Padmanabhan Janakiraman
Member
மந்த்ரிணீ பீடம்:
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.
இவ்விடம் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இங்கு அன்னை மீனாட்சி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இவ்விடத்தில் அன்னை கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியின் வடிவமாக திகழ்கிறாள்.
மீனாட்சி அம்மன், நின்ற கோலத்தில் இடைநெளிந்து திருக்கரங்களில் கிளியை ஏந்தி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு இடப்பக்கத்தில், சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார்.
போகத்தையும், முக்தியையும் வேண்டுபவர்களுக்கு, சித்திதரும் தலம் என்று இத்திருத்தலத்தை திருவிளையாடல் புராணம் போற்றியிருக்கிறது.
18 ச சித்தர் பீடத்தில் இதுவும் ஒன்று. அம்மனின் சக்தி பீடங்களில் இது, ராஜமாதங்கி சக்தி பீடம் ஆகும். சக்தி பீடத்தில் இவை மந்த்ரிணீ பீடம் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மனின் திருமேனி நிறம் பச்சை என்பதால் திருமேனி சிலை ரூபம் முழுக்க மரகத கல்லால் ஆனது.
*அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று அமைந்துள்ளது. காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள்.
*அன்னை தன் வலது கையில் கிளியை ஏந்தி, அது காதில் பேசுவது போன்று அமைந்துள்ளது. ஏனெனில் கிளி தான் பேசுவதை திரும்பத் திரும்ப பேசக்கூடியது. அதனால் பக்தர்களின் வேண்டுதலைத் திரும்ப திரும்ப அன்னையிடம் கூறி, அவர்களின் குறையை விரைவாக நிறைவேற்றும் பொருட்டு கையில் கிளி வைத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயில் கற்ப கிரகத்தில் இருக்கும் மீனாட்சி அன்னையைப் பார்க்கும் போது உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்ப்பது போன்ற இருக்கும்.
மிக அழகாக காட்சி தரும் அன்னை மீனாட்சியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
Sources: inidhu.
newstm.
This post is for sharing knowledge only, no intention to violate any copyrights..