P.J.
0
ஹெல்மெட் போட்டால்தான் வண்டி கிளம்பும் !
ஹெல்மெட் போட்டால்தான் வண்டி கிளம்பும் !
மயிலம் மாணவர்களின் பலே சாதனை
‘‘ஹெல்மெட் போட்டால் பின்னாடி வருகிற வண்டி தெரியமாட்டேங்குது, வியர்க்குது, முடி கொட்டுது...’’ என்றெல்லாம் இனி சாக்கு சொல்லி சமாளிக்க முடியாது. ஹெல்மெட் போட்டால்தான் வண்டியே கிளம்பும் என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள் விழுப்புரம் மைலம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.
‘ஆட்டோ ஆஃப் ஹெல்மெட்டை’ அணிந்துகொண்டு உற்சாகமாக வந்தார் மாணவர் ஜம்புலிங்கம். நம்மைப் பார்த்து அவர் ஹெல்மெட்டை கழட்டியதும், 10 வினாடிகள் சத்தமிட்ட பிறகு வண்டி இன்ஜின் தானாக நின்றுபோனது. மீண்டும் அவர் ஹெல்மெட்டை போட்ட பிறகுதான் வண்டி ஸ்டார்ட் ஆகிறது. ஹெல்மெட் போடாமல் கிக் ஸ்டார்ட், செல்ஃப் ஸ்டார்ட் செய்தார். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.
வண்டியில் ஜாலியாக ஒரு ரவுண்ட் அடித்தபடி பேச ஆரம்பித்தார் ஜம்புலிங்கம்.
‘‘ஹெல்மெட் என்பதை ஏதோ போலீஸுக்காக போடுறதைப்போல சிலர் நினைக்கிறாங்க.
நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், அதை எப்படி ஏமாற்றலாம் என்றுதான் பலரும் கணக்குப் போடுறாங்க. எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் தலையில் போடாமல் பெட்ரோல் டேங்க் மீது ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு போகும் ஆட்களும் உண்டு. இதை எப்படி சரி பண்ணலாம் என்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தப்போ உருவானதுதான் இந்த ஐடியா.
ஹெல்மெட் போடவில்லை என்றால் பைக் ஸ்டார்ட் ஆகாது. எப்படி ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க முடியும்? அப்படி ஒரு விஷயத்தை ஒன்பது மாத முயற்சிக்குப் பிறகு கண்டுபிடிச்சிருக்கோம்.
ஹெல்மெட்டில் ஒரு கருவி, வண்டியில் ஒரு கருவி என இரண்டே கருவிகள்தான். தலையில் ஹெல்மெட் போட்டதும் ஹெல்மெட்டில் இருக்கும் சர்க்யூட் ஆன் ஆகி வண்டியில் உள்ள கருவிக்கு சிக்னல் அனுப்பும். அந்த சிக்னல் வந்த பிறகுதான் இன்ஜினுக்குத் தேவையான பவர் கிடைக்கும். பைக் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகும். ஹெல்மெட் தலையில் போடாமல் என்னதான் ஸ்டார்ட் செய்தாலும் வண்டி ஸ்டார்ட் ஆகாது’’ என்று தொழில்நுட்பத்தை விளக்கினார்.
சிவா என்ற மாணவர், ‘‘எல்லா ஹெல்மெட் போலவேதான் இதுவும். பயன்படுத்துபவர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. இதை உருவாக்க எங்களுக்கு மொத்தமே ஆன செலவு 300 ரூபாய்தான். மொத்தமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்போது 200 ரூபாய்க்குக் கொடுக்கலாம். பைக் தயாரிப்பு நிறுவனங்களும் ஹெல்மெட் கம்பெனிகளும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் ஹெல்மெட் இல்லாமல் யாரும் பைக்கை எடுக்கவோ, ஓட்டவோ முடியாது’’ என்றார்.
கல்லூரி முதல்வர் செந்திலிடம் பேசினோம். ‘‘இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் என்றால், ‘ரியல்’ இன்ஜினீயராக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து தேர்வு எழுதுபவராக இருக்கக் கூடாது. வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் அப்படி இல்லை. ஆராய்ச்சிகள் அதிகமானால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். மக்களின் தற்போதைய தேவையை உணர்ந்து எங்கள் மாணவர்கள் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளனர். நாங்களும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறோம்’’ என்று சொன்னார்.
இனி விற்பனைக்கு வரும் எல்லா பைக்குகளிலும் இந்தக் கருவியைப் பொருத்த அரசு உத்தரவிடலாம்.

- ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
http://www.vikatan.com/new/article....=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1