P.J.
0
பயணிகள் ரயில், சரக்கு கட்டணம் உயர்வு; 25 ம் த&
பயணிகள் ரயில், சரக்கு கட்டணம் உயர்வு; 25 ம் தேதி முதல் அமல்!
புதுடெல்லி: பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சரக்கு கட்டணமும் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சி முடியும் தருவாயில், ரயில் கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியது. இதற்கு, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சியில் அமர்ந்து 26 நாட்கள் ஆன நிலையில் நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமாக உயர்த்தி பரிசு வழங்கியுள்ளது.
மேலும் சரக்கு கட்டணமும் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், வருகிற 25 ஆம் தேதி முதலே அமலுக்கு வருவதாக ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
ரயில் பயணிகள் போக்குவரத்தில் மாதத்திற்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்த திட்டமிடப்பட்ட அதே 14.2 சதவீதம் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில் ரயில் கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
Source:??????? ?????, ?????? ??????? ??????; 25 ?? ???? ????? ????!