• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாமிச உணவு பற்றி… – சோ

Status
Not open for further replies.
மாமிச உணவு பற்றி… – சோ

மாமிச உணவு பற்றி… – சோ

Cho_Ramaswamy_300.jpg


எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள்

கேள்வி : மாமிசம் சாப்பிடுவது பற்றி சாத்திரங்கள் என்ன சொல்கின்றன? அதிலும் குறிப்பாக, பிராமணர்கள் மாமிசம் சாப்பிடலாமா? இப்போது பிராமணர்கள் பலர் மாமிசம் சாப்பிடுகிறார்களே – அது சரிதானா?

சோ : இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். முன்பு – அதாவது நீண்ட, நெடுங்காலத்திற்கு முன்பு – எல்லோரும் மாமிச உணவை ஏற்றார்கள் – பிராமணர்கள் உட்பட. அது சர்வ சாதாரணமாக நடந்து வந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு நிகழ்ச்சியின் காரணமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது பற்றி, மஹாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ‘இனி பிராமணன் மாமிசம் சாப்பிடக் கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திய நிகழ்ச்சி அது. ‘இனி சாப்பிடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளதால், அதுவரை சாப்பிட்டார்கள் என்றுதான் ஆகிறது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி மஹாபாரதம் கூறுவதைப் பார்ப்போம்.


இல்வலன், வாதாபி என்ற இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் பலம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது என்பது, மிக மிகக் கடினம். நமது புராணங்கள், இதிஹாஸங்கள் – இவை எல்லாவற்றிலுமே ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. அசுரர்கள், அரக்கர்கள் ஆகியோர் கொடூரமானவர்களாக வர்ணிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் அவர்கள் பலமற்றவர்களாகவோ, கோழைகளாகவோ சித்தரிக்கப்படவில்லை; மிகவும் சக்தி படைத்தவர்களாக அவர்கள் கூறப்பட்டிருக்கிறார்கள்; அவர்களில் பலர் நன்கு படித்தவர்கள்; சாத்திரம் தெரிந்தவர்கள். அவர்களை வெல்வது கடினம் என்ற நிலைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் மாயவேலைகளில் நிபுணர்கள். நினைத்த உருவத்தை எடுப்பார்கள். அது தவிர, எந்த நெறிமுறைக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால், அவர்களுடைய தாக்குதல்கள், விதிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல் நடத்தப்பட்டன. அவர்களை எதிர்த்த நல்ல சக்திகளோ, பாவ புண்ணியத்திற்கு அஞ்சியும், நியாய அநியாயம் பார்த்தும் செயல்பட வேண்டியிருந்தது. இதனால் தீய சக்திகளின் கை ஓங்கி இருந்தது.


அதனால்தான், அந்தத் தீய சக்திகளை அழிப்பது கடினமாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில், கடவுளே ஒரு அவதாரம் எடுத்து வந்து, சில தீய சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டியிருந்தது.


இந்த இல்வலனும், வாதாபியும் பலரைக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அவர்கள் கையாண்ட வழிகளில் ஒன்று – விருந்து வைப்பது. ஒருவரை அழைத்து விருந்து வைப்பார்கள்; வாதாபியை வெட்டி, மாமிச உணவாகச் சமைத்து, விருந்தாளிக்கு இல்வலன் படைப்பான். விருந்தாளி சாப்பிட்டவுடன், ‘வாதாபி! வெளியே வா!’ என்பான் இல்வலன்.

உடனே விருந்துண்டவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வாதாபி வெளியே வருவான். விருந்துண்டவர், வயிறு கிழிபட்டு உயிர் துறப்பார். இப்படித் தங்களுக்கு வேண்டாதவர்கள் பலரை, மிகச் சுலபமாக அந்த அசுர சகோதரர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.


இதே வழியில் அகஸ்திய முனிவரைக் கொன்று விடத் திட்டமிட்ட அந்தச் சகோதரர்கள், அவரை விருந்துக்கு அழைத்தனர். வழக்கம் போல, வாதாபியை வெட்டி அவருக்கு விருந்து படைத்தான் இல்வலன். அவருடைய தவ வலிமையின் முன்பு, அந்த அசுரர்களின் மாயாஜாலம் எடுபடாததால், சாப்பிட்ட உடனேயே, நடந்தது என்ன என்பது அகஸ்தியருக்குப் புரிந்து விட்டது.அவர் உடனே ‘வாதாபி! ஜீர்ணோ பவ!’ என்றார். அதாவது ‘வாதாபி! நீ ஜீர்ணம் ஆகிவிடுவாயாக!’ என்றார் அகஸ்தியர். அவ்வளவுதான். அவன் ஜீர்ணமாகி விட்டான்.

இல்வலன் வழக்கம் போல, ‘வாதாபி! வெளியே வா!’ என்று உரக்கக் கூப்பிட்டான். ஆனால், எப்படி வருவான் வாதாபி? அவன்தான் ஜீர்ணமாகி விட்டானே! இல்வலன் பல முறை ‘வாதாபி! வெளியே வா!’ என்று கதறியும், வாதாபி வரவில்லை. அவன் அத்தியாயம் முடிந்தது. பின்பு இல்வலன் வீழ்த்தப்பட்டான்.அன்று இம்மாதிரி நடந்தவுடன் அகஸ்தியர் சொன்னார்: ‘இந்த நிலை ஏன் வந்தது? நான் மாமிசம் சாப்பிட்டதால்தான், இப்படி நேர்ந்தது. அதனால் இனி ஒரு விதி செய்கிறேன். இனி பிராமணர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது; மதுவையும் தொடக் கூடாது!’ என்றார்.இப்படி அகஸ்திய முனிவர், ஒரு விதிமுறையை ஏற்படுத்தினார். அவருடைய ஆணை அது. அதிலிருந்துதான் பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுவது கிடையாது என்ற பழக்கம் வந்திருக்கிறது.

ஆனால், இன்றைக்கு உள்ளவர்கள், அகஸ்தியருக்கு முந்தைய காலத்திற்குத் திரும்பப் போய் விட்டார்கள்! இன்று நாம் எல்லாவற்றிலும் பின்னோக்கித்தானே போகிறோம்! அப்படி இதிலும் பின்னோக்கிச் சென்று, அகஸ்தியருக்கு முன்பு இருந்த பழக்கத்தை இன்று சிலர் ஏற்றிருக்கிறார்கள்.


https://balhanuman.wordpress.com/2011/10/24/16-மாமிச-உணவு-பற்றி-–-சோ/
 
We are vegetarians by habit. Are there good descriptions as to why one should be a vegetarian?
It is good for ecology since most greenhouse gases are due to meat production affecting global climate change . Violence of poor animals can be minimized. What else? Why only Brahmins have to be vegetarians? Why not everyone?
 
Very Apt! Cho displays his intelligence and sagacity to share this relevant story! Thanks to PJ Sir for being a Beeshma Pitamah in highlighting this in our site! It will be a learning to one and all!
 
Vegetarianism was, in all probability, accepted after the rise of Jainism.

Noted Historians say that during vedic period, Bs used to take meat.
 
We should remember that Bengali brahmins regularly consume fish which is a sine qua non for them. Both in Bengal and Assam, even the brahmin devotees consume meat from the animals slaughtered in Kalighat and Kamakhya temples. Our very own tabra deekshitars used to fry the maet of the goat slaughtered in the vedic yagas and eat it; only then they could become "deekshitar"!

Vegetarianism, or rather lacto-vegetarianism was adopted by tabras coming into Tamil land from the north, when they observed the high regard here for the Jains and the Jain Munis. That was one of the many steps (reforms) the brahmins probably brought in their life style in order to attain social eminence which was their prerogative in the ancient AryAvarta.
 
This is a tale from the tundra:

A bear wondered how the moose and the reindeer had long hard things growing on their heads while he did not. And so he invited them to sit and think about it. After some time the reindeer said, "My head aches with thinking," and galloped away. The moose sat for some more time, and then said, "I am getting a pain in the head," and went off.

The bear exclaimed, "they cannot sit and think. That is why they have those things on their heads!"
 
இல்வலன் வழக்கம் போல, ‘வாதாபி! வெளியே வா!’ என்று உரக்கக் கூப்பிட்டான். ஆனால், எப்படி வருவான் வாதாபி? அவன்தான் ஜீர்ணமாகி விட்டானே! இல்வலன் பல முறை ‘வாதாபி! வெளியே வா!’ என்று கதறியும், வாதாபி வரவில்லை. அவன் அத்தியாயம் முடிந்தது. பின்பு இல்வலன் வீழ்த்தப்பட்டான்.அன்று இம்மாதிரி நடந்தவுடன் அகஸ்தியர் சொன்னார்: ‘இந்த நிலை ஏன் வந்தது? நான் மாமிசம் சாப்பிட்டதால்தான், இப்படி நேர்ந்தது. அதனால் இனி ஒரு விதி செய்கிறேன். இனி பிராமணர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது; மதுவையும் தொடக் கூடாது!’ என்றார்.இப்படி அகஸ்திய முனிவர், ஒரு விதிமுறையை ஏற்படுத்தினார். அவருடைய ஆணை அது. அதிலிருந்துதான் பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுவது கிடையாது என்ற பழக்கம் வந்திருக்கிறது.

I feel Agastya made a mistake. If only brahmins had continued eating meat, many more vAtApis would/could have been exterminated in such easy manner, just with a burp! Now brahmins stopped eating meat and the tribe of vAtApi-ilvala increased!
 
hi guys this is what i know abt foods we eat...we can eat a balanced foods...i dont think its wrong eating non veg a little...from lower beings to higher beings everything has a soul...

Tamasic-sedative effect on mind and body.Ex:meat of an animal, fish, the fertilized egg, onion, garlic, scallion, leek, chive, mushroom, alcoholic beverages, blue cheese, eggplant, opium, and any food which has been kept overnight before consumption.

Rajasic-Stimulating effect on mind and body.Ex:caffeinated drinks (such as coffee, tea (both black and green), cola drinks, and energy drinks), brown or black chocolate, paan, ginkgo biloba, overly spicy food, salty food, and the unfertilized egg.

Sattvic-lead to clarity of mind and physical health.Ex:water, cereal grains, legumes, vegetables, fruits, nuts, unpasteurized and unhomogenized fresh milk and all fresh milk derivatives (mostly ghee, but also butter, cream, fresh or cottage cheese (paneer), and yogurt (lassi)), and raw honey.

normally young age group people who are healthy can take non veg till their 40yrs...its from my experience (ALONE)...i am saying this...dont take this in mind.still i dont eat non veg..
 
"வாதாபி! ஜீர்ணோ பவ" is often recited after a heavy meal even now in B families and with a soft wave of the hand over the tummy of the young kids when they have stomach problems!
 
It is said eggs are used in preparing cakes; animal fats are mixed in certain oils;
As such no body is AABs (After Agasthiar Bra....s)
All are BABs (Before Agasthiar Bra....s)
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top