V
V.Balasubramani
Guest
நாம் ஊழல்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டோ&#
[h=1]நாம் ஊழல்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டோமா....?[/h]2G வழக்கு உச்சத்தில் இருந்த காலத்தில் என் நண்பன் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது.... "பாவம்டா ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடா... வெறும் நாலாயிரம் கோடி ஊழல் பண்ணிட்டு தலைமறைவாக இருந்தார்ல...?" என்றான் பரிதாபமாக.
இது அவன் ஒருவனின் மனநிலை மட்டும் அல்ல, நம் பெரும்பாலானோரின் மனநிலையும் இப்போது இதுவாகதான் இருக்கிறது. நமக்கு நூறு கோடி, இரு நூறு கோடி ஊழல்கள் எல்லாம் பழகிவிட்டன... இயல்பாக நமது கவனம் அதில் குவிய மாட்டேன் என்கிறது அல்லது அதை எளிதாக கடந்து சென்று விடுகிறோம். சொல்லப்போனால், சின்ன தொகையில் ஊழல் செய்து மாட்டுபவர்கள் மீது நமக்கு பரிதாபமே வருகிறது. நிச்சயம் இது சாதாரண விஷயமல்ல... நம் பொதுபுத்தியில் படிந்துள்ள மாபெரும் கறை அது.
நாம் ஊழல்களை சுலபமாக கடந்து விடுகிறோம் என்ற ஒற்றை காரணம் தரும் தைரியத்தில்தான், ‘அதிகம் விற்பனையாகாத ஒரு நாளிதழ் என் மீது குற்றம் சுமத்தி உள்ளது’ என்று தம் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுக்காமல், இது போன்ற கிண்டல்கள் மூலம், அரசியல்வாதிகளால் சுலபமாக கடந்து சென்று போய்விட முடிகிறது. ஒருவர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லவேண்டுமென்றால் கூட, அந்த பத்திரிக்கை அதிகம் விற்பனை ஆகும் நாளிதழாக இருக்க வேண்டுமா...?
Read more at: http://www.vikatan.com/news/coverstory/59886-we-have-become-used-to-tolerate-corruption.art