P.J.
0
ரயில் முன்பதிவு: ஆக. 15 முதல் விரும்பிய இருக&#
ரயில் முன்பதிவு: ஆக. 15 முதல் விரும்பிய இருக்கையை பெறும் வசதி அறிமுகம்!
புதுடெல்லி: ரயிலில் விரும்பிய இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் புதிய மென்பொருளை இணைத்து ‘அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்திற்கான முன்பதிவை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது.
அதிகபட்சமாக சைட் பெர்த், லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் என்ற விருப்பத்தை மட்டுமே குறிப்பிட முடியும். நாம் குறிப்பிடும் அந்த இருக்கை, அதிக இடங்கள் காலியாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். அதாவது முதலில் எஸ்-1 பெட்டிக்கான முன்பதிவு நடைபெற்றால் அதில் உள்ள இருக்கைகள் அனைத்தும் காலியான பின்னரே அடுத்த பெட்டிக்கான முன்பதிவு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், எஸ்- 2 பெட்டியில் நாம் விரும்பும் இருக்கை காலியாக இருந்தாலும் கிடைக்காது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை வசதி, பெட்டி ஆகியவற்றை பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். பயணிகளுக்கு விருப்பமான உணவுகள் ரயில்களில் வினியோகிக்கப்படும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு தேவையான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் உணவு வழங்கப்படும்போது அதற்கான பணம் பெறப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் உள்ள மென்பொருளில், புதிய மென்பொருளை இணைத்து ‘அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் விரும்பிய இருக்கைகள் கிடைப்பதோடு, நிமிடத்துக்கு 2 ஆயிரம் முதல் 7200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும்.
மேலும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக அந்தந்த பகுதிகளில் பிரபலமாக திகழும் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் பெறும் பணியும் நடந்து வருகிறது. ரூ.100 கோடி செலவில் நடைபெறும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் இந்த வசதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
????? ?????????: ??. 15 ????? ????????? ????????? ?????? ???? ????????!