• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராகு-கேது பெயர்ச்சி - பொதுப் பலன்கள்

Status
Not open for further replies.
ராகு-கேது பெயர்ச்சி - பொதுப் பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி - பொதுப் பலன்கள்


- ஜோதிடர் சந்திரசேகர பாரதி



திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 12-7-2014, ஜய வருஷம், ஆனி மாதம் 28-ஆம் தேதி, சனிக்கிழமை, பிரதமை, உத்திராட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய நாளில் இரவு 9.58 மணிக்கு ராகு கன்னி ராசிக்கும், கேது மீன ராசிக்கும் இடம் மாறுகிறார்கள்.


30-01-2016 வரையிலும் உலவிவிட்டு, அதன்பிறகு ராகு சிம்ம ராசிக்கும் கேது கும்ப ராசிக்கும் இடம் மாறுவார்கள்.


ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும் கிரகங்கள் ஆவார்கள். ராகுவுக்கு நேர் எதிரில் (7-ஆம் இடத்தில்) 180 டிகிரியில் கேது பயணிப்பார். இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சியும் ஒரே நேரத்தில் ஆகும். ஜாதகத்தில் இவர்களில் ஒருவர் நல்ல இடத்தில் சஞ்சரிக்கும்போது இன்னொருவர் கெட்ட இடத்தில் சஞ்சரிக்கும் நிலை அமைவது இயற்கை. இருவரின் சஞ்சாரமுமே சிலருக்கு சிறப்பாக அமையாமல் போவதும் உண்டு. என்றாலும் தாங்கள் அமர்ந்த சார (நட்சத்திர) அடிப்படையில், நட்சத்திர அதிபனின் பலத்தை ஒட்டி நற்பலன்களைத் தருவார்கள்.



raagukethu.jpg
ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சரிப்பார்கள்.


ராகுவும் கேதுவும் நமது கர்மப் பலனைத் தரும் கிரகங்களாவார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் உருவமில்லாத நிழல் (சாயா)கிரகங்கள் ஆவார்கள். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. தாங்கள் இருக்கும் இடத்தின் தன்மையைப் பொருத்தும், தங்களுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்களின் தன்மையைப் பொருத்தும் பலன் தருவார்கள். மற்றக் கிரகங்களின் சக்தியைத் தன் சக்தியாகக் கிரகித்துக் கொண்டு பலன் தருபவர்கள் ராகுவும் கேதுவும்.


பொதுவாக ராகு சனியைப் போன்றும் கேது செவ்வாயைப் போன்றும் பலன் தருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.


ராகுவும் கேதுவும் ராசிக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்களில் உலவும்போது சுப பலன்களைத் தருவார்கள். இதர இடங்களில் உலவும்போது கெடுபலன்கள் உண்டாகும்.


ராகுவும் கேதுவும் ராசிப்படி அனுகூலமான இடத்தில் அமையாமல் போனாலும் உங்கள் ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ஆவது நட்சத்திரங்களில் உலவும்போது நற்பலன்களைத் தருவார்கள்.


கோசாரத்தில் ராகுவும் கேதுவும் கெட்ட இடங்களில் இருந்தாலும் ஜனன கால ஜாதகத்தில் வலுத்திருந்தாலோ, ஜாதக அமைப்புப்படி இந்த ராகு, கேது பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை புக்தி அந்தரங்கள் நடைபெற்றாலோ கவலைப்படத் தேவையில்லை.


கோசாரத்திலும், ஜாதகப்படியும் ராகு, கேதுக்களின் நிலை சரியாக இல்லாதவர்களுக்கே கெடுபலன்கள் அதிகமாகும். அப்படிப்பட்டவர்கள் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது அவசியமாகும்.


ராகு நீச ஜாதியில் பிறந்தவர். அலி கிரகமாகும். கறுப்பு நிறம் கொண்டவர். தாமச குணம். சர்ப்பேஸ்வரனை வழிபடுவதன் மூலம் நலம் புரிபவர். இவரது அதிதேவதை துர்கை ஆவாள்.

காமதேனுவை வழிபடுவதன் மூலம் நலம் புரிவார். இவரது வாகனம் ஆடு ஆகும். ஆட்டுக்கு இலை தழைகளை அளிப்பதன் மூலமும் பிரீதி உண்டாகும். புளிப்பான உணவுப் பொருட்களை ராகுவுக்கு நைவேத்தியம் செய்து, தானும் உண்டு, மற்றவர்களுக்கும் வழங்குவது நல்லது. உளுந்து தானம் செய்யலாம். கோமேதகம் அணியலாம். கருப்புப் பட்டு அணிந்து கொள்ளலாம்.


ராகுவுக்குரிய காயத்ரி மந்திரத்தையும், ஸ்லோகங்களையும், அஷ்டோத்திரத்தையும் சொல்வது நல்லது.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபடுவதன் மூலமும் நலம் பெறலாம்.
கேது நீச ஜாதியில் பிறந்தவர். அலி கிரகமாகும். பல வண்ணக்கலப்புடையவர். தாமச குணம் கொண்டவர். பிரம்மா, சித்ரகுப்தன், விநாயகர் ஆகியோரை வழிபட கேதுவால் நற்பலன்கள் பெறலாம். இவரது வாகனம் சிங்கம் ஆகும்.

புளிப்பான உணவுப் பொருட்களைக் கேதுவுக்கு நைவேத்தியம் செய்து, தானும் உண்டு, மற்றவர்களுக்கும் வழங்குவது நல்லது. கொள்ளு தானம் செய்யலாம். வைடூரியம் அணியலாம். சிவப்புப் பட்டு அணிந்து கொள்ளலாம்.


கேதுவுக்குரிய காயத்ரி மந்திரத்தையும், ஸ்லோகங்களையும் அஷ்டோத்திரத்தையும் சொல்வது நல்லது.
வெள்ளிக்கிழமை எமகண்ட காலத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் நலம் பெறலாம்.



ராகு காயத்ரி:



ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.


ராகு ஸ்லோகம்:



அர்த காயம் மஹா வீரம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.



கேது காயத்ரி:




ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.


கேது ஸ்லோகம்:



பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.


ராகுவுக்கும் கேதுவுக்கும் திருக்காளஹஸ்தி விசேடமான பரிகாரத் தலமாகும். ராகுவுக்குத் திருநாகேஸ்வரம் சென்று வழிபடுவதும் சிறப்பாகும். கேதுவுக்கு கீழ்ப்பெரும் பள்ளம் சிறப்பானதாகும்.
இந்த முறை ராகு கன்னி ராசியிலும், கேது மீன ராசியிலும் உலவுவதால் புதன்கிழமைகளில் ராகுவுக்காக துர்கையையும் வியாழக்கிழமைகளில் கேதுவுக்காக விநாயகரையும் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நலம் கூடப் பெறலாம்.



ராகுவும் கேதுவும் உபய ராசிகளில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் நலம் உண்டாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். புதிய தொழில் சொந்தமாகத் தொடங்க பலருக்கு வாய்ப்பு உண்டாகும். விஷ முறிவு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.

ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். அந்நிய முதலீடு உயரும்.



மேஷம் முதல் கன்னி வரை ராகு-கேது ராகு, கேது பெயர்ச்சியால் விளையக்கூடிய பொதுப்பலன்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.



http://www.vikatan.com/new/astrology/index.php?type=article&nid=7953????-???? ??????????? ??????? - ????? ????? ????? ???



துலாம் முதல் மீனம் வரை ராகு-கேது ராகு, கேது பெயர்ச்சியால் விளையக்கூடிய பொதுப்பலன்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.


http://www.vikatan.com/new/astrology/index.php?type=article&nid=7954????-???? ??????????? ??????? - ?????? ????? ????? ???



????-???? ????????? - ?????? ???????
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top