Padmanabhan Janakiraman
Member
நீலிக் கண்ணீர்:
சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?
பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர்.
சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை.
சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள்.
அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.
உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது.
'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.
Source:
Govikannan.blogspot.
This post is for sharing knowledge only, no intention to violate any copyrights.