i have to confess that i do not know anything about carnatic music. however, in another blog, i came across this article and thought this might be of interest to the music history lovers...
since the url was not supplied, i had no choice but to cut and post...
1870-இலிருந்து 1918வரைக்கும் உள்ள காலகட்டம்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
உச்ச கட்டம் எனலாம்.
சாம்ராஜ்யம் பெரிதாகிக்கொண்டே வந்தது. விக்டோரியா மகாராணியை இந்தியாவின்
தனிப்பட்ட சக்கரவர்த்தினியாகவும் பொதுவாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தினியாகவும் ஆக்கினார்கள்.
மொத்தம் அறுபத்துநான்கு ஆண்டுகள் ராணியார் ஆண்டபின்னர் அவருடைய ஒரே
மகனாகிய அல்பெர்ட், எட்டாம் எட்வர்ட் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார்.
அவர்தான் தமிழர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பட்ட 'மொட்டைத்தலை ராசா'. அவர்
ஆட்சிக்கு வரும்போதே அறுபத்தைந்து வயதாகிவிட்டிருந்தது.
1910ஆம் ஆண்டில் ஹாலி வால்நட்சத்திரம் வந்தது.
உலகின் மாபெரும் சாம்ராஜ்யமாக விளங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி இறந்துபோனார்.
அவருடைய மகனாகிய ஜார்ஜ் ஐந்தாம் ஜார்ஜ் என்னும் பெயரில் ஆட்சிக்கு வந்தார்.
1911-ஆம் ஆண்டு அவரும் அவருடைய மகாராணி மேரியும் இந்தியாவுக்கு வந்தார்கள்.
அதற்கு முன்னாலெல்லாம் பட்டத்திளவரசர்கள்தாம் இந்தியாவுக்கு வந்து
சென்றார்கள். ஆட்சிபீடத்தில் இருக்கும் மன்னர்கள் வந்ததில்லை. ஆகவே இதுவே
முதல் தடவையாக அமைந்துவிட்டது.
இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஜார்ஜ் மன்னர் அதிகாரபூர்வமாகவும்
சடங்குபூர்வமாகவும்
முடி சூட்டிக்கொள்வது என்று ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
அப்போதெல்லாம் இந்திய சாம்ராஜ்யம் என்பது இக்காலத்து இந்தியா, பாக்கீஸ்தான்,
பங்க்லாதேஷ், சிக்கிம், பூத்தான், பர்மா ஆகியவை அடங்கியதாக இருந்தது.
அதன் தலைநகரமாகக் கல்கத்தா விளங்கியது.
அத்தகைய பேரரசின் தலைநகரம் ஒரு கோடியில் இருப்பது உசிதமாகத் தோன்றவில்லை.
கல்கத்தாவிலிருந்து பாலுச்சிஸ்தானம்/கராச்சி/பெஷாவாருக்கும் இடையே
இரண்டாயிரத்து ஐந்நூறு மைல்கள் - 4000 கீலோமீட்டர்கள்.
இந்தியாவுடைய மையப்பகுதியாக - இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர்
வசிக்கும் பிரதேசங்களின் அருகில் இருக்குவகையில் தலைநகர் இருக்கவேண்டும் என்று
எண்ணினார்கள்.
அவர்களின் இந்தக் கணிப்புக்கு ஏற்றதாக முகலாயர்களின் தலைநகராகவும் அதற்கும்
முன்னர் துருக்க சுல்த்தான்களின் தலைநகராகவும் அதற்கும் முன்பாக
ராஜபுத்திரர்களின் ஒரு
பிரிவினரின் தலைநகராகவும் அதற்கும் முன்பாக பரத கண்டத்தின் தலைநகரான ஹஸ்தினா
புரமாகவும் விளங்கிய டில்லியே தெரிந்தது.
ஆனால் டில்லியோ பல படையெடுப்புக்களால் அடிபட்டுப்போய் சோபையும் வளமும்
குன்றிப் போய் விளங்கியது.
ஆகவே டில்லிகு அருகே புதிதாக அழகிய புதிய நகரத்தை நிர்மாணித்தார்கள்.
அதற்குப் புது டில்லி என்று பெயரிட்டார்கள்.
கல்கத்தாவிலிருந்து 1910-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கால்கத்தாவிலிருந்து
புது டில்லிக்குத் தலைநகரத்தை மாற்றினார்கள்.
அத்துடன் புது டில்லியில் ஜார்ஜ் மன்னருக்கும் மேரி மகாராணியாருக்கும்
இந்தியாவின் சக்கரவர்த்தி/சக்கரவர்த்தினியாக முடிசூட்டினார்கள்.
அப்போது ஒரு பெரிய தர்பாரையும் கூட்டினார்கள்.
இதற்கு இந்தியாவின் 22 மாந்லங்களின் கவர்னர்களும் வைஸ்ராயும் 562 சுதேசி
சமஸ்தானங்களின் மஹாராஜாக்களும் அந்த தர்பாருக்கு வந்தார்கள்.
அவர்களுடன் வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்நாட்டுப் பிரமுகர்கள் ஆகியோரும் வருகை
புரிந்தனர்.
நாட்டின் அனைத்து பாகங்களிலும் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறச்
செய்யுமாறு ஆணையிடப்பட்டது.
சென்னையிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
அதை முன்னிட்டு லக்ஷ்மண சூரி என்பவர் ஜார்ஜ் சதகம் என்ற பெயரில் நூறு பாடல்கள்
கொண்ட பிரபந்தம் ஒன்றை இயற்றினார்.
கர்நாடக இசையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக விளங்கிய ராமநாதபுரம் பூச்சி
ஸ்ரீ¢வாச ஐயங்காரை முடிசூட்டு விழாவைச் சிறப்பித்து ஒரு கிருதியை
இயற்றித்தருமாறு விழாக்
குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
சென்னை ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற விழாவில் பூச்சி ஐயங்கார் அந்த கிருதியைப் பாடி
அரங்கேற்றம் செய்வதென்றும் கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை மிருதங்கமும்
திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் வயலினும் வாசிப்பதாகவும் முடிவாயிற்று.
இதை முன்னிட்டு பூச்சி ஐயங்காருக்கு ஒரு தங்க மெடல் கொடுப்பதாகவும்
முடிவாயிற்று.
இதைக் கேள்விப்பட்ட வயலின் கிருஷ்ண ஐயர் தமக்கும் மெடல் கொடுக்குமாறு
வற்புறுத்தினார்.
அந்த மெடல் பாடுபவருக்குக் கொடுக்கப்படுவதல்ல; கிருதிக்காகக் கொடுக்கப்படுவது
என்று குழுவினர் அடித்துச்சொல்லிவிட்டனர்.
தாமும் ஒரு கிருதியை இயற்றினால் தமக்கும் ஒர் மெடல் கிடைக்குமா என்று ஐயர்
கேட்டார்.
குழுவினர் இக்கட்டான் நேரத்தில் ஏற்பட்ட சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக
தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர்.
பாவம் இந்த சிக்கலில் அழகநம்பியா பிள்ளை ஒதுங்கியே இருந்துகொண்டார்.
கிருஷ்ண ஐயர் தஞ்சாவூருக்கு விரைந்து சென்று அங்கு இருந்த ஒரு தமிழ்ப் புலவரை
வைத்து பொருத்தமான ஒரு பாடலை இயற்றச் செய்தர்.
அதற்குத் தாம் இசையை அமைத்தார்.
விழாவில் பூச்சி ஐயங்கார் தாம் தோடி ராகத்தில் அமைத்த கிருதியைப் பாடினார்.
பெரும்
பாராட்டு அதற்குக் கிடைத்தது.
அதை அடுத்து கிருஷ்ண ஐயர் தம்முடைய பாடலை தனி ஆவர்த்தனமாக வாசித்தார்.
ராகம் அருமையாக இருந்து வாசிப்பும் அருமையாக இருந்ததால் அதற்கும் பெரும்
பாராட்டுக் கிடைத்தது.
அப்போது அந்த இசைக்கு உரிய பாடலின் வரிகளை யாரோ கேட்டார்கள்.
அந்த வரிகளை வாசித்தபோது சபை அதிர்ச்சியால் ஸ்தம்பித்துப் போயிற்று.
ஏனெனில் அவ்வளவு மோசமாக அந்தப் பாடல் இருந்தது. இலக்கணமோ, சந்தமோ
எதுவுமே அதில் இல்லை.
இருந்தாலும் கிருஷ்ண ஐயருக்கு மெடலைக் கொடுத்தார்கள்.
இப்போது அந்தப் பாடலோ அல்லது இசையோ மறைந்துவிட்டது.
ஆனால் பூச்சி ஐயங்காரின் பாடல் இருக்கிறது.
பல்லவி:
சததமு ப்ரோவுமய்ய சக்ரவத்தினி
சதய சுகுண சாந்த்ர ஸ்ரீராம
அநுபல்லவி:
பதித பாவனுடகு பத்ம தளாயதாக்ஷ
பரம தயதோ நீவு பரக ஷ¤பமோசகி
சரணம்:
அந்தமைன டெல்ஹி புரமுனகு விஜயமுஜேஸி
அபிஷேதுடகு இந்திய சக்ரவர்த்தியுதன
ப்ரஜலந்த்ரினி §க்ஷமமுலநு ஜேயுஸ¤
ஆநந்தமுகல ஈ லாலிதோடன் சுரக்ஷ¢தமுக
வேலயு சுண்டவலனனி முகுந்த ஸ்ரீநிவாஸ
நின்னு வேடத மந்தஹாஸ வதன ஷ்ரித ஜனாவன வர