• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

படித்ததில் பிடித்தது

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.



..... ஒரு ரூபாய்க்கு - ஓர் முழு சாப்பாடு .....
கலங்கிப் போய் நின்றாள் அந்த இளம்பெண்
.. அந்தக் கல்லூரி வாசலில் ..!
.
ஆம் ... எப்படியாவது அந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்று ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு ,
ஏமாற்றமே அங்கு காத்திருந்தது .
.
காரணம் ... காலேஜ் அட்மிஷனுக்காக நிர்வாகம் கேட்ட தொகையை கொடுக்க , அவளது பெற்றோரால் இயலவில்லை .
கூடவே வந்திருந்த பெற்றோர் , ஏமாற்றத்துடன் நின்ற தங்கள் மகளின் கலங்கிய கண்களைப் பார்க்க திராணி இல்லாமல் ,
வேறு எங்கோ பார்ப்பது போல .. ..... ஆனால் குமுறல்களை மனதுக்குள் சுமந்து கொண்டு , கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார்கள் .
.
விரக்தியோடு வெகு நேரம் அப்படியே அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள் அந்தப் பெண் .
தன் ஏமாற்றத்தை வெளியே காட்டினால் , பெற்றோர் மனம் சங்கடப்படுமே என நினைத்து .. பொய்யாக புன்னகைத்து தன் அப்பா அம்மாவிடம் சொன்னாள் :
“சரிப்பா .. வாங்க வீட்டுக்குப் போகலாம்.. ”
.
அந்தப் பெண் கல்லூரி வெளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க ... தலை குனிந்தபடி அவளை தொடர்ந்தனர் அந்தப் பெற்றோர்.
அந்தப் பெண்ணின் தாய் கூட , தன் மகளின் சோகத்தை தாங்கிக் கொண்டாள்.
ஆனால் அந்த அப்பாவால் அது முடியாமல் போனது.
மகளுக்கும் , மனைவிக்கும் தெரியாமல் , தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக , வேறு பக்கம் திரும்பிய அந்த மனிதரை ...
தற்செயலாக அந்தப் பக்கம் நின்றிருந்த இன்னொரு மனிதர் பார்த்து விட்டார்.
.
“ஹலோ ..நீங்க ஏ.எம்.வி. மெஸ் ஓனர்தானே..?”
“ஆமாம்”
“என்ன விஷயமாக இந்தக் கல்லூரிக்கு ...?”
.
கலங்கிய கண்களுடன் தன் கதையை சொன்னார் வெங்கட்ராமன்.
அதைக் கேட்டு விட்டு , அந்த மனிதர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று ஏதோ பேசி விட்டு வந்தார் .
அவ்வளவுதான் !
அடுத்த நொடியிலேயே , அந்த சூழ்நிலையே முற்றிலும் மாறிப் போனது .
அவர் மகளின் கனவு , அன்றைய தினமே நிறைவேறியது.
அந்தப் பெண்ணின் கல்லூரி அட்மிஷன் செலவு முழுவதையும் ராமகிருஷ்ணா மடம் ஏற்றுக் கொண்டது.
ஆம் ... அந்த இளம்பெண் தான் ஆசைப்பட்டபடியே அந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.
.
எப்படி நடந்தது இந்த அதிசயம் ..?
அந்த மாணவியின் அப்பா வெங்கட்ராமன் நடத்தி வரும் ஏ.எம்.வி. மெஸ்ஸில்
அப்படி என்னதான் இருக்கிறது ..?
.
அது இருக்கட்டும்.
எங்கே இருக்கிறது இந்த ஏ.எம்.வி. மெஸ்..?
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில்..!
.
என்ன ஸ்பெஷல் இந்த ஏ.எம்.வி. மெஸ்ஸில்..?
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு !
.
இதைப் பற்றி சொல்கிறார் வெங்கட்ராமன்:
“”கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு ,
ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறோம் .
காலையில் மருத்துவமனை உள்ளே சென்று , கஷ்டப்படும் பத்து குடும்பங்களை கண்டு பிடித்து , ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 10 டோக்கன் கொடுப்பேன் . ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வாங்கிக் கொள்ளலாம் .
அதே போல் பகலில் 40 டோக்கன்கள் கொடுப்பேன் . இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறோம் . இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் ..”
.
“எப்படி வந்தது உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா..?”
வெங்கட்ராமன் சொன்னார் :
”ஈரோடு அரசு மருத்துவமனயில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டாலும் , நோயாளிகளுக்கு துணையாக வந்தவர்கள் சாப்பிட வெளியில்தான் செல்ல வேண்டும். பலருக்கும் இதற்கு கையில் பணம் இருக்காது. அதற்காகத்தான் இந்த திட்டம் .
ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவோம் . ஹாஸ்பிடலுக்கு போய் அவர்கள் அதை பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் .
முதலில் இதை இலவசமாக செய்ய நினைத்தேன். ஆனால் எதையும் இலவசமாக கொடுத்தால் , அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அதனால்தான் ஒரு ரூபாய் வாங்கிக் கொள்கிறேன்..”
.
“சரிங்க வெங்கட்ராமன் .. இதனால் உங்களுக்கு ...?”
.
புரிந்து கொண்டு பதில் சொன்னார் வெங்கட்ராமன் : “நஷ்டம்தான் ... ஆனால் இப்போது நிறைய பேர் இந்த திட்டத்திற்கு நன்கொடை தருகிறார்கள் . அவர்கள் பெயரையும் என் கடையில் எழுதி வைத்து விடுகிறேன்.”
பேச்சின் இடையே சிறிய இடைவெளி விட்டு விட்டு , வெங்கட்ராமன் தொடர்ந்தார் : “ கல்லூரியில் படிக்கும் என் மகள் மட்டும் நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்...”
“சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்....?”
“இன்னும் நிறைய பேருக்கு ...ஏன் ..இந்த அரசு மருத்துவமனைக்கு வரும் அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் சாப்பாடு கொடுக்க முடியும் . அந்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..”
.
அடடா... எப்பேர்ப்பட்ட ஒரு உத்தம மனிதன் ..?
இவரது இந்த உயர்ந்த உள்ளம் பற்றி அறிந்ததால்தான் , ராமகிருஷ்ணா மடம் இவர் மகளின் கல்லூரி செலவுகளை , தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டது .
.
சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன் ....
ஊர் பெயர் தெரியாத யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல் இந்த மனிதர் செய்த உதவி ...
சரியான நேரத்தில் இவர் மகளுக்கு , ஏதோ ஒரு ரூபத்தில் வந்து எதிர்பாராத மிகப் பெரும் உதவியை செய்து இருக்கிறது .
.
அன்னபூரணி ஸ்லோகம் :
“அன்னபூர்ணே
ஸதா பூர்ணே
சங்கர ப்ராண வல்லபே !
ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!”
..
[ சிவனின் ப்ராணன் போன்ற
ஓ அன்னபூர்ணா தேவியே !
ஞானமும் வைராக்யமும்
கொடுக்கும்படியான
அன்னத்தை அளிப்பாயாக ! ]
.
சரி ..அன்னபூரணியை எங்கே தரிசிப்பது..?
ஈரோட்டில் ..
அரசு மருத்துவமனைக்கு அருகில் ...!
- K.baskaran

Source:
முத்து முத்து / இன்று ஒரு தகவல்/ INFORMATION TODAY / Face Book
 
Ducks and Eagles


I was waiting in line for a ride at the airport. When a cab pulled up, the first thing I noticed was that the taxi was polished to a bright shine. Smartly dressed in a white shirt, black tie, and freshly pressed black slacks, the cab driver jumped out and rounded the car to open the back passenger door for me.


He handed me a laminated card and said: 'I'm Wasu, your driver. While I'm loading your bags in the trunk I'd like you to read my mission statement.'


Taken aback, I read the card. It said: Wasu's Mission Statement:
To get my customers to their destination in the quickest, safest and cheapest way possible in a friendly environment.


This blew me away. Especially when I noticed that the inside of the cab matched the outside. Spotlessly clean!


As he slid behind the wheel, Wasu said, 'Would you like a cup of coffee? I have a thermos of regular and one of decaf.'


I said jokingly, 'No, I'd prefer a soft drink.'


Wasu smiled and said, 'No problem. I have a cooler up front with regular and Diet Coke, lassi, water and orange juice.'


Almost stuttering, I said, 'I'll take a Lassi.'


Handing me my drink, Wasu said, 'If you'd like something to read, I have The NST , Star and Sun Today.'


As they were pulling away, Wasu handed me another laminated card, 'These are the stations I get and the music they play, if you'd like to listen to the radio.'


And as if that weren't enough, Wasu told me that he had the air conditioning on and asked if the temperature was comfortable for me.


Then he advised me of the best route to my destination for that time of day. He also let me know that he'd be happy to chat and tell me about some of the sights or, if I preferred, to leave me with my own thoughts.


'Tell me, Wasu,' I was amazed and asked him, 'have you always served customers like this?'


Wasu smiled into the rear view mirror. No, not always. In fact, it's only been in the last two years. My first five years driving, I spent most of my time complaining like all the rest of the cabbies do. *Then I heard about power of choice one day.'


'Power of choice is that you can be a duck or an eagle*.


'If you get up in the morning expecting to have a bad day, you'll rarely disappoint yourself. Stop complaining!'


'Don't be a duck. Be an eagle. Ducks quack and complain. Eagles soar above the crowd.'


'That hit me right,' said Wasu.


'It is about me. I was always quacking and complaining, so I decided to change my attitude and become an eagle. I looked around at the other cabs and their drivers. The cabs were dirty, the drivers were
unfriendly, and the customers were unhappy. So I decided to make some changes. I put in a few at a time. When my customers responded well, I did more.'


'I take it that has paid off for you,' I said.


'It sure has,' Wasu replied. 'My first year as an eagle, I doubled my income from the previous year. This year I'll probably quadruple it. My customers call me for appointments on my cell phone or leave a message on it.'


Wasu made a different choice. He decided to stop quacking like ducks and start soaring like eagles.


Have an eagle week..next week... And next...And....
��
A great Thought..


"You don't die if you fall in water, you die only if you don't swim.


Thats the Real Meaning of Life.

Source: WhatsApp
 
[FONT=&quot]இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை
#ஜஸ்வந்த்_சிங்_ராவத்[/FONT]

[FONT=&quot]15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.[/FONT]
[FONT=&quot]இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த் சிங் ராவத்[/FONT]
[FONT=&quot]ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.[/FONT]
[FONT=&quot]சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.[/FONT]
[FONT=&quot]மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.[/FONT]
[FONT=&quot]ஜஸ்வந்த் சிங் ராவத் பாதுகாத்த எல்லைப் பகுதி :[/FONT]
[FONT=&quot]இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.[/FONT]
[FONT=&quot]இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார்.[/FONT]
[FONT=&quot]முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.[/FONT]
[FONT=&quot]சீனர்கள் வைத்த ஜஸ்வந்த் சிங் ராவத் சிலை[/FONT]
[FONT=&quot]சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.[/FONT]
[FONT=&quot]போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.[/FONT]
[FONT=&quot]சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது. இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.[/FONT]
[FONT=&quot]ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.[/FONT]
[FONT=&quot]ஜெய்ஹிந்த்...![/FONT]
[FONT=&quot]- மு.சா.கெளதமன்.

Source: Face Book / இன்று ஒரு தகவல் INFORMATION TODAY[/FONT]
 


இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.

வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”
நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டால் வேலை சரியா செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”

Moral:

உருவத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது...

Source: இன்று ஒரு தகவல் /information today / Face Book
 


சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
*True. Knowledge is nowadays very important than money in this world.*

Source: Face Book
 


[h=2]தன்னம்பிக்கையின் ஆற்றல் : அர்னால்ட்[/h]என்னோட பதினைந்தாவது வயதில் நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!
.
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
.
அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …
நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்.!
.
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
.
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.!
.
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க…
.
தன்னம்பிக்கையாலும், என்னோட கடின உழைப்பாலும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
.
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!
அது அவர்களின் வியாதி!
.
நம்மை பற்றியும், தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

#Arnold


Source: Face Book
 

ஊசி விழும் சத்தம் கேட்குமா...?!

1)

ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக,... #குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!"

-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

-------------------

2)

1960கள் ஆரம்பத்தில், ஃபிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டிகால் NATO வில் இருந்து ஃபிரான்ஸ் நாட்டை விலக்கிக்கொள்ள தீர்மானித்தார். "அனைத்து அமெரிக்கப் படைகளும் முழுமையாக ஃபிரான்ஸை விட்டு வெளியேறவேண்டும்..." என்றார் அவர். அப்போது அங்கிருந்த அமெரிக்காவின் நாட்டுக் காரியதரிசி (Secretary of State) டீன் ரஸ்க் கேட்டார்: "இங்கு புதைக்கப்பட்டுள்ள 180,000 அமெரிக்க வீரர்களும் கூடவா....?"

-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

-------------------

3)

ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார்.

"இதுதான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று நக்கலாக கேட்டார் அதிகாரி.


"இல்லை முன்பு வந்திருக்கிறேன்..."


"அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு..."


"நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..."


"சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." உறுமினார் அதிகாரி!


சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியைப் பார்த்தவாறே, அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..."


-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

-------------------

4)

இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.:

"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..."


பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், நேரு பேச அனுமதி அளித்தார்.


"சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?"


-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்:

"முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?"


"இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..."


இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு!நன்றி:திரு ஆறுமுகம்

ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.!

19146070_494952510836518_4766153224111599781_n.jpg


Source: Face Book
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top