P.J.
0
மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணா&#
மருத்துவமனையில் சோ.ராமசாமியிடம் கருணாநிதி நலம் விசாரிப்பு
July 20, 2015
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் சோ.ராமசாமியை திமுக தலைவர் கருணாநிதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
'துக்ளக்' ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி கடந்த ஆண்டில் இருந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த 3-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 3 மணி அளவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனியில் உள்ள அவரை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதே மருத்துவமனையில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.thehindu.com/tamilnadu...-கருணாநிதி-நலம்-விசாரிப்பு/article7443289.ece