"பையச் சென்றால் வையம் தாங்கும்"
"பையச் சென்றால் வையம் தாங்கும்"
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
"உடைத்தம்" -உடை என்னும் சொல் ஆடையை குறிக்கும்.
உடைத்தம் -தம்முடைய ஆடையாக இருக்கும் உடம்பு. அதாவது தம் உயிருக்கு ஆடையாக இருக்கும் உடம்பு. ஊக்கம் என்பது உயிரினில் உருவாகும் ஒரு அபரிமிதமான சக்தி. அதனை சீராக்கி
உடம்பின் வலிமை அறிந்து, உள்ளமும் உடம்பும் ஒன்றான தகுதியில் வெளிப்படுத்துமின் காரியசித்தி நிச்சியம்.
அவ்வாறு இன்றி அவ்வுயிரில் உருவாகும்
ஊக்கத்தை ஊக்கி - மிகைப்படுத்தி
தம்உடை- தம் உடம்பின் வலிமை அறியாமல் வெளிப்படுத்துமின், எவ்வாறு அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய வண்டியின் அச்சு பாதி வழியிலேயே முரிந்துவிடுமோ அவ்வாறே
இடைக்கண் – பாதியிலேயே முரிந்தார் - இறந்தார் பலர்.
மேலும் இக்கருத்தை வலியுருத்தியே
அவ்வை பிராட்டியும் தம் கொன்றை வேந்தனில்
"பையச் சென்றால் வையம் (இவ்வுடம்பு) தாங்கும்"
என்று நமக்கு எடுத்துரைக்கிறார்.
Sairam