• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை

Status
Not open for further replies.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை

சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் - திருப் பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா..? ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு "பலபல" என்றும் பொருள் உண்டு. "பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே" என்று ஆழ்வார் சொல்கிறார். எல்லோரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

"சஹஸ்ரநாமம்" என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது. ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை பண்ணிக் கொண்டிருந்த பொது, தம் சிஷ்யரை அழைத்து புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி சொன்னார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்கு திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம். "நான் இதைக் கேட்கலியே.. நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா.. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே" என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது. அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிறார். "நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? "சுவாமி, நான் என்ன செய்வேன். அங்கே போய் லலிதா சஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு அதை வைச்சிடு, இதை எடுத்துண்டுபோன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்" என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைக்கிறார். "அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..." அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான லலிதமான சஹஸ்ரநாமம், எல்லோரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.


ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.



ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஜானிகளுள் அக்ரகண்யரான பீஷ்மரால்... பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம். அம்புப் படுக்கையில் இருக்கிறார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சொல்கிறார் பகவான் கிருஷ்ணர் "அணையும் நெருப்பைப் போல இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ, அவர் சொல்வதைப் போய்க் கேள்" என்று தர்மபுத்திரரை அனுப்புகிறார்.

"ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே தர்மத்தைச் சொல்ல" என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்கணும். இந்த உண்மைக்கு சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை - கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.



பராசர பட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணியிருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர். பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி என்று பொருள்.



விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்... அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்.

சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக்கூடக் காட்டவல்லது இல்லையா... அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்ன திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.



இந்த பகவத் குணதர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹாஸ்ரநாமத்துக்கு உரிய ஏற்றங்களைச் சொல்கிறார். ஆறு வித உயர்வுகளைச் சொல்கிறார்.

1. மகாபாரத சாரம்:



ரசாலு என்று ஆந்திர தேசத்திலே ஒருவகை மாம்பழம் வருவதுண்டு. வெயில் காலத்திலே வரும். அதைப் பிழிந்தால் மொத்தமும் ரசமே கொட்டும். அதைப் போலவே மகாபாரதம் ஒரு பெரிய ரசாலு என்று வைத்துக் கொண்டால், அதைப் பிழிந்தால் வரக்கூடிய சாறு சஹஸ்ரநாமம். மகாபாரதக் கதை முழுவதும் அதில் இருக்கிறது. மகாபாரதத்துக்கு அப்படி என்ன சிறப்பு...? "சாப்பிட்டால் வடையே சாப்பிடணும், கேட்டால் மகாபாரதக் கதையே கேட்கணும்" என்கிற அர்த்தத்திலே ஒரு தெலுங்கு பழமொழி உண்டு.

தர்மத்தைச் சொல்வது மகாபாரதம். "மகா" பாரதம் என்று ஏன் அதற்குப் பெயர் உண்டாயிற்று...? பெரிதாக பளுவுடையதாக இருப்பதாலே அந்தப் பெயர்.. அளவிலும் பளு, புத்திக்கும் பளு.. சாமான்யனின் புத்திக்கு வடிவமாகச் சொல்லியிருக்கிறது. தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்ற சதுர்வித புருஷார்த்தத்திலேயும் தெளிவான ஞானம் பிறக்க வழி, மகாபாரதம். வேத சாகரத்தை (சமுத்திரத்தை) வியாசரின் புத்தியாகிற மத்தினாலே கடைந்து பெற்ற உயர்ந்த வெண்ணெய் போன்றது மகாபாரதம். இப்படி வேத ஸாரமான மகாபாரதத்தின் ஸாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.



2. மகரிஷிகளாலே நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:

ரிஷிகளுக்கும் நம்மைப் போன்ற நித்ய சம்சாரிகளுக்கும் வித்தியாசமில்லையா...? நம் பார்வை ஒரு வரையறைக்குட்பட்டது. மகரிஷிகளின் பார்வையோ உயர்ந்த ரீதியிலே வஸ்துவாகப் பார்க்காமல் அதன் உள்ளே இருக்கிற சக்தியைக் காணக்கூடியது. உடல்மிசை உயிரெனக் கறந்து எங்கும் பரந்துளன் - உடலுக்குள் உயிர் மறைந்துள்ளது போல் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான் பரமாத்மா. இதுக்கு ஒரு கதை...



சுக பிரும்ம மகரிஷி ஒரு தடாகக் கரை வழியே வேகமாக நடந்து போனார். அவர் அவதூதர். திருமேனியில் வஸ்திரம் கூட இல்லை. தடாகத்தில் சில அப்ஸர ஸ்திரீகள் நீராடிக் கொண்டிருந்தனர். அத்தனை ஸ்திரீகளும் சுக பிரும்மரைப் பார்த்தனர். அவரும் அவர்களைப் பார்க்கிறார் - அவர் மனசில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. அந்த ஸ்திரீகளும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொள்ளவில்லை.



சுகபிரும்மரைத் தொடர்ந்து வந்தார் அவர் தந்தையான வியாசர். "ஹே புத்ரா" என்று அழைத்தபடி வந்தார். அவர் குரலைக் கேட்டதுமே மான சம்ரக்ஷணம் செய்து கொண்டார்களாம். வியாசர் அந்த ஸ்திரீகளிடம் வந்தார். "நான் வயோதிகன்; அவனோ சின்னப் பையன்.. அப்படியும் என்னைக் கண்டதும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொண்டதேன்..? இது என்ன விபரீத ஆசாரம்?" என்று கேட்டார். "இந்த கேள்வியை உங்கள் பிள்ளை கேட்டாரா? எங்களைத் திரும்பிப் பார்த்தாரா? அவர் தன்மை எங்களுக்குத் தெரியும். நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று நினைப்பவர்; சர்வ பதார்த்தங்களிலும் பகவானைப் பார்க்கிறார். நீர் இன்னும் கீழ்ப்படியில் இருக்கிறீர். ஆகையினாலே உங்களைக் கண்டால் பயப்பட வேண்டியிருக்கிறது என்றார்களாம் அப்ஸர ஸ்திரீகள். இதனால் வியாசரைக் குறைத்துச் சொன்னதாக அர்த்தம் ஆகாது. ஒருத்தரைக் குறைச்சுச் சொல்றமாதிரி சொல்லி அடுத்தவரை உயர்த்திச் சொல்றது. இதை "நஹி நிந்தா ந்யாயம்" என்பார்கள். சுகபிரும்மரைப் போல் எதிலும் பகவானைப் பார்க்கும் ரிஷிகள், பகவான் நாமத்தைத் தனியே சொல்ல வேண்டியதில்லை... ஆனால் அப்படிப்பட்ட ரிஷிகளே விஷ்ணு சஹாஸ்ரநாமத்தைக் கானம் பண்ணுகிறார்கள். அனைத்து ரிஷிகளும் அபிப்ராய பேதமின்றி பண்ணுகிறார்கள்.

3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:



வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள். விபஜிக்கிறவர்..? பிரிக்கிறார்.



கலியுகத்திலேதான் நால் வேதங்களை நான்கு பிரிவினர் தனித்தனியே சொல்கிறார்கள். கிருத யுகத்திலே அப்படியில்லை. எல்லா வேதங்களையும் பூர்ணமாகக் கற்று உணர்ந்திருப்பார்கள். ரிக் வேதம் சொல்லும் என்றால் சொல்வார்கள்; சாம கானம் பண்ணும் என்றால் பண்ணுவார்கள்.. எல்லாவற்றையும் சேர்த்து தரித்தார்கள். இப்போது கலியுகமானதினாலே மந்த புத்தியும் மந்த பாக்யமும் உடையவர்களாயிருக்கிறோம்.



ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலேயும் அடுத்து வரப் போகிற கலியுகத்து மனிதர்களுக்கு உதவும்படியாகப் பரமாத்மாவே வியாசாவதாரம் பண்ணுகிறார். வேத சாரத்தை விபஜித்துக் காட்டுகிறார். பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்கு விபஜித்துத் தருகிறார். இப்படி வசிஷ்டர் ஒரு முறை வியாசாவதாரம் பண்ணியிருக்கிறார். பகவானே கருணை கொண்டு வேத வியாசராய் அவதரித்து வழங்கியது மஹா பாரதம். சாரம் பகவத் கீதை; அதன் சாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம். ரிஷிகள் கானம் பண்ணிய விஷ்ணு சகஸ்ர நாமத்தை பகவானே அடையாளம் காட்டியிருக்கிறார்.

4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:



ஆங்கிலத்திலே "superlative degree" என்றொரு வார்த்தை சொல்வதுண்டு. அதற்கு மேலாக ஒன்றும் கிடையாது. ஒப்பு உயர்வு சொல்ல முடியாமல் பெருமை உடையது என்று பீஷ்மரே ஏற்று விஷ்ணு சகஸ்ர நாமத்தை எடுத்து ஆண்டிருக்கிறார். "மகரிஷிகளால் கானம் பண்ணப் பட்ட பரம நாமம்" என்று போற்றி உகந்திருக்கிறார்.

5. நோய் தீர்க்க வல்லது:



வைத்ய சாஸ்திரமான சரக சம்ஹிதையிலே சொல்லியிருக்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லக் கேட்டால் வியாதிகள் போகும்! முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வேடிக்கையாச் சொல்வார். "எல்லோரும் உபநிஷத்படி நடக்கிறார்கள் - மாத்திர பலத்தை நம்புகிறார்கள்" என்று. உபநிஷத் சொல்லும் மாத்ரா பலம் - வேத கோஷங்களின் ஒலி மாத்திரைகளுக்கு உள்ள சக்தியை. நாம் நம்புவதோ மாத்திரை (tablet) பலத்தை. அந்த நரசிம்ஹனே பலம் என்று நம்பி சஹாஸ்ரநாமத்தைப் பூரணமாய்ச் சொல்லி மூன்று தடவை தீர்த்தம் கொடுத்தால் தலைவலி போய்விடும். அந்திம காலத்தை தடுக்கக் கூடிய சக்தி கூட சகஸ்ர நாமத்துக்கு இருக்கிறது.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.

6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:

கீதைக்கு சமானமா ஏதாவது உலகத்திலே உண்டா என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத் சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய பீஷ்மர் சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ர நாமம். பகவானை காட்டிலும் பீஷ்மர் உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.



துளி கூட மிச்சமின்றி அந்த ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி எழுதினாலும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது.


KURAI ONDRUM ILLAI: PART-1, Chapter-3

 
Vishnu Sahasranamam – 1008 Names of Lord Vishnu

Vishnu Sahasranamam – 1008 Names of Lord Vishnu

June 9, 2015


The legend would have it that at the end of the epic Mahabharata war, Bhishmacharya was awaiting the sacred hour to depart from his physical body unto the lotus feet of the Lord. Yudhishtira, the eldest of the Pandavas, was desperately looking for the answers to matters relating to Dharma and Karma. Lord Sri Krishna, who understood Yudhistira’s uneasy mind, guided him to Bhishma to learn insight in to this precious knowledge. It is relevant to mention that Bhishma was acknowledged to be one of the twelve most knowledgeable people. The other eleven being Brahma , Narada , Siva , Subramanya , Kapila , Manu , Prahlada , Janaka , Bali, Suka and Yama .

Why were these 1008 names chosen?



Does the Lord get absolutely defined by these one thousand names? The Vedas affirm that God is neither accessible to words nor to mind. It is said that you cannot comprehend the Paramatma with the human mind alone, even if you spend all your life trying! Given this infinite nature of the Paramatma, who is not governed or constrained by any of the physical laws as we know them, the choice of a thousand names of Vishnu by Bhishma should be recognized as a representation of some of his better known qualities that are repeatedly described in our great epics.


Some might say that they do not understand the meaning of the Sanskrit words, and therefore do not feel comfortable chanting them. But learning the chanting of prayers even without knowing the meaning is a worthwhile act, and can be compared to finding a box of treasure without the key. As long as we have the box, we can open it whenever we get the key of knowledge later. The treasure will be there already.


Others might feel that they do not know the correct Sanskrit pronunciation, and do not want to chant incorrectly. There is an analogy of a mother to whom a child goes and asks for an orange. The child does not know how to pronounce the word “orange” and so asks for “ange”. The mother does not turn away the child and does not refuse to give the child the orange just because the child does not know how to pronounce the word. It is the bhaava (spirit) that matters, and so as long as one chants the name of God with sincerity, considerations such as not knowing the meaning, not knowing the pronunciation, etc., do not matter, and God will confer His blessings on us, there is no way a devotee of Vishnu can meet with any dishonor or disgrace of any kind.


The Benefits:



Traditionally our prayers end with a phala sruti – a section on the benefits of reciting the prayer. The Vishnu Sahasranama is no exception.


The necessity of cleansing our body regularly to maintain hygiene and good health is recognized by everyone. But with the busy nature of today’s world, we do not see our mind the same way as we see our body. As a consequence, the need for keeping our minds clean is not appreciated.


Those who do not cleanse their mind on a regular basis become mentally ill over a period of time.

Prayers are a means to mental cleansing when they are chanted with sincerity and devotion. The importance of chanting Sri Vishnu Sahasranama is that the deity being worshiped is none other than Vasudeva. Sri Vedavyasa, who was responsible for stringing the naamas together in a poetic form, points out that it is by the power and command of Vasudeva that the Sun, the Moon, the stars, the world and the oceans are controlled. The whole universe of the Gods, Asuras and Gandharavas is under the sway of Lord Krishna. In Bhishma’s expert judgment, chanting Vasudevas’s name with devotion and sincerity will ensure relief from sorrows and bondage. The person who recites is not the only one who benefits, but also those who for whatever reason are unable to chant benefit by just hearing the chanting as well.


https://www.youtube.com/watch?v=5NkfF3ZVCIo


Read more from here
Vishnu Sahasranamam - 1008 Names of Lord Vishnu - TemplePurohit.com - Your Spiritual Stream | Get Divine Blessings
 
Vishnu Sahasranamam – 1008 Names of Lord Vishnu

June 9, 2015


It is relevant to mention that Bhishma was acknowledged to be one of the twelve most knowledgeable people. The other eleven being Brahma , Narada , Siva , Subramanya , Kapila , Manu , Prahlada , Janaka , Bali, Suka and Yama .

Who is Siva mentioned above? Does it refer to Lord Shiva or any saint in the name of Siva?
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top