிர்ந்து கொண்ட நமச்சிவாய மகிமை படித்து மகிழ்ந்தேன்.
இந்த சமயத்தில் இதற்குத் தொடர்புடையதாய், நான் சில வருடங்களுக்கு முன் ஒரு சிவராத்திரியன்று எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாமணக்கும் மந்திரம்; நமச்சிவாய மந்திரம்!
பாமணக்கப் பாரிலெங்கும் பனுவலான மந்திரம்!
காமக்ரோத லோபமும் கடிந்து நீக்கும் மந்திரம்!
நாம ரூப பேதமின்றி நன்மை செய்யும் மந்திரம்! (நாமணக்கும்)

அமர்தலின்றி அங்குமிங்கு மார்ப்பரிக்கும் சிந்தையை
சமநிலைக்குச் சடுதியாக சார்புறுத்தும் மந்திரம்!
எமபயத்தை எளிதில் போக்கி ஏற்றமே விளைத்திடும்
கமலப்பாதம் கண்ணினுள்ளே காட்டுகின்ற மந்திரம்! (நாமணக்கும்)


ஐந்தெழுத்தி லாயிர மருத்தம் சொல்லும் மந்திரம்!
நைந்தவர் நினைந்திடில் நன்மை கூட்டும் மந்திரம்!
பைந்தமிழரும் பயிற்றும் பாந்தமான மந்திரம்!
மைந்தர் வாழ மாநிலத்தோர் மாந்துகின்ற மந்திரம்! (நாமணக்கும்)

சுமக்கும் வல்வினைகள் யாவும் சுட்டெரிக்கும் மந்திரம்!
நமச்சிவாய என்றுரைக்கும் நாஅவினிக்கும் மந்திரம்!
நமச்சிவாய மந்திரத்தை நாளுமிங்கு ஓதியே
நமக்குள்ளே உறைந்திருக்கும் நாதனை வணங்குவோம்! (நாமணக்கும்)
 
Dear Sri Kannan Sir

Thanks for your wonderful gift to all members in the form of a Poem, Please continue your Posts to enrich this Forum

Regards

P J
 
அன்புள்ள பி.ஜெ.,
"பரணிலிருந்து" என்ற ஒரு thread புதிதாய் துவக்கியுள்ளேன். அதில் நான் இட்டுள்ள ஒரு பதிவை இங்கும் அது தொடர்புடையதாக இருப்பதால் தந்துள்ளேன்
பரணிலிருந்து –
3

இன்றைக்குப் பரணிலிருந்து எடுத்த துண்டுக் காகிதத்தில் “நமசிவாய ஸ்தோத்திர மாலை என்ற தலைப்பில் ஒரு அருமையான தோத்திரப் பா மாலை கண்டேன். ஆனால் இந்த வெளியீட்டில் இதை எழுதியவர் யார் என்றோ, இது எந்த வருடம் பதிப்பிக்கப்பட்டதென்றோ விவ்ரம் ஏதுமில்லை. அந்த காகிதத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும் போது, இது குறைந்த்து அறுபது வருடங்களுக்கு முந்தையது என்று உத்தேசிக்கிறேன். இனி பிரசுரத்திற்கு வருவோம். உள்ளது உள்ளபடி கீழே தந்துள்ளேன்.

ஓம் நமசிவாய
நமசிவாய ஸ்தோத்திர மாலை

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை
சித்தமதை நிலையிறுத்தி சிவநாமம் சொல்பவர்க்கு
சங்கடங்கள் என்றென்றுமில்லை

ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமோ
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமோ.
1. ஆதியா யனாதியாகி ஆதிமூலம் பொருளுமாகி
ஆவின் நிழலில் அமைதி கண்ட ஆதிமூலமே (ஓம் நமோ)

2. சனகாதி முனிவர்களுக்கு ஸ்ம்ஞையாலே தத்துவம் காட்டி
ஸகல லோக பூஜ்யனான ஸாம்பமூர்த்தியே (ஓம் நமோ)

3. ஆனைமுகன் ஆறுமுகன் ஆதிசக்தி அம்மையுடன்
ஆனந்தமாய் பவனி வரும் ஆதி ஜோதியே (ஓம் நமோ)

4. ஆனந்த தாண்ட புரந்தனிலே மாமுனிக்கு
ஆருத்ரையில் நடனம் செய்த ஆசுதோஷியே (ஓம் நமோ)

5. மழலை பேசும் முருகனுடன் மந்திரார்த்த தத்வம் கேட்டு
மகனுக்கு சீடன் ஆன மாயாதீதனே (ஓம் நமோ)

6. சோமயாஜீ பக்திதனை சோதித்து முத்திதர
சண்டாளனாய் நேரில் வந்த சித்ஸபேசனே (ஓம் நமோ)

7. எண்ணிரண்டு பிராயங்கொண்ட ஏகபுத்ரன் மார்க்கண்டனை
என்றும்பதி னாறாய்ச் செய்த ஏகநாதனே (ஓம் நமோ)

8. வேட்டக்கார வேடங்கொண்டு வில்லாலன்று அடியும் பட்டு
விஜயனுக்கு அஸ்திரம் தந்த வேத வேத்யனே (ஓம் நமோ)

9. வைகையிலே அணையைக்கட்ட வேலைக்காளை தேடி நின்ற
வாணியச்சி பிட்டைத்தின்ற வேத பூஜ்யனே (ஓம் நமோ)

10. பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பாலன்று அடியும் பட்டு
பக்தை துயர் போக்கடித்த பூர்ணரூபனே (ஓம் நமோ)

11. மலைதனிலே முருகனுடன் மழலைபேசி விளையாடி
மலமகளை மகிழச்செய்த மஹாதேவனே (ஓம் நமோ)

12. தாயுதவி நாடி நின்று தத்தளித்த பெண்மணிக்கு
தாயாகி அறையில் வந்த தாயுமானவா (ஓம் நமோ)

13. சின்னஞ்சிறு சம்பந்தனை சக்தியுடன் பாலூட்டி
சிவஞானம் நேரில் தந்த சத்ரூபனே (ஓம் நமோ)

14. ஆழ்கடலில் பொங்கிவந்த ஆலகால விஷத்தையுண்டு
ஆர்வமுடன் அவனிகாத்த ஆதிதெய்வமே ` (ஓம் நமோ)

15. நாளதனை பாழாக்கி நலிந்துவாழும் மக்களுக்கு
நற்கதியைக் காட்ட வந்த நடராஜனே (ஓம் நமோ)

16. ஆணவத்தை அழித்து எனை அனவரதம் நாமம் சொல்ல
ஆசிதனை செய்ய வேண்டும் ஆத்மநாதனே (ஓம் நமோ)

17. அங்குமிங்கும் ஓடியாடி அல்லல் தரும் மனக்குரங்கை
அடக்கியாட்கொள்ள வேண்டும் ஆர்யபூஜ்யனே (ஓம் நமோ)

18. காலதேவன் வரும் நேரம் கண்கலங்க செய்திடாமல்
காளைமீதில் வரவேண்டும் காலகாலனே (ஓம் நமோ)


கலியுகத்தில் ஸம்ஸார ஸாகரத்தில் தத்தளிக்கும் மக்கள் அனைவரும் பிறவிப் பயன் எய்தி பேரின்பமடைய தின்ந்தோறும் காலை மாலை மேற்படி நமசிவாய ஸ்தோத்திரமாலையை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டியது. ஒருமுறை பாராயணம் செய்தால் 108 தடவை “நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மஹாமந்திரம் சொல்லப்படுகிறது.

Keywords: Namasivaaya Sthoththira maalai
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top