P.J.
0
பெங்களூரில் தனியாக ஆட்டோவில் செல்லும் ப&
பெங்களூரில் தனியாக ஆட்டோவில் செல்லும் பெண்களே உஷாரம்மா உஷார்!
July 23, 2015,
பெங்களூரில் ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் அல்ல கண்ட நேரத்தில் ஆட்டோவில் பயணம் செய்யும் ஆண்களும் உஷாராகவே இருக்க வேண்டும். பெங்களூரில் ஆட்டோ பயணம் என்பது பயங்கர பயணமாகி வருகிறது.
பெங்களூரில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் நேஹா அகர்வால் என்பவர் கடந்த 20ம் தேதி இரவு 8 மணிக்கு பிடிஎம் செல்ல ஜெயதேவா சர்க்கிள் அருகே ஆட்டோ எடுத்துள்ளார். ஆட்டோவில் ஏறிய பிறகு தனக்கு பின்னால் யாரோ மறைந்திருப்பது போன்று உணர்ந்தார்.
தனக்கு பின்னால் யாரோ ஒரு சிறுவன் கையில் கத்தியுடன் இருப்பதை பார்த்த நேஹா அதிர்ச்சி அடைந்தார். கோபாலன் மால் அருகே ஆட்டோ போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது நேஹா வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்து ஓடி வந்த போக்குவரத்து போலீஸ்காரர் நடந்ததை கேட்டுவிட்டு ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பையனை பிடித்து அடித்தார். இந்நிலையில் மற்றொரு போக்குவரத்து போலீஸ்காரர் வந்து நேஹாவை வேறு ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பெங்களூரில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டாயம் போட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் சிலர் மீட்டருக்கு சூடு வைத்து கண்டமேனிக்கு வசூல் செய்கிறார்கள். தட்டிக் கேட்கும் பயணிகளை ஆட்டோ டிரைவர்கள் தாக்கி மண்டையை உடைக்கும் அளவுக்கு சென்ற சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் டிரைவரோடு சேர்ந்து அவர் அருகே வேறு ஒருவரும் அமர்ந்திருக்கும் ஆட்டோக்களில் ஏற வேண்டாம்.
http://tamil.oneindia.com/news/indi...fore-you-hire-an-auto-231738.html#slide163314