• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.

#51.
வாலை = இளம் பெண்.
வாளை = ஒரு வகை மீன்.
வாழை = ஒரு மரம்.
#52.
வால் = மிருகங்களின் ஒரு உறுப்பு.
வாள் = ஒரு ஆயுதம்.
வாழ் = வாழ்ந்திரு.
#53.
விலக்கு = ஒதுக்கு.
விளக்கு = தீபம், விளக்கிச் சொல்லல்.
#54.
விலா = மார்பின் கீழ் உள்ள பகுதி.
விளா = ஒரு மரம்.
விழா = திருவிழா.
#55.
விளி = அழை.
விழி = கண்.
 
நான் ஒன்றாம் வகுப்பில் படித்தது என் நினைவுக்கு வருகிறது. இது பள்ளிப் பிள்ளைகள் தமிழ் உச்சரிப்பைச் சரியாகக் கற்றுக் கொள்ள உதவியது.

அடுப்பில் எரிவது கரி;
அம்மா சமைப்பது கறி.
காட்டில் உள்ளது புலி;
மரத்தில் காய்ப்பது புளி.
எதிரே தெரிவது மலை;
பயிருக்குத் தேவை மழை.
உடலுக்கு முக்கியம் தலை;
வயலுக்கு உரமாம் தழை.

இப்படி அந்தப் பாடல் நீண்டு கொண்டே போகும்.

'mayakkam' enbadhu 'confusion'.

'marutchi' enbdhu 'fear'.
 
dear Mr. Pannvalan,

Thank you for the song teaching correct Tamil pronunciation!

It will be vary nice if you can recollect the whole poem.

I am sure our kuuty friends will be benifitted immensely by that.

can you help me with any concrete example for 'marutchi'?

with warm regards,
V.R.
 

#56.
விலை = கிரயம்.
விளை = உண்டு பண்ணு.
விழை = விரும்பு.
#57.
வேல் = ஒரு ஆயுதம்.
வேள் = மன்மதன்.
#58.
வேலை = கடல், தொழில்.
வேளை = பொழுது, சமயம்.

#59.
அரம் = ஒரு கருவி.
அறம் = தருமம்.
#60.
அரன் = சிவன்.
அறன் = தருமம்.
 
#61.
அரி = திருமால்.
அறி = உணர்வாய்.
#62.
அரிவாள் = வெட்டும் கருவி.
அறிவாள் = அறிந்து கொள்வாள்.
#63.
அருகு = சமீபம்.
அறுகு = அருகம் புல்.
#64.
அருந்து = உண்பாய்.
அறுந்து = துண்டாகி.
#65.
அரை = பாதி.
அறை = வீட்டின் ஒரு பகுதி, கன்னத்தில் அடி.
 

#66.
ஆரல் = ஒரு வகை மீன்.
ஆறல் = தணிதல்.
#67.
இரத்தல் = யாசித்தல்.
இறத்தல் = சாதல்.
#68.
இரக்கம் = மனம் இளகுதல்.
இறக்கம் = சரிவு, குறைதல்.
#69.
இரங்கு = மனம் இளகு.
இறங்கு = கீழே இறங்கு.
#70.
இருக்கு = நான்கு வேதங்களில் முதல் வேதம்.
இறுக்கு = அழுத்தமாகக் கட்டு.
 

#71.
இரும்பு = ஒரு உலோகம்.
இறும்பு = குறுங்காடு.
#72.
இரை = உணவு, ஓசை.
இறை = வரி, அரசன், கடவுள்.
#73.
உரல் = தானியம் குற்றும் உரல்.
உறல் = பொருந்துதல்.
#74.
உரவு = வலிமை.
உறவு = சொந்தம்.
#75.
உரி = பட்டை.
உறி = தூக்கு.
 

#76.
உரு = வடிவம்.
உறு = மிகுதி.
#77.
உரை = பேச்சு.
உறை = பை.
#78.
ஊர = நகர்ந்து செல்ல.
ஊற = சுரக்க.

#79.
எரி = நெருப்பு.
எறி = வீசு.
#80.
எரித்தல் = தீயினால் எரித்தல்.
எறித்தல் = வெயில் வீசுதல்.
 
மிகவும் நன்றாக உள்ளது! பேராசிரியர் நன்னன் இப்படிப்பட்ட சொற்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்! தொடருங்கள்!

நன்னன் ஒரு தமிழ் மன்னன்!

பேராசிரியர் நன்னனைப் போன்ற நல்ல-
தோராசிரியர் காணுதல், மிகவும் அரிது!

குழந்தைகள் எதிரில் உள்ளதாக பாவித்து,
குழந்தைகளுக்கு அழகு தமிழ் போதிப்பார்.

சிறப்பான அவர் பாடம் கேட்பதற்காகவே,
மறக்காது நான் 'பொதிகை' பார்ப்பதுண்டு.

'பல குரல் மன்னர்கள்' பல முறை முயன்றும்,
இவர் குரல் எவருக்கும் கிடைக்கவில்லை!

வியப்புடன்,
ராஜி ராம்
 
As a "screenarian" (a senior citizen spending his/her life in front of a screen)

I can spend my limited time only in front of one of the two screen...

The P.C or the T.V!

Since I have already committed myself to my maximum capacity, I hardly find

time to sit in front of the T.V and I happen to miss many good programs.
:clock:
 
பேராசிரியர் நன்னன் அவர்களின் தமிழ்ப் பாடங்களைப்
பேராவலுடன் நான் கேட்டது, சில ஆண்டுகளுக்கு முன்!:bounce:

அன்புடன்,
ராஜி ராம்
 
எப்போதுமே சக்திக்கு மீறின வேலைகளில் ஈடுபடுவது
தப்பாமல் என்னுடைய வாடிக்கை ஆகும் அல்லவா!

நன்னன் என்னும் தமிழ் மன்னன் என்று வந்திருந்தாலுமே
நான் அன்றும், இன்றும், என்றும் பார்த்திருக்கவே முடியாது!
:typing:
 
சக்திக்கு மீறின செயல்களைச் செய்வது தொடர,
சக்தி தரும் அன்னை சக்தியை வேண்டுகிறேன்! :pray:

அன்புடன்,
ராஜி ராம்
 
செயல்புரியவும், சிந்திக்கவும்
செய்விப்பவள் நம் அன்னையே!

யுக்தியும், புத்தியும் தந்து
சக்தியும் தருபவள் அவளே!

அன்புடன்,
v.r.

 
#81.
ஏரி = நீர் நிலை.
ஏறி = ஏறுதல்.
#82.
ஒருத்தல்=யானை.
ஒறுத்தல்=தண்டித்தல்.
#83.
கரி=அடுப்புக்கரி,யானை.
கறி = தின்னும் கறி,
#84.
கருத்து = எண்ணம்.
கறுத்து = கரிய நிறமாகி.
#85.
கரை = ஓரம்.
கறை = குற்றம்.
 

#86.
கீரி = ஒரு விலங்கு.
கீறி = பிளந்து.
#87.
குரங்கு = வானரம்.
குறங்கு = தொடை.
#88.
குரவர் = பெரியோர்.
குறவர் = மலை ஜாதியினர்.
#89.
குருகு = நாரை.
குறுகு = சுருங்கு.
#90.
குரை = ஒலி.
குறை = ஊனம்.
 
#91.
கூரை = வீட்டின் கூரை.
கூறை = புடவை.
#92.
சீரிய = சிறந்த.
சீறிய = சினந்த.
#93.
செரு = போர்.
செறு = வயல்.
#94.
சேரல் = இணைதல்.
சேறல் = சென்றடைதல்.
#95.
சொரிய=சிந்த,ஊற்று எடுக்க.
சொறிய = விரலால் சுரண்ட.
 
#96.
தரி = அணிந்துகொள்.
தறி = வெட்டு, நறுக்கு.
#97.
திரை = அலை, படுதா.
திறை = கப்பம்.
#98.
துரவு = கிணறு.

துறவு = சந்நியாசம்.
#99.
தெரித்தல் = தெரிவித்தல்.
தெறித்தல் = சிதறுதல்.
#100.
தேர = ஆராய, சிந்திக்க.
தேற = தெளிய.

 

#101.
நரை = வெள்ளை முடி.
நறை = தேன், வாசனை.
#102.
நிரை = வரிசை.
நிறை = நிறைவு.
#103.
பரந்த = பரவலான.
பறந்த=பற
வை போல
#104.
பரவை = கடல்.
பறவை = பட்சி.
#105.
பரி = குதிரை.
பறி = பிடுங்கு.
 
Related words for மயக்கு:

Becharm - மயக்கு , மருட்டு .

glamour : மயக்கு , வசியம் செய்

bewitch மயக்கு , மந்திரத்தால் கட்டுப்படுத்து , வசீகரி

Bewitch - மாயத்தால் மயக்கு , மருட்டு , சூனியம் வை , கவர்ச்சி செய் .

Infatuate - மருட்சியூட்டி அறிவிழக்கச் செய் , முட்டாளாக்கு , மயக்கு , மோகவலையுட்படுத்து .

Besot - மயக்கு , உணர்வு மழுங்கச்செய் , மட்டியாக்கு , கண்மூடிப்பற்றுக் கொள்ளு , மோகம் கொள்ளு .

Allure - கவர்ச்சி , மருட்சிப்பொருள் , மயக்கு , கவர்ச்சிசெய் , மருட்டு , மருட்சியூட்டு , வயப்படுத்து , சிக்கவை , ஆசைகாட்டி மயக்கு

Anaesthetise - மயக்க மருந்து கொடு , மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு , உணர்ச்சியில்லாது ஆக்கு , அறுவை சிகிச்சைக்காக விறைக்கச் செய் , மயக்கு 



Related words for மருட்டு:

Becharm - மயக்கு , மருட்டு .

Bewitch - மாயத்தால் மயக்கு , மருட்டு , சூனியம் வை , கவர்ச்சி செய் .

Beguile - ஏமாற்று , மருட்டு , வசியப்படுத்து , வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு .

Allure - கவர்ச்சி , மருட்சிப்பொருள் , மயக்கு , கவர்ச்சிசெய் , மருட்டு , மருட்சியூட்டு ,
வயப்படுத்து , சிக்கவை , ஆசைகாட்டி மயக்கு

மிரட்டு [ miraṭṭu ] , III . frighten , பயமுறுத்து ; 2 . infatuate , மயக்கு . (improp . for மருட்டு

courtesy:
Tamil dictionary. English to Tamil dictionary. :fish2:
 
#106.
பிரை = உறை மோர்.
பிறை = இளம் நிலவு.
#107.
புரம் = ஊர்.
புறம் = பக்கம்.
#108.
புரவு = காத்தல்.
புறவு = புறா
#109.
பொரி = நெல் பொரி.
பொறி = இயந்திரம், அடையாளம்.
#110.
பொரு = போர் செய்.
பொறு = பொறுத்துக் கொள்.
 
#111.
பொருப்பு = மலை.
பொறுப்பு = கடமை.
#112.
மரம் = விருட்சம்.
மறம் = பாவம்.
#113.
மரி = இறத்தல்.
மறி =தடுத்தல்.
#114.
மருகி = மருமகள்.
மறுகி = மயங்கி.
#115.
மரை = தா
மரை, மான்.
மறை = வேதம், ஒளித்து வைத்தல்.
 
மறம் என்றால் பாவம் என்பது மட்டுமல்லவே!
மறம் என்பது வீரத்தையும் குறிக்குமே!

வள்ளுவர் உரைத்தது வீரத்தையே:

'அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை'.
:fencing:
 
அறம் x மறம் என்ற பொருள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

(அறம் = நற்செயல், மறம் = தீச்செயல்)
:decision:

ஒவ்வவொரு சொல்லுக்கும் இன்னும் நிறைய பொருட்கள் இருக்கலாம்.
 
நமக்குத் தெரிந்த பொருட்களையும் இணைக்கலாமே என்பது, என் அவா!

அன்புடன், ராஜி ராம் :ranger:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top