• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

Status
Not open for further replies.
44. மாணவன் இலட்சணம்

காக்கையின் பார்வையும் நாயின் நலிவுற்ற
தூக்கமும் கொக்கின் கவனமும் அத்துடன்
சொற்ப உணவு எளிய உடையிவை
கற்றிடும் மாணவன் சான்று.
---நீதிசாரம் 112

kAkadRShTirbakadhyAnaM shvAnanidrA tathaiva cha |
alpAhAraM jIrNavastraM etadvidyArthilakShaNam ||
---~nItisAraH 112

काकद्ष्टिर्बकध्यानं श्वाननिद्रा तथैव च ।
अल्पाहारं जीर्णवस्त्रं एतद्विद्यार्थिलक्षणम् ॥
---~नीतिसारः 112

*****

44. அணிகலன்

நற்குணமே தோற்றத்தின் நல்லிழையாம் -- நன்னடத்தை
உற்ற குடும்பத்தின் நல்லிழை -- வெற்றியே
கற்றறிந்த கல்விக்கு நல்லிழை -- துய்த்தலே
பெற்ற பொருளுக்(கு) அணி.
---நீதிசாரம் 115

guNo bhUShyate rUpaM shIlaM bhUShyate kulam |
siddhirbhUShyate vidyAM bhogo bhUShyate dhanam ||
---~nItisAraH 115

गुणो भूष्यते रूपं शीलं भूष्यते कुलम् ।
सिद्धिर्भूष्यते विद्यां भोगो भूष्यते धनम् ॥
---~नीतिसारः 115

*****
 
45. பழமையும் புதுமையும்

தொன்மை யுடையதெல்லாம் நன்மையென் றில்லையே
அண்மையென் றாவதால் அற்பமென் றில்லையே
கற்றோர்தம் கூர்மதியால் சீர்தூக்கித் தேர்ந்தெடுப்பர்
அற்பருக்கோ மற்றவர் சொல்.
---மஹாகவி காளிதாசர், மாளவிகாக்னிமித்ரம்

purANamiyeva na sAdhu sarvam
na chApi kAvyaM navamityavadhyam |
santaH parIkShayAtanyatarat bhajantE
mUDhaH para pratyeya neya buddhiH ||
---mahAkavi kAlidAsa, mAlavikAgnimitram

पुराणमियेव न साधु सर्वम्
न चापि काव्यं नवमित्यवध्यम् ।
सन्तः परीक्षयातन्यतरत् भजन्तॆ
मूढः पर प्रत्येय नेय बुद्धिः ॥
---महाकवि कालिदास, मालविकाग्निमित्रम्

Everything is not good, merely because it is ancient.
New innovations should not be looked down upon, because they are new.
Wise persons accept ideas after due examination and consideration.
Only the fool has his intellect influenced by others.
---Translation by V.K.Subramanian, 'Wondrous Wispers of Wisdom from Ancient India'

*****
 
46. மனித உருவில் விலங்கு

கல்வியோ தானமோ ஞானம் தவமுயல்வோ
நல்லொழுக்கம் நற்குணம் அன்றி அறவாழ்வோ
இல்லாதான் மாளுபுவி பாரமெனச் சஞ்சரிக்கும்
மானிடம் போர்த்த விலங்கு.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம், 13

yeShAM na vidyA na tapo na dAnaM
j~jAnaM na shIlaM na guNaH na dharmaH |
te martyaloke bhuvi bhArabhUtAH
manushhyarUpeNa mRugAH charanti ||
---bhartRuhari, nIti shatakam, 13

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणः न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूताः
मनुश्ह्यरूपेण मृगाश्चरन्ति ॥
---भर्तृहरि, नीति शतकम्, 13

*****

47. கற்றோர் சிறப்பு
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

சாத்திரங்கள் சாற்றிடும் சொற்களின் நாத்திறமும்
கற்போர்கொள் நல்லறிவும் கொண்டுள்ள விற்பன்னர்
ஏழ்மையில் வாழ்வது வேந்தனின் பேதமையே
ஏழ்மையிலும் கற்றறிந்தோர் கொற்றவரே -- நீலமணிக்
கல்லின் குறைவிலை கொல்லன் குறையன்றிக்
கல்லின் குறைபாடோ சொல்.
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15

shAstropaskRutashabdasundaragiraH shiShyapradeyagamA
vikhyAtAH kavayoH vasanti viShaye yasya prabhornirdhanAH |
tajjADyaM vasudhAdhipasya kavayastvarthaM vinApIshvarAH
kutsyAH syuH kuparIkShakA ki maNayo yairghataH pAtitAH ||
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयगमा
विख्याताः कवयोः वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधाधिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका कि मणयो यैर्घतः पातिताः ॥
---भर्तृहरि, नीति शतकम्, 15

*****
 
48. மிஞ்சினால் விஞ்சுவன

அணையா நெருப்பும் அடையாக் கடனும்
தணியா விரோதமும் தீராதே எஞ்சினால்
மீண்டும் வளர்ந்தோங்கித் தீண்டும்; இவையெல்லாம்
பூண்டோ(டு) அழித்தல் நலம்.

agniH sheShaM RuNaH seShaM shatruH sheShaM tathaiva cha |
punaH punaH pravardheta tasmAt sheShaM na kArayet ||

अग्निः शेषं ऋणः सेषं शत्रुः शेषं तथैव च ।
पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषं न कारयेत् ॥

*****

49. காற்றும் நெருப்பும்

காட்டில் எரியும் நெருப்புக்குக் கைகொடுத்து
மூட்டிவிடும் தோழனாய் ஆதரிக்கும் காற்றதுவே
வீட்டில் எரியும் விளக்கை அணைத்துவிடும்
வல்லமையே தோழமை காண்.

vanAni dahato vahneH sakhA bhavati mArutaH |
sa eva dIpanAshAya kRushe kasyAsti sauhRudam ||

वनानि दहतो वह्नेः सखा भवति मारुतः ।
स एव दीपनाशाय कृशे कस्यास्ति सौहृदम् ॥

*****

50. எண்ணெயும் நீரும்

ஊர்விட்டூர் சென்று உரைசால் பெருமக்கள்
ஊரில் உடன்தங்கிக் கற்போனின் ஞானமே
நீரிட்ட எண்ணெய்த் துளிபோல் பரவிடப்
பேரும் புகழும் வரும்.

yastu sa~jcharate deshAn sevate yastu paNDitAn |
tasya vistAritA buddhistailabindurivAmbhasi ||

यस्तु सञ्चरते देशान् सेवते यस्तु पण्डितान् ।
तस्य विस्तारिता बुद्धिस्तैलबिन्दुरिवाम्भसि ॥

*****
 
51. விந்தையான செல்வம்

கலைமக ளேநீ கனிவோ(டு) அருளும்
விலையிலாச் செல்வமிது வேறெங்கும் கிட்டாது
அள்ளிக் கொடுத்தாலோ பல்கிப் பெருகிடுமே
உள்வைத்தால் போகும் நசித்து.

apUrvaH kO&pi kosho&yaM vidyate tava bhArati |
vyayato vRuddhimAyAti vyayamAyAti sa~jchayAt ||

अपूर्वः कॊऽपि कोशोऽयं विद्यते तव भारति ।
व्ययतो वृद्धिमायाति व्ययमायाति सञ्चयात् ॥

*****

52. விளக்கு

இரவில் ஒளிரும் விளக்காம் நிலவு
இரவி பகலின் விளக்காம் -- அறமே
உகந்த விளக்காகும் மூவுலகில் -- அன்பு
மகனே குடும்ப விளக்கு.

pradoShE dIpakashchandraH prabhAte dIpako raviH |
trailokye dIpako dharmaH suputra kuladIpakaH ||

प्रदोषॆ दीपकश्चन्द्रः प्रभाते दीपको रविः ।
त्रैलोक्ये दीपको धर्मः सुपुत्र कुलदीपकः ॥

*****
 
53. அணிகலன்

நல்லதோர் தோற்றம் மனிதனின் பொற்பாகும்
நல்லொழுக்கம் தோற்றத்தின் பொற்பு -- ஒழுக்கத்தின் ... ... ... [பொற்பு=அழகு, அணி, பொலிவு]
பொற்பாய் விளங்கும் அறிவு -- அறிவுக்கும்
பொற்பு பிழைபொறுக்கும் பண்பு.

narasyAbharaNam rUpaM rUpasyAbharaNaM guNaH |
guNasyAbharaNam ~jAnam ~jAnasyAbharaNam kShamA ||

नरस्याभरणम् रूपं रूपस्याभरणं गुणः ।
गुणस्याभरणम् ञानम् ञानस्याभरणम् क्षमा ॥

*****

54. பெரியோர் சிறியோர்

எண்ணுவதும் ஒன்று உரைப்பதும் ஒன்றுடன்
பண்ணுவதும் ஒன்று பெரியோர் -- சிறியோரோ
எண்ணுவது ஒன்றும் உரைப்பது ஒன்றும்பின்
பண்ணுவது ஒன்றும் என.

manasyekaM vachasyekaM karmaNyekaM mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||

मनस्येकं वचस्येकं कर्मण्येकं महात्मनाम् ।
मनस्येकं वचस्येकं कर्मण्येकं दुरात्मनाम् ॥

*****
 
55. கற்றது நிற்பது

கற்றதும் ஞானமும் கூர்மதியும் காட்டியே
மற்றோர்க்குச் சொல்ல முயல்வ தெளிதாகும்
சொற்றதைத் தானும் அறவழி மேற்கொண்டு
உற்றது காட்டுவோர் எங்கு?

paropadeshe pANDityaM sarvEShAM sukaraM nRuNAm |
dharma svayamanuShThAnaM kasyachittu mahAtmanaH ||

परोपदेशे पाण्डित्यं सर्वॆषां सुकरं नृणाम् ।
धर्म स्वयमनुष्ठानं कस्यचित्तु महात्मनः ॥

*****

56. சிறுவனின் சொல்

ஏற்றது என்றால் சிறுவனின் சொல்லையும்
ஏற்பரே முன்மதியோர் ஏனெனில் ஞாயி(று)
இருளகற்ற ஏலா(து) இருக்கும் இடத்தில்
இருளகற்று மேயோர் விளக்கு.
---ஹிதோபதேசம், சுஶ்ருபேதம்

bAlAdapi grahItavyaM yuktamuktaM manIShibhiH |
ravEraviShayE kiM na pradIpasya prakAshanam ||
---hitopadeshaH, sushRubheda

बालादपि ग्रहीतव्यं युक्तमुक्तं मनीषिभिः ।
रवॆरविषयॆ किं न प्रदीपस्य प्रकाशनम् ॥
---हितोपदेशः, सुशृभेद

*****
 
57. தேர்வு

துன்பத்தில் கைகொடுத்தல் தோழனின் தேர்வாகும்
வன்படும் போர்க்களமே வீரனின் தேர்வு
அடக்கம் குடும்பத்தின் தேர்வு -- கணவன்
மிடிமை மனைவியின் தேர்வு. ... ... ... ... [மிடிமை=வறுமை]

vyasane mitraparIkShA sUraparIkShA raNA~ggaNE bhavati |
vinaye vaMshaparIkShA striyaH parIkShA tu nirdhane puMsi ||

व्यसने मित्रपरीक्षा सूरपरीक्षा रणाङ्गणॆ भवति ।
विनये वंशपरीक्षा स्त्रियः परीक्षा तु निर्धने पुंसि ॥

*****

58. அன்னம் ஓர் ஆசான்!

கற்றல் பலவகை கல்விக் கிளைபல
அற்பம் மனிதனின் ஆயுளே -- பற்பல
இன்னலாம் சாரத்தை ஆராய்ந்து பெற்றிடுக
அன்னம்போல் பாலைப் பிரித்து.

anekashAstraM bahu veditavyam alpashcha kAlo bahavashcha vighnAH |
yatsArabhUtaM tadupAsitavyaM haMso yathA kShIramivAmbumishrAt ||

अनेकशास्त्रं बहु वेदितव्यम् अल्पश्च कालो बहवश्च विघ्नाः ।
यत्सारभूतं तदुपासितव्यं हंसो यथा क्षीरमिवाम्बुमिश्रात् ॥

*****
 
59. இரண்டை ஒன்றாக்கும் அம்பு!

பொருளொன்றைத் துண்டித்(து) இரண்டாக்கும் வில்லார்
அரிதல்ல காண்ப(து) அவனியில் -- ஒப்பற்ற
மன்மதன் வில்லில் இரண்டை இணைத்துவைத்தே
ஒன்றென ஆக்கிடும் அன்பு.
---சுபாஷித ரத்னபாண்டாகாரம் 7405

एकवस्तुम् द्विधा कर्तुम् बहव: सन्ति धन्विनः ।
धन्वी स मार एवैको द्वयोः ऐक्यः करोति यः ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 7405

ekavastum dvidhA kartum bahava: santi dhanvinaH |
dhanvI sa mAra evaiko dvayoH aikyaH karoti yaH ||
---subhAShita ratnabhANDAgAram 7405

There are many archers who can split one thing into two. But there is only one archer, Manmatha, who unites two into one.

*****

60. அகப்பை அறியுமோ?

பற்பலவே கற்றும் பகுத்தறிவு பற்றாத
கற்றாரே கற்றிலார் ஞானத்தின் அர்த்தம்
அறுசுவை உண்டி அருஞ்சுவை யேதும்
அகப்பை அறியுமோ சொல்?

यस्य नास्ति विवेकस्तु केवलं यो बहुश्रुतः ।
न स जानाति शास्त्रार्थान् दर्वी पाकरसानिव ॥

yasya nAsti vivekastu kevalaM yo bahushrutaH |
na sa jAnAti shAstrArthAn darvI pAkarasAniva ||

He who is well-read but lacks discrimination does not know the real meaning of 
knowledge. Does a ladle know the taste of the cooked food?

*****
 
I have/had a suspicion that the Sanskrit version given in 54 may be incorrect - as both the lines are identical (I had also a mini discussion with my wife who is more knowledgeable - we could not reach a conclusion - closest we came to an agreement was यद् भावम् तद् भवति). I think my suspicion is confirmed (or two people are making the same mistake) after hearing this song by Vijay Siva Sri.Vijay Shiva-PALINCHUKAMAKSHI-mArgazhi mahA utsavam 2012 - YouTube

Sorry for being pedantic and disturbing your chain of translation.

53. அணிகலன்

நல்லதோர் தோற்றம் மனிதனின் பொற்பாகும்
நல்லொழுக்கம் தோற்றத்தின் பொற்பு -- ஒழுக்கத்தின் ... ... ... [பொற்பு=அழகு, அணி, பொலிவு]
பொற்பாய் விளங்கும் அறிவு -- அறிவுக்கும்
பொற்பு பிழைபொறுக்கும் பண்பு.

narasyAbharaNam rUpaM rUpasyAbharaNaM guNaH |
guNasyAbharaNam ~jAnam ~jAnasyAbharaNam kShamA ||

नरस्याभरणम् रूपं रूपस्याभरणं गुणः ।
गुणस्याभरणम् ञानम् ञानस्याभरणम् क्षमा ॥

*****

54. பெரியோர் சிறியோர்

எண்ணுவதும் ஒன்று உரைப்பதும் ஒன்றுடன்
பண்ணுவதும் ஒன்று பெரியோர் -- சிறியோரோ
எண்ணுவது ஒன்றும் உரைப்பது ஒன்றும்பின்
பண்ணுவது ஒன்றும் என.

manasyekaM vachasyekaM karmaNyekaM mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||

मनस्येकं वचस्येकं कर्मण्येकं महात्मनाम् ।
मनस्येकं वचस्येकं कर्मण्येकं दुरात्मनाम् ॥

*****
 
Last edited:
namaste shrI Moorthy.

It seems that both versions do the round on the Net:

manasyekaM vachasyekaM karmaNyekaM mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||
Ref: The Isavasya Upanishad - Summary - Part 2 | Hindu Spiritual Articles and Videos

manasyanyat vachasyanyat karmaNyanyat mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||
Ref: GLEANINGS FROM SANSKRIT LITERATURE: QUOTES FROM CHANAKYA NEETI

Although the second link suggests the source of this verse as chANakya nIti, I couldn't find it there. Perhaps your mistress could give us the source and the verse number.

The first version seems to be more beautiful than the second: we distinguish the difference by the terms mahAtman and durAtman. Here is what I wrote to a similar query in another forum:

’ஏகம்’ எனும் சமஸ்கிருதச் சொல்லும், ’ஒன்று’ எனும் தமிழ்சொல்லும் (அனைவருக்கும் தெரிந்ததுபோல்) ’ஒன்றே, ஒன்று மட்டுமே, ஒன்றுதான்’ என்னும் பொருளிலும், ’பலவற்றில் ஒன்று’ என்னும் பொருளிலும் வரும். ’இது ஒன்றுதான், வேறில்லை’ என்னும் பொருள் வர ’ஏகம் ஏவ’ என்று சமஸ்கிருதத்திலும் ’ஒன்றே ஒன்று’ என்று தமிழிலும் அடைமொழியுடன் சொல்கிறோம்.

செய்யுளில் எழுதும் போது ’ஒன்று’ என்பதை ’ஒன்றே ஒன்று’ எனும் பொருளுக்கும், ’ஒன்றும்’ என்று ’உம்’ விகுதி பெற்றதை ’பலவற்றில் ஒன்று’ எனும் பொருளுக்கும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

வெண்பாவின் தளைக்கட்டினால் நான் ’ஒன்றுடன், ஒன்றுபின்’ என்று விகுதியிட வேண்டியிருந்தது நீங்கள் சொன்னபடி சிலேடையாய் (அபத்தமாகக் கூட) உள்ளது. மூலத்தை உள்ளபடி மொழிபெயர்த்தால் வெண்டுறையில் சரியாக வரும் என்று தோன்றுகிறது:

எண்ணுவது ஒன்று உரைப்பது ஒன்று
பண்ணுவது ஒன்று பெரியோர் -- சிறியோரோ
எண்ணுவது ஒன்று உரைப்பது ஒன்று
பண்ணுவது ஒன்று என.

ஈற்றுச் சொல் ’என’ என்பதே பெரியோர் சிறியோரிடம் உள்ள ’ஒன்றின்’ வேறுபாட்டைக் காட்டப் போதுமானது அல்லவா?

வெண்பாவில்தான் வரவேண்டும் என்றால் இப்படி எழுதலாம்:

எண்ணுவது ஒன்று உரைப்பது அஃதேயாம்
பண்ணுவது அஃதே பெரியோர் -- சிறியோரோ
எண்ணுவது ஒன்று உரைப்பது இன்னொன்று
பண்ணுவது வேறொன்று என்று.

You are not at all being pedantic, nor is there any disturbance. Please do give your feedback, specially about any errors in the original and translation.

Regards,
ramaNi




I have/had a suspicion that the Sanskrit version given in 54 may be incorrect - as both the lines are identical (I had also a mini discussion with my wife who is more knowledgeable - we could not reach a conclusion - closest we came to an agreement was यद् भावम् तद् भवति). I think my suspicion is confirmed (or two people are making the same mistake) after hearing this song by Vijay Siva Sri.Vijay Shiva-PALINCHUKAMAKSHI-mArgazhi mahA utsavam 2012 - YouTube

Sorry for being pedantic and disturbing your chain of translation.
 
The stanza you have taken from the website
in your previous post
"manasyanyat vachasyanyat karmaNyanyat mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||
Ref:
GLEANINGS FROM SANSKRIT LITERATURE: QUOTES FROM CHANAKYA NEETI"

is not correct - you have switched the role of Ekam and anyat and hence change the meaning completely - That website gives
मनस्यन्यत् वचस्यन्यत् कर्मण्यन्यत् दुरात्मनां ।
मनस्येकं वचस्येकं कर्मण्येकं महात्मनाम् ॥


Manasyanyat vachasyanyat karmanyanyat duraatmanaam
Manasyekam vachasyekam karmanyekam mahaatmanaam

http://sanskritdocuments.org/doc_z_misc_major_works/chANakyanItisort.itx

gives chANakyanIti in ITRANS format - In this I could not find this couplet. I have a couple of books at work which I can check.

I reread this website http://www.jnanajyoti.com/article/article.php?id=238 and the following passages

" What you think, that you say; what you say, that you do; what you do, that you speak; and what you speak, that you think. Karmanyekam vachasyekam manasyekam mahatmanam: "Great souls have only one thing in their action, in their speech and in their thought." And the same verse is repeated in the case of opposite personalities: karmanyekam vachasyekam manasyekam duratmanam. One thing in action, one thing in speech, one thing in thought is the characteristic of great people, but with a different shift, the same thing is the case with people who are paltry and unknowing. What do they do? "One thing is their action, one thing is what they say, and one thing is what they think." It is a shift in emphasis, but the words are the same."

This interpretation (IMHO) should have used only one Ekam in the first line . Then this whole couplet could be summarized then as
यद् भावम् तद् भवति )


I do not want my comments to divert you from what you are doing.
 
Last edited:
61. மட்டின்மை தவிர்க்க

கொடுத்துமிகக் கட்டுண்டான் மாவலி மன்னன்
துடுக்கால் செருக்கால் தகர்ந்தான் சுயோதனன் ... ... ... ... [சுயோதனன்=துரியோதனன்]
மட்டற்ற ஆசையால் மாண்டான் இராவணன்
மட்டின்மை எங்கும் விலக்கு.
---சுபாஷித ரத்னபாண்டாகாரம் 563

अतिदानात्बलिर्बध्दो नष्टो मानात् सुयोधनः ।
विनष्टो रावणो लौल्यादति सर्वत्र वर्जयेत् ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 563

atidAnAtbalirbadhdo naShTo mAnAt suyodhanaH |
vinaShTo rAvaNo laulyAdati sarvatra varjayet ||
---subhA****a ratnabhANDAgAram 563

King Bali was bound due to excessive liberality. Suyodhana lost because of excessive self-conceit.
RAvaNa was destroyed because of excessive greed. One should avoid excesses everywhere.

*****

62. அதிரிஷ்டம் ஒரு சக்கரம் மட்டுமே!

தனியொரு சக்கரத்தால் ஓடாத தேர்போல்
மனிதனின் ஓயா முயற்சிகள் இல்லாது
நல்வாய்ப்பால் ஏதும் நிகழ்ந்திடாது; இவ்வுண்மை
வல்லிதின் தேர்வது நன்று.

यथा ह्येकेन चक्रेण न रथस्य गतिर्भवेत् ।
एवं पुरुषकारेण विना दैवं न सिध्यति ॥

yathA hyekena chakreNa na rathasya gatirbhavet |
evaM puruShakAreNa vinA daivaM na sidhyati ||

Just as a chariot cannot move with one wheel,
the luck cannot shine forth without human striving.

*****
 
Last edited:
61. மட்டின்மை தவிர்க்க

மிகவும் கொடுத்தழிந்தான் மாவலி மன்னன்
தகவில் செருக்கால் தகர்ந்தான் சுயோதனன் ... ... ... ... [சுயோதனன்=துரியோதனன்]
மட்டற்ற ஆசையால் மாண்டான் இராவணன்
மட்டின்மை எங்கும் விலக்கு.
---சுபாஷித ரத்னபாண்டாகாரம் 563

अतिदानात्बलिर्बध्दो नष्टो मानात् सुयोधनः ।
विनष्टो रावणो लौल्यादति सर्वत्र वर्जयेत् ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 563

atidAnAtbalirbadhdo naShTo mAnAt suyodhanaH |
vinaShTo rAvaNo laulyAdati sarvatra varjayet ||
---subhA****a ratnabhANDAgAram 563

King Bali was bound due to excessive liberality. Suyodhana lost because of excessive self-conceit.
RAvaNa was destroyed because of excessive greed. One should avoid excesses everywhere.

*****

62. அதிரிஷ்டம் ஒரு சக்கரம் மட்டுமே!

தனியொரு சக்கரத்தால் ஓடாத தேர்போல்
மனிதனின் ஓயா முயற்சிகள் இல்லாது
நல்வாய்ப்பால் ஏதும் நிகழாது; இவ்வுண்மை
வல்லிதின் தேர்வது நன்று.

यथा ह्येकेन चक्रेण न रथस्य गतिर्भवेत् ।
एवं पुरुषकारेण विना दैवं न सिध्यति ॥

yathA hyekena chakreNa na rathasya gatirbhavet |
evaM puruShakAreNa vinA daivaM na sidhyati ||

Just as a chariot cannot move with one wheel,
the luck cannot shine forth without human striving.

*****

நண்பரே,

மீண்டும் நான் இதை எழுதவேண்டியிருக்கிறது. மன்னிக்கவும். மாவலி இழந்து உயர்ந்தான். அழிந்தானில்லை. மூலத்திலும் அழகாக கட்டுண்டான் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தபோது அழிந்தான் என்று கூறிவிட்டீர்கள். மாவலியின் கதையின் பின்னுள்ள தத்துவமே இதன் மூலம் அடிபட்டுப்போயிற்று என்பது என் கருத்து.

வாழ்த்துக்களுடன்.
 
வணக்கம் நண்பரே.

முக்கியமான இந்தத் திருத்தம் சுட்டியதற்கு நன்றி. இதோ திருந்திய வெண்பா:

கொடுத்துமிகக் கட்டுண்டான் மாவலி மன்னன்
துடுக்கால் செருக்கால் தகர்ந்தான் சுயோதனன்
மட்டற்ற ஆசையால் மாண்டான் இராவணன்
மட்டின்மை எங்கும் விலக்கு.

நண்பரே,

மீண்டும் நான் இதை எழுதவேண்டியிருக்கிறது. மன்னிக்கவும். மாவலி இழந்து உயர்ந்தான். அழிந்தானில்லை. மூலத்திலும் அழகாக கட்டுண்டான் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தபோது அழிந்தான் என்று கூறிவிட்டீர்கள். மாவலியின் கதையின் பின்னுள்ள தத்துவமே இதன் மூலம் அடிபட்டுப்போயிற்று என்பது என் கருத்து.

வாழ்த்துக்களுடன்.
 
63. அழிக்கும் வழிகள்

திண்ணிய ஊக்கத்தால் தீரும் வறுமையே
பண்ணும் ஜபத்தால் நசிக்குமே பாவம்
அழியும் கலகம் மவுனமே காக்க
விழிப்பால் அழியும் பயம்.

उद्यमे नास्ति दारिद्र्यं जपतो नास्ति पातकम् ।
मौनेन कलहो नास्ति नास्ति जागरिते भयम् ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 6889

udyame nAsti dAridryaM japato nAsti pAtakam |
maunena kalaho nAsti nAsti jAgarite bhayam ||
---chANakyanItIkrama 03.11

उद्योगे नास्ति दारिद्र्यं जपतो नास्ति पातकम् ।
मौनेन कलहो नास्ति नास्ति जागरिते भयम् ॥
---चाणक्यनीतीक्रम, 03.11

udyoge nAsti dAridryaM japato nAsti pAtakam |
maunena kalaho nAsti nAsti jAgarite bhayam ||
---chANakyanItIkrama, 03.11

With persistsent efforts poverty is destroyed, with litany sins;
By keeping silent a quarrel is settled and by alertness fear is destroyed.

நண்ணும் படிப்பால் நசிக்குமே பேதமை
பண்ணும் ஜபத்தால் நசிக்குமே பாவம்
அழியும் கலகம் மவுனமே காக்க
விழிப்பால் அழியும் பயம்.

पठतो नास्ति मूर्खत्वं जपतॊ नास्ति पातकम् ।
मौनिनः कलहॊ नास्ति भयं चास्ति जाग्रतः ॥

paThato nAsti mUrkhatvaM japatO nAsti pAtakam |
mauninaH kalahO nAsti bhayaM chAsti jAgrataH ||

One who keeps studying shreds stupidity. One who keepts reciting (scriptures) abhors sin.
One who keeps silence does not quarrel. One who keeps awake has no reason to fear.

*****

64. கல்வி கைகொடுக்கும் மறுமையில்

வயதான போதும் விவேகம் உடையோர்
அயராது கற்று அறிவை வளர்ப்பர்
பயனில்லை இப்பிறப்பில் என்றாலும் கற்றல்
அயலோர் பிறப்பில் எளிது.

गतेऽपि वयसि ग्राह्या विद्या सर्वात्मना बुद्धैः ।
यद्यपि स्यान्न फलदा सुलभा सान्यजन्मनि ॥

gate&pi vayasi grAhyA vidyA sarvAtmanA buddhaiH |
yadyapi syAnna phaladA sulabhA sAnyajanmani ||

The wise should wholeheartedly acquire knowledge even when they are advanced in age.
If it does not yield fruit (during this life) it will be easier to get it (the knowledge) in the next life.

*****
 
65. நண்பன் கண்ணாடி போன்றவன்

கண்ணெதிர்ப் பட்டால்நம் துன்பமும் இன்பமும்
கண்ணாடி காட்டும் உருவாய்ப் எதிரொளிக்கும்
வண்மையைத் தன்னியல்பாய்த் தோற்றுவிக்கும் தோழனே
உண்மையான தோழன் என.

तदेवास्य परं मित्रं यत्र संक्रामति द्वयम् ।
दृष्टे सुखं च दुःखं च प्रतिच्छायेव दर्पणॆ ॥

tadevAsya paraM mitraM yatra saMkrAmati dvayam |
dRuShTe sukhaM cha duHkhaM cha pratichChAyeva darpaNE ||

He is the real friend in whom both happiness and misery (of one) are reflected
as soon as he is seen just like a reflection in a mirror.

*****

66. பிறர் குற்றம் தன் குற்றம்

இடும்பன் ஒருவன் அயலா னிடமே
கடுகன்ன குற்றமும் காண்பான் எனினுமவன்
வில்வக் கனிபோல் விரிந்துள்ள குற்றமும்
தன்னிடம் காணான் என.

[இடும்பன்=செருக்குள்ளவன், பிறரை அவமதிப்பவன்]

खलः सर्षपमात्राणि परच्छिद्राणि पश्यति ।
आत्मनो बिल्वमात्राणि पश्यन्नपि न पश्यति ॥

khalaH sarShapamAtrANi parachChidrANi pashyati |
Atmano bilvamAtrANi pashyannapi na pashyati ||

A wicked person sees in others faults as small as a mustard seed.
However, he does not see his own faults as big as a bilva fruit.

*****
 
67. நிழலின் அருமை

துன்பத்தில் வாடியபின் இன்பம் நிகழ்வது
இன்பத்தின் துய்ப்பினை இன்னும் உயர்த்தும்
வறுத்திடும் வெய்யிலில் வாடிய பின்னர்
மரத்தின் நிழலில் மகிழ்வு.

यदेवोपनतं दुःखात् सुखं तद्रसवत्तरम् ।
निर्वाणाय तरुच्छाया तप्तस्य हि विशेषतः ॥

yadevopanataM duHkhAt sukhaM tadrasavattaram |
nirvANAya taruchChAyA taptasya hi visheShataH ||

The happiness obtained after suffering pain is more pleasing.
The shadow of a tree is more comforting to him who is scorched in the heat (of the sun).

*****

68. செல்வமும் ஈகையும்

நல்வாய்ப்பு உள்ளபோதே நல்குக செல்வத்தை
செல்வம் ஹரிப்ரியன் நல்கியது அல்லவா?
நல்வாய்ப்பு இன்றேலும் நல்குக ஏனெனில்
வல்வினை செல்லும் கவர்ந்து.
[ஹரிப்ரியன் என்பது விஷ்ணுவின் 108 பெயர்களில் ஒன்று.]

अनुकूले विधौ देयं यतः पूरयिता हरिः ।
प्रतिकूले विधौ देयं यतः सर्वम् हरिष्यति ॥

anukUle vidhau deyaM yataH pUrayitA hariH |
pratikUle vidhau deyaM yataH sarvam hariShyati ||

Go on giving when fortune is favourable, because BhagavAn Hari is the supplier.
Go on giving when fortune is not favourable, because everything will be taken away (by fate).

*****
 
69. நன்மையே உண்மை

உண்மை உரைத்தல் உயர்வே தருவது
உண்மையினும் நன்மை யுரைப்பது நன்று
உலகம் முழுவதும் நன்மை தருவதே
உண்மையெனச் சொல்லுவன் நான்.
---நாரத மஹரிஷி

सत्यस्य वचनं श्रेयः सत्यादपि हितंवदेत् ।
यद्भूतहितमत्यन्तं एतत् सत्यं मतम् मम ॥
---नारद महऋषि

satyasya vachanaM shreyaH satyAdapi hitaMvadet |
yadbhUtahitamatyantaM etat satyaM matam mama ||
---nArada mahaRuShi

Speaking truth is excellent, but more than that speak for the larger benefit;
I would say that truth is one that is beneficial to a large community.

*****

70. உண்மையும் நயமும்

நயந்தே நவிலுதல் உண்மை உரைக்கின்
நயமற்ற உண்மை நவிலா தொழித்தல்
நயமிகு பொய்மையும் பேசா திருத்தல்
உயர்ந்த உலகோர் அறம்.
---மனுஸ்மிருதி 4.138

सत्यं ब्रूयात्प्रियं ब्रूयान्न ब्रूयात्सत्यमप्रियम् ।
प्रियं च नानृतं ब्रूयादेष धर्मः सनातनः ॥
---मनुस्मृति 4.138

satyaM brUyAt-priyaM brUyAn-na brUyAt-satyam-apriyam |
priyaM cha nAnRutaM brUyAd-eSha dharmaH sanAtanaH ||
---manusmRuti 4.138

Speak those truths that are pleasing to others. Never speak truth that is unpleasant.
Never speak untruth that is pleasant, too. This is the eternal path of dharma.

*****
 
71. புத்தகம் பகர்வது

எண்ணைக் கறையினின்று என்னைநீ காப்பாற்று
தண்ணீரில் மூழ்காது கட்டுக் குலைவின்றிக்
காப்புச்செய் கல்லாதான் கைகொளச் செய்யாதே
காப்பீடு கேட்டிடும் ஏடு!

கொஞ்சம் எதிர்மறையாக வெண்பா இப்படி எழுதலாம்:

எண்ணைக் கறையினின்று என்னைநீ காப்பாற்று
தண்ணீரில் மூழ்காது கட்டுக் குலைவின்றிக்
கல்லாதான் கைவசம் கொள்ளாது காத்திடு
சொல்லுமே இப்படி ஏடு!

तैलाद् रक्षेत् जलाद् रक्षेत् रक्षेत् शिथिल बंधनात् ।
मूर्ख हस्ते न दातव्यं ऎवं वदति पुस्तकम् ॥

tailAd rakShet jalAd rakShet rakShet shithila baMdhanAt |
mUrkha haste na dAtavyaM EvaM vadati pustakam ||

Protect me from oil stains; protect me from water; and from loose binding;
and then never hand me over to a fool--says the book.

*****

72. கரியன்ன கொடியோர்

நெருங்கியோ சம்மதித்தோ நட்புப் பயில
விரும்புதல் கூடாது வன்கொடியோர் மாட்டு
கரத்தினை வெம்மையில் தீய்க்கும் குளிர்ந்தால்
கருமையாய் ஆக்கும் கரி.

दुर्जनेन समं सख्यं प्रीतिं चापि न कारयेत् ।
उष्णॊ दहति चाङ्गरः शीतःकृष्णायते करम् ॥

durjanena samaM sakhyaM prItiM chApi na kArayet |
uShNO dahati chA~ggaraH shItaHkRuShNAyate karam ||

Do not move with wicked people as friends or in warm relationship;
The charcoal burns your hand when hot, and blackens when cold.

*****
 
73. வருமுன் காத்தல்

வாய்ப்பொன் றிருந்தால் விபத்தொன்று நேரிட
ஆய்ந்திட வேண்டும் அதுபற்றி முன்னரே
கண்ணெதிரில் வீடெறியத் தண்ணீர்க் கிணற்றுக்கு
மண்தோண்ட லாகுமோ தீர்வு?

चिन्तनीयाहि विपदं आदावेव प्रतिक्रिया ।
न कूप खननं युक्तं प्रदीप्ते वहनिना गृहे ॥

chintanIyAhi vipadaM AdAveva pratikriyA |
na kUpa KananaM yuktaM pradIpte vahaninA gRuhe ||

Reactions to calamities should be considered well in advance.
It is no good to start digging a well when the house is on fire!

*****

74. மன்னனே முடிவு!

ஒருவனைக் கொல்லும் திரவ விஷமும்
ஒருவனையே கொல்லும் படைக்கலனும் கொல்லும்
ஒருவனது மக்களை நாட்டையே -- மன்னன்
சரியற்ற தீர்வின் விளவு.

एकं विषरसं हन्ति शस्त्रेणेकश्च बध्यते ।
सराष्ट्रं सप्रजं हन्ति राजानां मन्त्र विप्लवः ॥

ekaM viSharasaM hanti SastreNekaSca badhyate |
sarAShTraM saprajaM hanti rAjAnAM mantra viplavaH ||

Poison kills one person (at a time), a weapon too kills only one.
An entire country and its people can be killed by the king's incorrect decision.

*****
 
ज्ञानंलव दुर्विदग्धस्य என்பது அரைகுறை அறிவால் இறுமாப்பு கொண்டவர் எனப்பொருள் கொள்ளலாம். நீங்கள் சொல்வது தான் எனும் கர்வம் கொண்டவர் அவர் மிகக்கற்றவராயுமிருக்கலாம். இங்கு அரைகுறை அறிவுடையாரைகுறித்து சொல்லப்பட்டுள்ளது
 
All venbas are true to the original sanskrit. This is really admirable. In my opinion these venbas can be sent to SamskritaSree monthly journal for publication as a serial so that many sanskrit readers may derive pleasure.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top