பிராமண பாஷை யில் "ஓய்"
நமது பிராமண சமூகத்தில் பேசப்படும் பல வார்த்தைகள் தனி சிறப்பு உடையவை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.. அதில் "ஓய்" என்ற வார்த்தை நமது அன்பையும் நெருக்கத்தையும் தெரிவிக்கிறது என்பது அடியேனுடைய நம்பிக்கை. ஆனால் இப்போது நமது சமூகம் அந்த வார்த்தையை உபயோகிக்கிறதா என்பது சந்தேகம் தான்.உதாரணமாக "என்ன ஓய் இத்தனைநாள் எங்கே போய் இருந்தீர்" "என்ன ஓய் ஆத்தில் எல்லோரும் சௌக்கியமா?" என்பதெல்லாம் 40/50 வருடங்களுக்கு முன் ரொம்ப சகஜம். ஆனால் இப்போது சார்,,ஹாய்,ஹி என்றெல்லாம் கூறிக்கொண்டு அழைக்கிறோம்.சரி, இந்த "ஓய்" என்ற வார்த்தை எப்போது யாரால் எதற்க்காக நமது அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அந்த வார்த்தை எங்காவது உபயோகப்படுத்தப்படுகிறதா? இதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதை பற்றி தெரிவிக்கலாமே?ஏங்காணும் ,அடியே ,ஏன்னா என்று மனைவி கணவனை அழைப்பது,உங்க அப்பாவை கூப்பிடு என்று குழந்தைகளிடம் சொல்வது, என்ற அந்த வார்த்தைகளெல்லாம் இப்போது இருக்கிறதா .