பூதாகரமாகும் முல்லை பெரியார் பிரச்னை
இன்றைய தினமலரில் 50000 மேற்பட்ட மக்கள் பெரியார் அணையை நோக்கி பேரணி என்ற செய்தி மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
இரண்டு கல்வி அறிவு பெற்ற மாநிலங்கள் என்று சொல்லிக் கொண்டு இன்னமும் நாம் நாகரிகம் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறோமா என்று தோன்றுகிறது.
இந்த விஷயத்தில் ஊதிப் பெரிதாக்குகிறவர்கள் அரசியவாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாதது என்பது வேதனை.
நதி பிரச்னை என்பது மிகவும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயம் என்பதை உணர்ந்தும் இதில் உணர்வுகளைத் தூண்டாமல் அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதை அறிந்தும் அரசில் இருப்பவர்கள், அரசியல் நடத்துபவர்கள், வல்லுனர்கள், நடுநிலையாளர்கள் எல்லோரும் இரு பக்கமும் சேர்ந்து கொண்டு அறிக்கை விடுவது, பேரணி நடத்துவது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வது என்று போனால் இதற்க்கு என்னதான் தீர்வு?
இரு மாநில முதல்வர்களும் அறிக்கை விடுவதை விட்டு ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து பேசி இரு மாநிலத்துக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்பார்கள் என்றால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. ஆனால் இது பகல் கனவு என்றே தோன்றுகிறது.