இந்த ஒரு மாசமா உடம்பு சரியில்லாம போனதுது பெரிய விஷயமா தெரியலே..ஆனா ஒவ்வொருத்தருடைய விசாரிப்பும் இருக்கே.. அம்மாடி...
ஆஸ்பத்திரியிலேந்து எல்லா டெஸ்ட்டும் எடுத்து முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தவுடன் ...வந்தாங்க பக்கத்துக்கு வீட்டு எதிர்வீட்டு மாமிங்க.. அது எப்பிடித்தான் இவங்களுக்கு தெரிஞ்சதோ .. எங்கே கொஞ்சம் டெஸ்ட் ரிப்போர்ட காமிங்க ..எதிர் வீட்டு மாமி.. [ இவங்க பொண்ணு டாக்டருக்கு படிக்குது ..அதனால இவங்க அரை டாக்டர்.. ]
அஞ்சு நிமிஷம் மேலும் கீழுமா புரட்டிட்டு.. ம்ம்ம்ம்...ரிப்போர்ட் நல்லாத்தான் இருக்கு.. ஆனா நீங்க எதுக்கும் பயப்படாதீங்க..
எனக்கு திக்குன்னு ஆச்சு..என்ன மாமி.. ரிப்போர்ட் நல்ல இருக்குன்னு சொல்றிங்க.. அதே சமயத்திலே பயபடாதீங்கன்னும் சொல்றீங்களே.. என்ன ஏதாவது பெருசா இருக்கா.. என் கேள்வி..
ச்சே ச்சே.. அதெல்லாம் ஒண்ணும் இல்லே..பொதுவா சொன்னேன்னு சொல்லிட்டு கிளம்பியாச்சு..
மனசில லேசா கொஞ்சம் சந்தேகம்.
ஆச்சு அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சொந்தக்காரங்களும் பிரண்சுகளும் மாத்தி மாத்தி போன் கால்.. விசாரிப்பு.. .தலைக்கு தலை அதை செய்யாதே ..இதை செய்ன்னு .நூறு அட்வைஸ் வேற.. ஆனா எல்லாரும் ஒட்டு மொத்தமா கடைசியில முடிக்கும்போது எதுக்கும் பயப்படாதேன்னு..
எனக்கு இப்போ நிஜமாவே பயம் வந்தாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்ன்னு நேரா பேமிலி டாக்டரைப் பாத்தேன்.... ரிப்போர்ட் எல்லாத்தையும் பார்த்துட்டு .. எல்லாம் நல்ல இருக்கு.. ஆனா எதுக்கும் பயப்படாதீங்கன்னு சொன்னாரே பாக்கலாம்..
என்ன டாக்டர் நீங்களும் எல்லார் மாதிரியேஎதுக்கும்பயப்படாதீங்கன்னு சொல்றேன்களேன்னு கேட்டேன்...
பலம்மா சிரிச்சிட்டு ..அதுவா பொதுவா வயசானா கொஞ்சம் உடம்பு சரியில்லேனா ..மனசில கொஞ்சம் சந்தேகமும் பயமும் வரும் .. அதுவா இருக்குமோ இல்லே இதுவா இருக்குமோன்னு ... அதனாலதான் சொன்னேன் எதுக்கும் பயப்படாதீங்கன்னு.. உங்க உடம்பு சீக்கிரமே சரி ஆகிடும் இந்த ரெண்டு மாத்திரியையும் சேர்த்து போட்டுக்குங்கன்னு சொல்லி அனுப்பினார் டாக்டர்..
அப்பாடான்னு மனசில கொஞ்சம் நிம்மதி ஆச்சு.. ஆனா ரெண்டு நாள் கழிச்சு வீட்டில வேலைக்கார அம்மா கனகாரியமா மாடி ஏறி வந்து....[ அவங்களும் கொஞ்சம் வயசானவங்கதான் ]
ஐயா...சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. நானும் சரி நீங்களும் சரி என்னிக்காவது ஒரு நாள் 'போகத்தான்' போறோம் ...அதுக்காக உடம்பு சரி இல்லேன்னு கவலைப்பட்டு ஒண்ணும் ஆகாப்போறது இல்லே...நீங்க எதுக்கும் பயப்படாதிங்கன்னு சொன்னாங்களே பார்க்கலாம்..
இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம.. வாயை மூடிண்டேன்..
ஆகக்கூடி ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சது.. உடம்பு சரி இல்லேன்னா .. அவங்கவங்க சொல்றதை ஜீரணம் பண்ண தனியா தெம்பு வேணும்ன்னு ...
டி வி கே..