நூற்றுக்கு நூறு உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை!
என்னைக் கேட்க யாருமில்லை என்று உலவிய மனிதர் தன் கடைசி நாட்களில்
தன்னைப் பார்க்கப் பிள்ளைகள் வராது, இவ்வுலகை நீத்தார்! :rip:
இச் சம்பவம் பற்றி 'வண்ண வண்ண மனிதர்களில்'............. :sad:
Here it is, TVK Sir.
''அந்த மாமாவுக்கு ரஷ்யாவில் நல்ல வேலை. தன் முதல் மகனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, இளைய மகனை
ரஷ்யாவில் படிக்க வைத்தார். அதனால் முதல் மகனுக்குத் தந்தை மீது கடுப்பும், வெறுப்பும்!
முதல் மகனுக்குப் பார்த்துப் பார்த்துப் பெண் தேடி மணம் முடித்துவைத்தார். மருமகளுக்கு அவரை அறவே
பிடிக்காது - சுய பெருமை பேசித் திரிவதால். இரண்டாம் மகன் காதலித்த பெண்ணை மணந்தான். அவளும்
முதல் மருமகளைப் போலவேதான்!
தன்னிச்சையாக வெளி நாடுகள் சென்று காசினோவில் விளையாடித் தோற்று, தன் தாயையும் கவனிக்காது ...
இப்படியே அவர் வாழ்வு ஓடிவிட்டது. ஒரு சீனியர் ரிஸார்ட்டில் ஆனந்தமாகக் காலம் கழித்தவரின் 96ம் வயதில்
உடல் நலம் குன்ற, மகன்கள் பணம் தருவதோடு கடமை முடிந்ததாக நினைக்க, ஆவி பிரியும் அவ்வேளையில்,
அன்போடு அகலாதிருக்க ஒரு ஜீவனும் இல்லாமல், இவ்வுலகை நீத்தார்!
மூத்த மகன் ஐரோப்பாவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதால் அவனைத் தொந்தரவு செய்யக் கூடாதாம்! நல்ல
வேளை; இளையவனுக்குக் கொஞ்சம் மனிதம் மிஞ்சியுள்ளது! அவன் ரஷ்யாவிலிருந்து வந்து ஈமக் கிரியைகளைச்
செய்தான்.
இதுதான் கல்வியில் மேம்பட்ட மனிதரின் உலகம்!! ''