• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

aavahanthi homam.

kgopalan

Active member
*21/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் உடைய பெருமைகளையும் சிறப்புகளையும் மேலும் தொடர்கிறார்.*

*துரிதமாக பலனைக் கொடுக்கக்கூடிய தான் ஆவஹந்தி ஹோமம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஒரு கணபதி ஹோமம்/நவக்கிரக ஹோமம் செய்கிறோம், இதற்கு என்று ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மந்திரத்தை இவ்வளவு முறை சொல்லி செய்ய வேண்டியது. 108 அல்லது 1008 என்று சொல்லி செய்கிறோம் அதற்கு சமஸ்கிருதத்தில் ஆவர்த்தி என்று பெயர்.*

*ஒரு குறிப்பிட்ட அளவு அந்த மந்திரங்களை சொன்னால்தான் நமக்கு வேண்டிய பலன் பெறமுடியும், அதனால் ஜெபமோ ஹோமமோ நாம் செய்ய வேண்டி இருக்கிறது, அந்த அளவுக்கு நமக்கு இடையூறுகள் இருக்கின்றன.*

*ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமம் எப்படி என்றால் அதர்வண மந்திரம் என்று பெயர். ஒரு தடவை சொன்னால் கூறும் பலனை கொடுத்துவிடும். அதனால் தான், ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்படவில்லை. பொதுவாகவே வேத மந்திரங்களில் அதுபோல் உள்ள மந்திரங்கள்

யாகத்தில் மட்டும்தான் உள்ளது. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு யாகமுமோ அல்லது ஷ்டியோ செய்தால் அங்கே நிறைய தேவதைகளை ஆவாகனம் செய்ய வேண்டி வரும். அப்போது அத்தனை தேவைகளுக்கும் ஒரு ஒரு முறைதான் ஆகுதிகள் கொடுக்கப்படும்.*

*108/1008 ஆவர்த்தி என்று சோம யாகங்களில் கிடையாது. ரிக் யஜுர் சாம வேத மந்திரங்களைச் சொல்லி அந்த ஆகுதியை நாம் கொடுத்துவிட்டால், பூர்ணமான பலனை அந்த தேவதை அனுகிரகம் செய்துவிடும். அந்த அளவுக்கு பெருமையை அந்த மந்திரம் செய்யும்.*

*இதுதான் வேத மந்திரத்திற்கு உள்ள பெருமை. மந்திரம் என்றால் என்ன இதைப்பற்றிய ஜெமினி மகரிஷி சொல்லும்போது, அதாவது நமக்கு நிறைய கர்மாக்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று கடமையாக கட்டாயம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு விகிதம் என்று பெயர். அதற்கான சம்பந்தத்தை நமக்கு காட்டுவதுதான் மந்திரம்.*

*இதை அநேக விதமாக சாஸ்திரங்களில் பிரித்திருக்கிறார்கள். எந்தெந்த மந்திரங்களை எங்கெங்கே நாம் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் காண்பிக்கின்றன. அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமாக உபநிஷத்துக்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.*

*நான் முன்னரே பார்த்தோம், இந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு விதமாக செய்யப்படும் என்று. வைதீக முறையாகவும் மற்றும் ஸ்ரீவித்யா உபாசக மந்திரங்களை அடிப்படையாக*

*கொண்டு முறையாகவும். அதிலே முதலில் இந்த ஸ்ரீவித்யா உபாசக விதான செய்யும் முறை பார்க்கும் பொழுது, அது தனக்காக என்று தான் செய்து கொள்ள முடியும். மற்றவருக்காக செய்ய முடியாது என்பதை அந்த கிரந்தங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.*

*பகவத் பாதர் ஆதிசங்கரர் பிரபஞ்ச சார சங்கர சங்கரஹா என்று ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் செய்யும் முறையை விரிவாக காண்பித்திருக்கிறார்.*

*அதிலேயே சொல்லும்பொழுது நித்திய கர்மாவோடு சேர்த்து செய்யும் முறையாக காண்பித்திருக்கிறார்கள் இந்த ஆவஹந்தி ஹோமத்தை. ஸ்ரீவித்யா விதானத்திற்க்கும் அடிப்படை வேதம்தான். வேதத்தில் இருந்து அட்சரங்களை மந்திரங்களை நியாசம் செய்துகொண்டு, அதை ஜெபம் செய்வதாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குத்தான் ஸ்ரீவித்யா விதானம் என்ற பெயர்.*

*இந்த ஆவஹந்தி ஹோமத்தை ஸ்ரீவித்யா விதானமாக பார்க்கும்பொழுது, எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்றால், கூஷ்மாண்ட ஹோமம் என்று ஆரம்பிக்கிறது. நைமித்திகம் ஆன கர்மா என்று பெயர். நமக்குத் தெரியாமல் செய்த அநேக விதமான தோஷங்கள் பாவங்கள் போவதற்காக செய்து கொள்ளக்கூடியது கூஷ்மாண்ட ஹோமம் என்பது.*

*மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். கூஷ்மாண்ட ஹோமம் என்கின்ற ஒரு தலைப்பிலேயே தனியாக அதை பார்ப்போம். அதுபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகஸ்தனுக்கும் ஷட் கர்மா தினே தினே இன்று ஆறு கர்மாக்களை கட்டாயம் செய்தாக வேண்டும் தினமும் என்று தர்ம சாஸ்திரம் சொல்லி இருக்கிறது.*

*ஏனென்றால், தெரியாமலேயே ஐந்து விதமான பாபங்களை ஒவ்வொரு கிரகஸ்தனும் செய்கிறான். இந்த நாட்களில் பிரம்மச்சாரி சன்னியாசி கூட இந்த ஐந்து விதமான பாபங்களை செய்ய நேரிடுகிறது. அதாவது சமையல், சமையல் செய்யும் பொழுது நமக்குத் தெரியாமல் ஐந்து

விதமான பாவங்கள் ஏற்படுகின்றன. கிரகஸ்தனுக்குதான் சமையல் என்பது நித்தியமாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசாரிகள் சன்னியாசிகள் தனக்குத் தானே சமைத்துக் கொள்ளக் கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது எப்போதுமே. அடிக்கடி நான் சொல்வது வழக்கம்,

எப்படி தாயார் தகப்பனாரை காப்பாற்ற முடியாதவர்கள், ஒரு விருத்தாஸ்மரத்தில் கொண்டுவந்து விடுகிறார்களோ, அதேபோல தாயார் தகப்பனார் இல்லாத குழந்தைகள், அவர்களை வைத்து காப்பாற்றக்கூடிய இடம், என்கின்ற இடங்கள் இருப்பதுபோல், பிரம்மச்சாரிகளுக்கு தினமும் சமைத்து கொடுப்பது என்று ஒன்று இருக்க வேண்டும்.*

*மிகப்பெரிய தருமமும் அது. அதேபோல சந்நியாசிகளுக்கு பிக்ஷ்சை போடுவது என்று அங்கங்கே ஏற்பாடு செய்ய வேண்டும். #ஏனென்றால் #பிரம்மச்சாரிகள்_தானே_சமைத்து

#சாப்பிட்டால்_மகா_பாதகமாக #சொல்லப்பட்டிருக்கிறது_அதேபோல #சந்நியாசிகள்_சமைத்தால்_அவர்கள் #ஏற்றுக்_கொண்ட_சன்னியாசி #செல்லுபடியாகாது என்று அந்த அளவுக்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கிறது சமைக்கக் கூடாது என்று.*

*கிரகஸ்தனுக்குதான் அந்தக் கடமை சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் குடும்பஸ்தன் தினமும் சமைத்து பிரம்மச்சாரி களுக்கும் சந்நியாசிகளுக்கும் போட்டுவிட்டு தான் சாப்பிட வேண்டும்

என்பது தரமம். அதற்கு முன்னர் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு தர்மம் இருக்கிறது. அதை ஒவ்வொரு குடும்பஸ்தனும் கட்டாயம் பண்ணவேண்டும் தினமும். இந்த அனுஷ்டானம் எதற்காக என்றால் சமையல் செய்யும்போது ஐந்து விதமான பாவங்களை நாம் செய்ய தெரியாமல் செய்ய நேரிடுகிறது.*


*சமையல் செய்கின்ற பொழுது, பாபம் அதாவது ஜீவராசிகள் இந்த உலகத்தில் வந்து பிறக்கின்ற போது ஐந்து விதமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வந்து தான் இங்கே பிறக்கிறார்கள் அவ்வளவு ஜீவராசிகளும். எந்த வழியாக அவர்கள் வருகிறார்கள் என்றால், தானியங்கள், தண்ணீர், உஷ்ணம், வழியாக அவர்கள் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறார்கள்.

அதை எல்லாம் நாம் சமையலில் உபயோகம் செய்கிறோம். இதுதான் பாபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போவதற்காக செய்யக்கூடிய தான் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு அனுஷ்டானம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
*14/12/2020 to 19/12/2020 No Broadcaste*
*20/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து தர்மங்களை பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*

*இந்த ஆவஹந்தி ஹோமம் வேதத்திலிருந்து எடுத்து அதை நாம் பயன்படுத்தி எல்லோருக்கும் அதனுடைய நன்மைகளை அடைய வேண்டும் என்று பிரபலப்படுத்தியவர், அதாவது அதற்கு முன்பு எல்லோராலும் இந்த ஹோமம் செய்ய முடியாமல் இருந்தது அதை சுலபமாக செய்ய முடியும் என்று வேத விற்பன்னர்களை கூட்டி எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று அனுப்பி வைத்து அதை நமக்கு சுலபமாக கொடுத்தவர் நமது மகா பெரியவா தான்.*

*உபநிஷத் பாகத்திலே இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது 108 க்கு மேலே உபநிஷத்துக்கள் இருக்கின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் அனுகிரகித்தது என்று 108. அதிலேயே பத்திற்க்கு பாஷ்யம் செய்த போது ஆதிசங்கரர், அதில் தைத்திரீயோப உபநிஷத் என்று ஒரு பாகம் வருகிறது. அதில்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது.*

*பொதுவாகவே, அனைத்து உபநிஷத்துக்களிலும் காமியம் ஆக சில பலன்களை உத்தேசித்து செய்யப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன.*

*பொதுவாக உலகத்தில் எப்படி பிரச்சாரம் என்றால், உபநிஷத்துகள் அனைத்துமே லோகத்தில் பர பிரமத்தை அடையக்கூடிய ஒரு வழியைத்தான் காண்பிக்கிறது என்று நாம் பிரசித்தமாக சொன்னாலும், அவாந்தர பலனாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.*

*அவாந்திர பலன் என்றால், மோக்ஷம் ஞானத்தை அடையவேண்டும் என்றால், அதற்கு முன்னால் செய்யவேண்டிய கடமைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. இந்த கடமைகள் எல்லாம் நாம் செய்த பிறகு உபநிடதங்களை நாம் வாசிக்க வேண்டும். அப்படி அந்தக் கடமைகளைச் செய்யும் போது நமக்கு இடையூறுகள் நிறைய ஏற்பட்டால், அவைகள் நீங்கி அதனுடைய பலன்கள் நமக்கு சீக்கிரமாக கிடைப்பதற்கு, உபநிடதங்கள் நிறைய காண்பிக்கின்றது.*

*ஒவ்வொரு உபநிடதங்களிலும், நிறைய காமிய கர்மாக்கள் சொல்லப்படுகின்றன. நைமித்திகம் ஆகவும் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. ஒதுக்கும் படியாக இல்லை. அதாவது திருமணம் ஆகவில்லை கல்யாணம் தள்ளிப் போகிறது என்றால், கல்யாணம் நித்தியமாக தான்

சொல்லப்பட்டிருக்கிறது காம்மியமாக இல்லை. இப்படி விவாகம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் நமக்கு இடையூறு ஏற்படும் பொழுது, அவைகள் நீங்குவதற்கு உபநிடதங்கள் உபாயங்களை காண்பிக்கின்றன.*

*அதேபோல் விவாகம் ஆனபிறகு தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்கிற பொழுது, பிரம்ம சொரூபம் உபநிஷத் முழுமையாக நமக்கு புரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்பொழுது அந்த இடைஞ்சல்கள் போய் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் அதற்கான உபாயங்கள் உபநிஷத்துக்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.*

*அதேபோல சந்ததிகள் ஏற்பட வேண்டும் என்பதற்கான உபாயங்களும் அதிலே சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான உபாயங்களும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்போது சுலபமாக சிசேரியன் வந்துவிட்டது என்று நாம் செய்து கொள்கிறோம். நம்முடைய தர்ம சாஸ்திரமும் வேதமும் அந்த சிசேரியன் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. கூடாது என்று சொல்லி இருக்கிறது,*

*ஏனென்றால் சுகப்பிரசவம் ஆக இயற்கையான முறையில் என்று நடக்க வேண்டும். அப்படி பிறந்தால் தான் அந்த குழந்தை வேதம் படிப்பதற்கு வேதத்தில் சொன்ன கர்மாக்களை செய்வதற்கு அதிகாரம் வரும். அந்த அளவிற்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அதனால் நாம் கூடுமானவரையில் சுகப்பிரசவம் நடப்பதற்கான முறையை கடைபிடிக்க வேண்டும். சிசரியன் சுலபமாக இருக்கிறது என்று நினைத்தால் தாயாருக்கு உடல் பலஹீனம் மிகவும் ஆகிவிடும். நரம்பு சம்பந்தமான நோய்கள் பிற்காலத்தில் ஏற்பட்டு கஷ்டப்பட நேரிடும். இப்படி வந்து விட்டது இந்த நாட்களில் அதை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை அது மாற வேண்டும்.*

*உபநிஷத்துக்களில் நிறைய உபாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன, சுலபமான முறையில் சுகப்பிரசவம் களை நாம் பெறுவதற்கு.*

*அதேபோல நாம் குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார விஷயத்தில், குடும்ப விஷயத்தில் முன்னேற்றங்களுக்கு ஆன நிலையையும் நிறைய உபாயங்கள் உபநிஷத்துகளின் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படி உபநிஷத்துக்களில் சொல்லப்படாத விஷயங்களே கிடையாது

. ஒவ்வொரு உபநிடதங்களையும் முதலிலிருந்து கடைசிவரை நாம் பார்க்க வேண்டும். நிறைய காமிய கர்மாக்களும் நைமித்திய கர்மாக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரசவத்திற்காக செய்யக்கூடியவை எல்லாம் நைமித்திகம் என்றும் பெயர். இதெல்லாம் காமியம் என்று ஒதுக்க கூடாது.*

*அதேபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் விஷயமும். தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். மகரிஷிகள் இரண்டு விதமாக இந்த ஆவஹந்தி ஹோமத்தை பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.*

*ஒன்று வைதீக மான முறையில் அனுஷ்டிப்பது. மற்றொன்று தாந்த்ரீக முறையில் அனுஷ்டிப்பது. வைதிகம் தந்திரம் என்று இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். மந்திர சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது என்று அர்த்தம். சாஸ்திரங்களில் தந்திரம் என்று சொன்னால்

அர்த்தங்கள் வேறு. இங்கு நாம் பார்ப்பது தந்திரம் என்றால் மந்திர சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்வது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் செய்யக்கூடியது. இப்படி வைதீக முறை தாந்திரிக முறை என்ற மகரிஷி இரண்டு விதமாக நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*

*மகாபெரியவா நமக்கு இந்த இரண்டையும் சொல்லிக் கொடுத்தாலும் கூட, வைதீக மான முறைக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தாந்திரிக முறையானது ஒரு நித்திய கர்மாவுடன் சேர்த்து செய்யக்கூடியதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போது காயத்ரி ஜபத்தை நாம் எடுத்துக் கொண்டால், காயத்ரி னுடைய பலன் நமக்கு அதிகமாக வேண்டுமென்றால்,

சந்தியாவந்தனத்தில் செய்யக்கூடிய தான காயத்ரி ஆவர்த்தியையே அதிகமாக செய்வது, என்று ஒரு முறை. அல்லது தனியாக சங்கல்பம் செய்துகொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது என்பது ஒரு முறை. இதே போல் தான் இந்த ஆபத்து ஹோமத்தையும், நமக்கு பிரித்து

கொடுத்திருக்கிறார்கள் இரண்டு விதமாக அதனுடைய பலன்களில் கூட வித்தியாசம் இருக்கின்றது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
22/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*

*ஆவஹந்தி ஹோமம் என்பது மந்திர சாஸ்திரத்தில் ஒரு முறையாகவும், வைதிக முறையில் ஒரு முறையாகவும் பார்க்கிறோம். மந்திர சாஸ்திரத்தில் அதை பார்க்கும்பொழுது நாம் தினமும் செய்யக்கூடிய ஒரு அனுஷ்டானம் ஆன வைஸ்வ தேவத்தில், கடைசியில் இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும் என்று மந்திர சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*
*அதாவது நாம் சமையல் செய்யும் பொழுது, 5 விதமான தோஷங்கள் ஏற்படுகின்றன. அது போவதற்காக செய்யக்கூடிய தான் இந்த வைஸ்வ தேவம் என்பது.*


*கண்டினி என்றால் காய்கறி பழங்களை நறுக்குவது. அவைகள் பூமியில் போட்டால் நன்றாக முளைத்து வரக்கூடிய சக்திவாய்ந்தவை. அப்படி இருக்கக் கூடியதை நாம் இருக்கின்றோம். அது ஒருவிதமான ஹிம்சை. அந்தப் பாபம் போவதற்காகவும், பேஷினி அதாவது இடிப்பது அரைப்பது தானியங்களை. அந்த தானியங்களில் ஜீவராசிகள் இருக்கின்றன. அதை நாம் இம்சை செய்கின்றோம். அந்தப் பாபம் போவதற்காக.*


*சுள்ளி எரிபொருளாக நிறைய வஸ்துக்களை நாம் உபயோகம் செய்கின்றோம். அவைகள் எரிகின்ற போது அதிலே பூச்சிகள் வந்து விடும். அது ஒருவகையான பாவம். ஜலகும்பஹாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதை சூடு செய்து உபயோகம் செய்கிறோம். அதிலே நல்லவைகள் செய்யக்கூடிய தான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அந்த ஜீவராசிகளை நாம் அழிக்கின்றோம். அதேபோல புடைத்தல் சலித்தல் இதுபோன்ற காரியங்களில் நாம் சில

இம்சைகள் செய்கிறோம். இந்த ஐந்து விதமான இம்சைகள் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய பாவங்கள் போவதற்காக தான், இந்த வைஸ்வதேவம் என்கின்ற இந்த அனுஷ்டானம் நாம் தினமும் செய்ய வேண்டும் என்று மகரிஷிகள் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.*
*அந்த வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்கின்ற பொழுது, இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும். வைஸ்வதேவம் என்பது மூன்று பாகமாக இருக்கிறது.*

*முதலில் தன்னை சுத்தி செய்து கொள்வதற்காக செய்ய வேண்டிய விஷயம். இரண்டாவது தேவதைகளை உத்தேசித்து அக்னியில் செய்யக்கூடிய ஆகுதிகள். மூன்றாவது பல ஜீவராசிகளை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன பலி. இப்படி மூன்று பாகமாக இருக்கின்றது வைஸ்வதேவம்.*

*இந்த மூன்றையும் செய்து முடித்த பிறகு, வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்து முடிப்பதற்கு முன்னால், இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்து கொள்ள வேண்டும் நியாசம் செய்துகொண்டு . அந்த மந்திரத்தில் சொல்லப்படக்கூடிய தான தேவதைகளை, நம்முள் ஆவாகனம் செய்து

கொள்வது இதற்குத்தான் நியாசம் என்று பெயர். ஜபம் செய்து அந்த மந்திரங்களை சொல்லி ஹோமம்/தர்ப்பணம்/உபஸ்தானம் செய்வது என்கின்ற முறையிலே வகுத்து கொடுத்திருக்கிறார்கள் நைமித்தியமாக ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது.*

*இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், அவரவர்கள் தனக்காக இதை செய்து கொள்ளலாம். மற்றவருக்காக மற்றவர் வைஸ்வதேவம் செய்ய முடியாது. செய்ய கூடாது. வைஸ்வதேவம் என்பது கிரகஸ்தன் தான் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் ஹௌபாசனம் என்பது இருக்கின்றதோ, அவர்கள்தான் இந்த வைஸ்வதேவத்தை செய்ய முடியும்.*

*பிரம்மச்சாரிகள் சன்யாசிகள் இவர்களுக்கு அந்த வைஸ்வதேவம் அனுஷ்டானம் கிடையாது. ஒருவருக்காக இன்னொருவர் சங்கல்ப்ம் செய்து கொண்டு செய்யக்கூடாது. இப்படி இந்த வைஸ்வதேவம் செய்யக்கூடிய நிலையில் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய முறையை விளக்குகிறார்கள் மந்திர சாஸ்திரத்தில் பகவத் பாதர் ஆதிசங்கரர்.*

*இந்த வைதிக முறையில் பார்த்தால், அதற்கு ஷட் பார்த்ர பிரையோகம் என்று ஒருமுறை இருக்கிறது. அதாவது பாத்திரங்களை சுத்தி செய்து அதை வைத்துக் கொண்டு ஹோமம் செய்வது. அல்லது அக்னி முகம் என்று சொல்வதும் வழக்கம்.*

*அந்த முறையை செய்துகொண்டு, ஒரு அக்னிஹோத்ரம் செய்த அக்னியையோ, அல்லது அரணியில் இருந்து கடைந்து எடுத்த அக்னியில் செய்யக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமம். அனைத்து ஹோமங்களும் இப்படித்தான் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை செய்யக்கூடியதான அக்னி எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. அதை நாம் முன்னரே விரிவாக அக்னி சரித்திரத்தில் பார்த்தோம். அக்னி என்னுடைய ஆவிர்பாகம் எத்தனை விதமான அக்னிகள் அவைகள் எங்கெங்கு இருக்கின்றன எந்த அக்கினியை எந்த முறையில் எந்த ஹோமத்தில் நாம் உபயோகம் செய்ய வேண்டும் என்பதை முன்னரே விரிவாக பார்த்துள்ளோம்.*

*அப்படி இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு, அக்னி ஹோத்திரம் செய்பவருடைய அக்னி அல்லது அரனி என்கின்ற கட்டையிலிருந்து கடைந்து எடுத்துவைத்த தான அக்னி. இந்த இரண்டிற்கும் ஏதாவது ஒன்றை வைத்து இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*

*அந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமான மந்திரங்கள். ஒரு தடவை செய்தால் போதும் இந்த ஆவஹந்தி ஹோமம், வைதிக முறையில் செய்கின்ற பொழுது, இரண்டு பாகமாக இருக்கிறது அந்த மந்திரம். அந்த அனுஷ்டானம் இரண்டு பாகமாக இருக்கிறது. அதாவது முதலில் ஜபம் அதற்கான சங்கல்பம் தனியாக செய்துகொண்டு செய்ய வேண்டும். பிறகு ஹோமம். இந்த இரண்டிற்கும் தனித்தனியாக சங்கல்பங்கள் செய்துகொண்டு, இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*

*இந்த மந்திரத்தை ஒரு தடவை சொன்னாலே போதும். அது ரொம்ப பலனை நமக்கு கொடுக்கக்கூடியது. அதர்வன மந்திரம் என்று பெயர். அதாவது நாம் உபநயனத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். கல்யாணத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் போல, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு சொல்லக்கூடிய மந்திரங்கள். கல்யாண மந்திரங்களை

நம்முடைய வாழ்நாளில் ஒரு முறை தான் நாம் சொல்கிறோம். அவைகள் நம்முடைய ஆயுட்காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியது. ஜன்மாவில் ஒரே ஒருமுறைதான் அந்த மந்திரங்களை நாம் உபயோகிக்கிறோம். ‌ உபநயனமும் அதே போல தான். அந்த மந்திரங்கள் அந்த குழந்தைக்கு ஆயுட் காலம் வரைக்கும் பலனைக் கொடுக்கக் கூடியது. ஆகையினாலே தான் அந்த மந்திரங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும்.*

*அந்த மந்திரங்களுக்கு அர்த்தங்கள் தெரியவில்லை என்பதனால், அலட்சியம் செய்யக்கூடாது. அந்த விஷயங்களில் போதுமான அளவு நமக்கு புரிதல் இல்லாத காரணத்தினால், இந்த நாட்களில், உபநயனம் மற்றும் கல்யாணங்கள் எல்லாம் செய்தும் செய்யாதது போல் ஆகிறது. காரணம் அந்த மந்திரங்களின் மீது நமக்கு சிரத்தைகள் குறைந்துவிட்டன. அவைகள் சொன்ன முறையிலே செய்வதற்கான எண்ணங்கள் நமக்கு இல்லை.*

*இந்த நாட்களில் எப்படி சுலபமாக இருக்கிறதோ,அப்படி செய்து கொண்டு வாழ்க்கையை ஒரு மாதிரி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த அளவுக்கு நாம் கஷ்டப்பட வேண்டி வருகிறது. அதனால் மந்திரங்களை நன்றாக தெரிந்து கொண்டு மிகவும் சிரத்தையாக செய்யவேண்டும். கட்டாயம் செய்து அந்த பலனை நாம் அனுபவித்துதான் பார்க்க முடியும். நம்முடைய அனுபவத்தில் அதை நாம் தெரிந்து கொள்ளலாம்.*

*அப்படி அந்த மந்திரங்கள் அதர்வன மந்திரங்கள் என்று பெயர். கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் அதர்வண மந்திரம் என்றால் ஒரு தடவை சொன்னால் போதும். ஆயுட் காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியவைகள். அதேபோல்தான் இந்த ஆவஹந்தி ஹோமத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். அந்த மந்திரத்தினுடைய அர்த்தங்கள் எல்லாம் மிகவும்
அற்புதமானது. அந்த அர்த்தங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
23/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் மந்திர சாஸ்திரங்களில் அர்த்தங்களை விரிவாக மேலும் பார்க்க இருக்கிறோம்.*

*ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறை என்று பார்த்தால், முதலில் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். கலசத்தில் பிரணவாத்வமாக உள்ள இந்திரனை பூஜை செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானதொரு மந்திரம் இது.*

*ஏன் இந்திரனை நாம் பூஜை செய்கிறோம் என்றால் அத்தனை தேவதைகளுக்கும் அவன் தான் இராஜாவாக இருக்கிறான். தேவராஜா என்று அவருக்குப் பெயர். இந்திரஹா என்றால் அது ஒரு ஸ்னானத்தையும் குறிக்கிறது, ஒரு நபரையும் குறிக்கிறது. ஒருவரை மாத்திரம் உத்தேசித்து என்று இல்லை.*

*இந்திர பதவி என்று சொல்கிறோம். அத்தனை தேவதைகளுக்கும் அதிபதியாக உள்ள ஒரு பதவி. அதனால் அவரை அங்கு நாம் ஆவாகனம் செய்கிறோம். ஷோடச உபசார பூஜைகள் எல்லாம் செய்து முடித்த பிறகு, இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ஜெபிக்க வேண்டும். அதிகபட்சம் நமக்கு எந்த அளவுக்கு பலன் சீக்கிரமாக வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவுக்கு ஆவர்த்திகள் செய்யலாம். அப்படி செய்து ஜெபம் செய்யலாம்.*

*ஜபம் செய்யும் போது நாம் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தினுடைய அர்த்தம் மிகவும் அற்புதமானது. இரண்டு விதமான அர்த்தங்களை இந்த மந்திரத்திற்கு பார்க்கலாம். சாயணாசாரியாரும் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார், ஆதிசங்கரரும் உபநிஷத் பாஷ்யத்தில் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்.*

*நிர்குணமான மற்றும் சகுணமான அர்த்தமும் உண்டு. இந்த மந்திரம் முதலில் நமக்கு ஸ்ரவணம் செய்து ஞானத்தை நாம் அடைவதற்கு, உபநிஷத் சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு சில அதிகாரங்கள் வேண்டும். அவை என்ன வென்றால் சாதண சதுஷ்டைய சம்பத்தி வேண்டும். இது யாருக்கு இருக்கிறதோ அவர்தான் உபநிஷத் சிரவணம் செய்ய முடியும் அவரால் மனதில் அதை கிரகித்துக் கொள்ள முடியும்.*

*பழைய நாட்களில் எல்லாம் நாம் போய் ஒருவரிடம் உபநிஷத் பாஷ்யம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டால், சாதண சதுஷ்டைய சம்பத்தியோடு வா என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன, எவையெல்லாம் நித்தியமான வஸ்துக்கள் எவையெல்லாம் அநித்தியமான வஸ்துக்கள் என்கின்ற விபாகம் நமக்கு மனசுக்கு தெரிய வேண்டும்.*

*வாயினால் சொன்னால் போதாது மனசுக்கு நன்றாக புரிய வேண்டும். அதாவது வேதாந்த சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு இந்திரிய நிக்கிரகம் வேண்டும். எதையெல்லாம் பார்க்க

கேட்க சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசைகள், எல்லாம் இருக்கக் கூடாது. அதற்குத்தான் போகம் என்று பெயர். நாக்குக்கு ருசியாகவும் பக்கத்திலேயே பட்சணங்களை வைத்துக்கொண்டு உபநிஷத் பாஷ்யம் வாசிப்பது என்பதெல்லாம் கூடாது அதெல்லாம் பொழுதுபோக்காக செய்வது.*

*பக்கத்தில் சாப்பிடுவதற்கான வஸ்துக்களை வைத்துக்கொண்டோ அல்லது குடிப்பதற்கு தண்ணீர் வைத்துக் கொண்டு நாம் படிக்கிறோம் என்றால் அந்த நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்பதற்காக ஒரு அர்த்தம்தான் ஆகும். சொல்கின்ற அவருக்கும் அந்த நேரம் வீணாகப் போய்விடும். எதிலும் ஆசையே இருக்கக் கூடாது. இந்த லோகம் இருந்தாலும் சரி மற்ற லோகம் ஆக இருந்தாலும் சரி அந்த பலன்களில் நமக்கு ஆசையே இருக்கக் கூடாது.*

*சமத மாதி ஷட்கம் என்று மூன்றாவது சாதம். அடிப்படையாக இந்த ஆறும் இருக்க வேண்டும் நமக்கு. எதையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய சக்தி, மற்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் இப்படி ஆறு இருக்கின்றன. இது எல்லாவற்றுக்கும் மேல் முமுக்ஷ்த்துவம் அவசியம். நாம் ஞானத்தை அடைய வேண்டும் என்கின்ற முழுமையான ஆசை ஈடுபாடு வேண்டும்.*

*இவைகளெல்லாம் நமக்கு இருந்தால்தான் உபநிஷத்தின் அர்த்தங்கள் நமக்கு புரியும். இல்லையென்றால் அதை சொல்பவர்களை பார்க்கும்போது நமக்கு எல்லாம் புரிந்தார் போல் தோன்றும். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு என்ன சொன்னார் என்று கேட்டால் ஏதோ அவர் சொன்னார் வித்தியாசமாக இருந்தது என்று சொல்வோம். மனதிற்கு கிரகித்தது போல் தோன்றினாலும் தத்துவத்தை கிரகிக்க முடியாது.*

*இது நமக்கு அந்த நேரத்தை ஏதோ நல்ல பொழுதாக போக்குமே தவிர, ஞானம் வரையிலும் கொண்டு போய் விடாது. அதனால்தான் சாதன சம்பந்த சந்துஷ்டி மிக மிக அவசியம். முதலில் நாம் இதற்காகத்தான் முயற்சி செய்ய வேண்டும்.*

*அதற்கான முயற்சியாக தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஏதோ நம்மை வேறு வழியில் கொண்டு செல்வதற்காக என்று நாம் நினைக்கக் கூடாது. இந்த கர்மாக்கள் எல்லாம் நம்மை என்ன செய்கின்றது என்றால் சித்த சுத்தியை நமக்கு கொடுக்கின்றன.*

*மன அமைதி அனைத்து விஷயங்களிலும் சகிப்புத்தன்மை போரும் என்கின்ற எண்ணம், இவைகளை எல்லாம் கர்மாக்கள் தான் நமக்கு கொடுக்கின்றன. இந்தக் கர்மாவின் துணை இல்லாமல் நாம் எவ்வளவு கட்டுக்கட்டாக, உபநிஷத்துக்களை நாம் படித்தாலும் கேட்டாலும் ஏதோ மனதிற்கு ஆகுமே தவிர அந்த சமயத்தில், பிறகு மீண்டும் நாம் இதற்கு வந்து விடுவோம்.*

*ஃபேன் இல்லாமல் நம்மால் உட்கார முடியாது படுக்கை இல்லாமல் நம்மால் படுக்க முடியாது. ருசி இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. இதெல்லாம் ஒருவருக்கு இருக்கு என்றால் ரொம்ப தூரம் தள்ளி இருக்கிறார் ஞான வழியில் இருந்து. இது எல்லாம் போதும் என்கின்ற எண்ணத்தை கொடுப்பது தான் இந்த கர்மாக்கள் எல்லாம்.*

*இதை நாம் மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தில், நாம் செய்யக்கூடிய ஜெபம் நமக்கு என்ன பலனை கொடுக்கிறது என்றால், சாதன சம்பந்த சந்துஷ்டி ஓரளவு நமக்கு ஏற்படுத்துகிறது.*

*அதனால்தான் மஹா பெரியவா இந்த ஹோமத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். பர பிரமத்தை குறித்து தான் இந்த மந்திரங்கள் எல்லாம் சொல்கின்றன. முதலில் இந்த மந்திரங்கள் பரம் பிரம்மத்தைப் பற்றி தான் சொல்கிறது. இரண்டு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன.

முதலில் பர பிரமத்தை என்ன சொல்கிறது என்று பார்த்தபிறகு, இந்த லோகத்தில் தேவைப் படும் படியாக எப்படி சொல்வது என்று இரண்டு விதமான அர்த்தங்களை எப்படி சொல்வது என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
*24/12/2020 No Broadcaste*
*25/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி மேலும் தொடர்கிறார்.*

*இந்த ஹோமம் இரண்டு விதமாக இருக்கிறது என்று முதலில் பார்த்தோம். அதாவது பூஜை ஜெபம் என்பது ஒரு பாகம். ஹோமம் என்பது ஒரு பாகம். இப்படி இரண்டு பகுதிகளாக இருக்கிறது அதிலே, நாம் ஜெபம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தின் அர்த்தங்களைத் தான் இப்போது பார்க்கிறோம்.*

*ரொம்ப அற்புதமான மந்திரம் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரம். ஒரு தடவை சொன்னால் போதும் அதிகமான பலன்களை நமக்கு கொடுக்கவல்லது. இந்த மந்திரம் உபநிஷத் பாகத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.*

*தைத்திரீய உபநிஷத்தில் இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இது ஒரு உபாசனை மந்திரமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஒரு உபாசனையும் நடுவில் இந்த ஆவஹந்தி ஹோம மந்திரமும் கடைசியில் ஒரு உபாசனையும் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்பொழுது

ஆதிசங்கரர், நமக்கு ஞானத்திலே முழுமையான ஈடுபாடு வர வேண்டும் என்றால், நமக்கு சில சின்னச் சின்ன ஆசைகள், அதிலே ஒரு ஆசை நமக்கு ஐஸ்வர்யங்களை பற்றியது. மேற்கொண்டு நாம் அடுத்த விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்றால் நம் கையிலேயே ஐசுவரியம் இருக்க வேண்டும்.*

*அதை கருத்தில் கொண்டு இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஐஸ்வர்யமும் பரம்பரையாக ஞானம் வரைக்கும் நமக்கு உபயோகப்படுகின்றன. இதை ஆதி சங்கரர் நமக்குச் சொல்கிறார். அதாவது தனஞ்சே கர்மார்த்தம். நாம் செய்ய வேண்டிய கர்மாக்கள் எல்லாம் எதற்கு என்றால் நமக்கு சித்த சுத்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக.*

*நமக்கு சில பிராரப்தங்களினால் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போவதற்காக. அதைத்தான் நாம் சங்கல்பத்தில் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்று சொல்கிறோம். அந்த மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாபங்கள் போவதற்காக.*
*அந்த ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போனால் தானே நமக்கு சித்த சுத்தி ஏற்படும். மனசிலே தெளிவு ஏற்படும் மகாபாரதத்தில், அதாவது ஒரு கண்ணாடி இருக்கிறது. நாம் நம்முடைய முகத்தை பார்த்து அலங்காரம் செய்து கொள்வதற்காகத்தான் அதை வாங்கி மாட்டிக் கொள்கிறோம். ஆனால் அந்தக் கண்ணாடியில் புழுதிகள் ஒட்டிக் கொண்டிருந்தால் நம்முடைய

முகம் அதிலே தெரியாது. தெரிந்தவரையில் போரும் என்று நாம் கண்ணாடியை பார்க்கிறோமா இல்லை. அந்தக் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற புழுதியைத் துடைக்கிறோம். அது செய்ய முடியக்கூடிய காரியம் தானே. உடனே நம்முடைய முகம் அந்தக் கண்ணாடியில் பளிச்சென்று தெரிகிறது.*

*அதுபோலத்தான் பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எப்படி கண்ணாடியில் புழுதி ஒட்டிக்கொண்டு இருக்கின்றதோ அதே போல. அதே போல நம்முடைய மனசிலே இருக்கின்றது துரிதங்கள் அதாவது பாவங்களை அந்த புழுதியை துடைப்பது போல் துடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு வைத்திருக்கிறார்கள் துடைப்பதற்காக. அனைத்து கர்மாக்களுமே ஆச்ச மனத்தில் இருந்து ஆரம்பித்து, நாம் என்னவெல்லாம் செய்கின்றோமோ அனைத்துக்குமே கர்மாக்கள் என்றுதான் பெயர்.*

*அவைகள் இரண்டாகப் பிரிந்து நமக்கு பலன்களை கொடுக்கின்றது ஒன்று புண்ணிய கர்மா இன்னொன்று பாப கர்மா. இப்படி இரண்டாக இருந்து நம்மை வழி நடத்துகிறது. நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற அழுக்குகளைப் போக்கும் புண்ணிய கர்மா வாக இருந்தால், பாப கர்மாவாக இருந்தால் மேற்கொண்டு அழுக்கு ஒட்டிக் கொள்ளும். அதாவது நல்ல காட்டன்

துணியை வைத்துக் கொண்டு ஒரு தடவை துடைத்தால் கண்ணாடி ஆனது பளிச்சென்று நம் முகம் தெரிகிறது. ஏற்கனவே ஈரமாக உள்ள புழுதி ஒட்டிக் கொண்டிருக்கின்ற துணியால் துடைத்தால் அதுவும் சேர்ந்து கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் பாப கர்மாவும்*

*அப்படித்தான் நம்முடைய சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் பூர்த்தியாக வேண்டும். பாவம் நிவர்த்தியாகிறது சித்த சுத்தி ஏற்படுகிறது. இதைத்தான் பகவத்பாதாள் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரத்திற்கு பாஷ்யங்கள் சொல்லும்பொழுது, அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.*

*அதற்காகத்தான் உபநிஷத் பாகங்களில் இந்த மந்திரமானது வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆதிசங்கரர் சொல்லி, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கான மந்திரத்திற்கான அர்த்தம்,

ஆத்மாத்திகமான முறையில் இந்த மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஈஸ்வரனை இந்த மந்திரமானது வர்ணிக்கின்றது. அதாவது ஆத்மா அனுபவம் என்பது நமக்கு வரவேண்டும்.

சுஷுக்தி நிலையிலே அந்த ஞானத்தை நாம் எப்படி அனுபவிக்கின்றோமோ ஆழ்ந்த உறக்கம் எப்படி நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம் அதாவது ஈஸ்வரனை அனுபவிக்கின்றோம். அதை நாம் முழித்துக் கொண்டிருக்கும்போதே அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுதான் நம்முடைய முக்கியமான நோக்கம்.*

*நாம் செய்யக்கூடிய தான அனைத்து காரியங்களுக்கும் பலன் அதுதான். அந்த ஈஸ்வரனுடைய ரூபத்தை தான் இந்த மந்திரம் வர்ணிக்கின்றது. ஈஸ்வரன் என்பது பரமாத்மா. பரமாத்மாவை இந்த மந்திரம் எப்படி வருணிக்கிறது என்பதை அடுத்த உபன்யாசத்தில்
 
26 & 27/12/2020 No Broadcaste*
*28/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் அதனுடைய பெருமைகளையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*

*இரண்டு பாகங்களாக இந்த ஆவஹந்தி ஹோமம் இருக்கிறது என்பதை முதலில் பார்த்தோம். பூஜை ஜெபம் ஒரு பாகமாகவும் ஹோமம் மற்றொரு பாகமாகவும் இருப்பதைப் பார்த்தோம்.*
*இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு நிறைய பலன்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் முக்கியமாக ஐந்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*

*மந்திரங்கள் இந்த ஐந்து பலன்களையும் விரிவாக பிரார்த்திக்கிறது. ஐந்து காமனைகளுக்காக இந்த ஹோமம் செய்யப்பட வேண்டும் என்று வேதம் நமக்கு காண்பிக்கின்றது. அதாவது முதலில் மேதா காமாய. ஞாபகசக்தியை அதிகப்படுத்துவது வேத வித்தையை நமக்கு சொல்வது இதை ஆவஹந்தி ஹோமம் நமக்கு காண்பிக்கிறது. நாம் படிக்க வேண்டிய படிப்பு அதுதான் வித்யா. வேதத்திற்கு தான் வித்தியா என்று பெயர்.
*
*லௌகீதமாக நாம் என்ன படித்தாலும் அதை படிப்பு என்று சொல்வதில்லை. நம்முடைய குழந்தைகளையே பையன் என்ன பண்ணுகிறான் என்றால் BA/M.Com/MCA/B.Tech பண்ணுகிறான் என்றுதானே சொல்கிறோம்

. படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வதில்லையே. MBBS பண்ணுகிறான்* என்று தான்
*சொல்கிறோமே ஒழிய படித்துக் கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்வதில்லை. தர்மசாஸ்திரம் வேதத்தை தான் வித்யா என்று சொல்லியிருக்கிறது.*

*காயத்ரி முதல் கொண்டு அனைத்து வேத மந்திரங்களும் சிந்திக்கின்றது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் மூலம். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது ஜாஸ்தியாக உள்ளவர்கள், அல்லது மன அழுத்தம்/கவலை ஜாஸ்தியாக உள்ளவர்களுக்கு இந்த ஆவஹந்தி ஹோமம் ஒரு அருமருந்து.*

*இரண்டாவது தன காமாய ஐஸ்வர்யம் நிறைய வரும். தனம் என்றால் வரவு செலவுக்கு யோக்கியதை ஆக உள்ளது தனம் என்று பொருள். தனம் என்றால் பணம் மட்டும் பொருளல்ல அது வெள்ளை பணமாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு அது பயன்படும் வேண்டும். அதற்குத்தான் தனம் என்று பெயர்.*

*பணம் நமக்கு பற்றாக்குறையாக இருக்கிறது நிறைய தேவைப்படுகிறது, இதற்காகவும் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக வாக் சித்தியை கொடுக்கிறது.*
*வாக் சித்தி என்றால் வாக்கிலிருந்து நல்ல வார்த்தைகள் தான் வரவேண்டும். வார்த்தைகள் தடித்து வரக்கூடாது. அதையும் இந்த ஹோமம் நமக்கு கொடுக்கிறது. மிகவும் கோபப்படக் கூடிய வார்த்தைகள் யாரிடம் பேசினாலும் வரக்கூடாது. கேட்போருக்கு இனிமையாக இல்லாவிட்டாலும்கூட அவர்களுடைய கோபத்தை ஏற்படுத்தும் படியாக இருக்க கூடாது நாம் பேசக்கூடிய வார்த்தைகள்.*

*நான்காவது பலன் நம்முடைய உடம்பில் 175 பாகங்கள் இருக்கின்றன. அதாவது அங்கங்கள். அவைகள் அனைத்தும் நன்றாக ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமானது.*

*பொதுவாக தேக ஆரோக்கியம் என்று நாம் சொல்கிறோம். இருதயம் முதற்கொண்டு எல்லா பாகங்களும் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் பயனுள்ளதாக நமக்கு அமைகிறது. இருதயம் தான் நம்முடைய உடம்பில் உள்ள அனைத்து அங்கங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. 175 அங்கங்களுக்கும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.

இருதயத்திலிருந்து ஆரம்பித்து எல்லா அங்கங்களும் நன்றாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் வழி செய்கிறது. அதாவது அந்த மந்திரங்களில் அப்படி வர்ணிக்கப்படுகின்றன*

*ஐந்தாவது முக்கியமான பலன் நம்முடைய சமூக தாரோடு நம்மை சேர்கிறது. ஒரு பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது இந்த நாட்களில். ஏனென்றால் 10 பேருக்கும் 10 விதமான அபிப்பிராயங்கள்/எண்ணங்கள்/பேச்சுகள் இதனால் சிதறிப் போய் விடுகின்றன. ஒரு சமூகமாக பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது. சொந்த அண்ணன் தம்பிகளே சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது.*

*இந்த நாட்களில் கணவன் மனைவிகள் சேர்ந்து இருப்பது ரொம்ப ஒற்றுமை என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கக்கூடாது சிதறிபோகாமல் இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து காரியங்களை செய்ய வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நம் சமூகத்தோடு சேர்ந்து இருப்பது என்பது கட்டாயம் வேண்டும்.*

*அது இல்லையென்றால் மனநிம்மதி நமக்கு சுத்தமாக போய்விடும். நாம் வாழ்ந்தும் வாழாது அதுபோல் சிதறிப் போய்விடும். அப்படி இந்த மந்திரங்கள் வருணிக்கின்றன நம் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் மிக அற்புதமாக காண்பிக்கின்றன. ஆகையினாலே தான் மஹாபெரியவா கட்டாயம் வலியுறுத்தி நாம் எல்லோரும் இந்த ஐந்து பலன்களும் அவசியம் பெற வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கிறார்.*

*இந்நாட்களில் நம் சமூகத்துக்கு இந்த ஐந்து பலன்களும் தேவைப்படுகிறது. பணம் காசு நிறைய தேவைப்படுகின்றது அதை சேர்ப்பதற்கு குறுக்கு வழியில் போகலாமா என்று தோன்றுகிறது. இதேபோல் ஞாபகசக்தி சுத்தம்மாக குறைந்து போய்விட்டது. ஒரு கணக்குப் போட வேண்டுமென்றால் கூட சட்டென்று கால்குலேட்டர் அல்லது மொபைல் போன் எடுத்து விடுகிறோம். சட்டென்று யோசனை செய்து ஒரு எண்ணை நம்மால் சொல்ல முடியவில்லை ஞாபக சக்தி குறைந்து போய் விட்டது.*

*மூன்றாவதாக வாக்கு மிகவும் தடிமனாக இருக்கிறது. ஒரு விவேகம் தெரியாமல் எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்று தெரியாமல் போய்விட்டது. வார்த்தைகள் படிப்பதினால் மன உளைச்சல் உண்டாகிறது. மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன. யாரிடம் என்ன பேசவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட வயதில் பெரியவர்கள் குடும்பத்தாரிடம் மற்றும் நம்மை விட சிறியவர்கள் இடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*

*இந்த நாட்களில் இவை அனைத்துமே சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் . நான்காவதாக தேக ஆரோக்கியத்திற்கு சொல்லவே வேண்டாம். தேக ஆரோக்கியம் நன்றாக தேவைப்படுகிறது மேலும் இவை அனைத்திற்கும் மேலாக, நம்முடைய சமூகத்தார் அனைவரும்

எங்கு இருக்கிறார்கள் என்றால் பாரததேசம் முழுவதும் சிதறி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது அல்லது அடிக்கடி பார்த்துக் கொள்வது இல்லாமல் போய்விட்டது. இந்த ஐந்து பலன்களும் நமக்கு தேவைப்படுகின்றது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் மகாபெரியவர் இந்த ஆவஹந்தி ஹோமத்தை நாம் கட்டாயம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.*

*இது ஒவ்வொரு பாடசாலையிலும், ரொம்ப நாளாகவே செய்துகொண்டு வருகிறார்கள் அதான் வழக்கம் புதிதாக பாடசாலை ஒன்றை ஆரம்பித்தால் அதற்கு நிறைய வித்தியாதர்கள் வர வேண்டும். அந்த வாத்தியார் அந்த பையனுக்கு சொல்லிக் கொடுக்கிற படிப்பானது நன்றாக வரவேண்டும். இதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் கட்டாயம் செய்ய வேண்டும்.

புது பாடசாலை ஆரம்பித்தால் இந்த ஹோமத்தை தினமும் செய்ய சொல்வார்கள். அதை செய்வதன் மூலம் தானாகவே படிப்பதற்கு மாணவர்கள் வருவார்கள். அந்தப் படிப்பு நன்றாக பயன்படும். அந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். இவை ரொம்ப நாளாக நடைமுறையில் இருக்கின்றன பாடசாலை ஆரம்பித்து அதில் செய்து கொண்டு வருவது.*

*அந்த மந்திரம் என்னுடைய அர்த்தங்கள் மிகவும் அற்புதமானவை என்னவென்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
29/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*

*அந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு பாகங்களாக இருக்கிறது என்று பார்த்தோம் முதலில் இந்திரனை குறித்து ஜபம் செய்வதாகவும், ஹோமம் செய்வது என்பது இரண்டாவது பகுதி.*
*ஜபம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு ஹோமம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு. பொதுவாக எந்த மந்திரத்தை ஜபம் செய்கிறோமோ அதேதான் ஹோமம் செய்வதும் வழக்கம். ஆனால் இங்கு மாத்திரம் ஜெபத்திற்கு மற்றும் ஹோமத்திற்கு*

மந்திரங்கள் தனித்தனி.
*இப்படி இரண்டு பாகமாக வேதமே நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த மந்திரத்திற்கான அர்த்தம் என்று பார்க்கும் பொழுது, இந்த மந்திரம் தான் ஜெபம் செய்ய வேண்டிய மந்திரம். இந்திரனுடைய சன்னதியில் ஜபம் செய்ய வேண்டிய மந்திரம். நாம் வாக்கினால் உபயோகப்படுத்தக் கூடிய அனைத்து வார்த்தைகளுக்கும் சந்தஹா என்று பெயர்.*

*மனுஷர்கள் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகள் பிராணிகள், பக்ஷிகள் மரம் செடி கொடிகள், பஞ்சபூதங்கள் அனைத்துமே ஒவ்வொரு விதமான சப்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து சப்தங்களுக்கு ம் அதிபதி தலைவன் யார் என்றால் பிரணவாத்தகமாக உள்ள இந்திரன், ஓம் காரத்திற்கு பிரணவம் என்று பெயர். இந்த பிரணவம் தான் அனைத்து வார்த்தைகளுக்கும் முதலாக இருக்கக்கூடிய ஈஸ்வர சப்தம்.*

*அனைத்து வார்த்தைகளுக்கும் சிறந்தது. அந்தப் பிரணவமும் சிறந்ததாகவும் பிரணவ் ஆத்மாவாக உள்ள இந்திரனும் நமக்கு பிரகாசிக்கிறார்.*

*அனைத்து தேவதைகளுக்கும் அதிபதியாகவும் அவர்கள் ஆவிர்பவிப்பதற்க்கு*
*முதன்முதலாக* *இருப்பவரும், இந்திரன் இருக்கிறார் அமிர்தம்*

*அதாவது மரணமே இல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் தேவர்கள்/தேவதைகள் என்று பெயர்.*
*தேவதைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், மரணம் என்பது கட்டாயம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பிறந்தவனுக்கு இறப்பும் இறந்தவனுக்கு பிறப்பும் கட்டாயம் உண்டு. இவை இரண்டுமே இல்லை என்பது தான் என்பவர்கள் தான் தேவர்கள் தேவதைகள்.*
*இறந்தவர்கள் தான் பிறக்கப் போகிறார்கள். அந்த இறப்பு என்பது இல்லை என்றால், அவன் எங்கிருந்து பிறக்கப்போகிறான் எப்போதும் தான் இருக்கின்றானே.*

*நம் வாழ்க்கையில் முதலில் வரக்கூடியது இறப்பு*

*தான். இறந்ததன் மூலமாகத்தான் நாம் ஒருவரும் பிறக்கின்றோம். அப்போது அந்த இறப்பு என்பதை நாம் தவிர்க்க வேண்டும் நிறுத்த வேண்டும். அந்த இறப்பு என்பது நமக்கு இல்லாமல் செய்பவர்கள் தான் தேவர்கள்.*

*அப்படி அனைத்துக்கும் ஆதாரமாகவும் முதன்முதலாக சிறந்தவராகவும் உள்ள அந்த இந்திரன் ஆனவர் தேவராஜன் என்று இந்திரனுக்கு பெயர். தேவதைகளுக்கு எல்லாம் அதிபதியாக இராஜா போலுள்ள இந்திரன் ஆனவர் எனக்கு சில அனுக்ரஹத்தை செய்ய வேண்டும். என்ன அனுகிரகம் என்றால், நல்ல ஞாபக சக்தி அனைத்து விஷயங்களையும் கிரகிக்க கூடிய சக்தி. நம்முடைய மூளை மூன்று விதமாக செயல்படுகிறது. அதாவது அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கிரஹிக்க கூடியது.*

*உள்வாங்கியதை நம்முடைய மனதில் நிலைநிறுத்துவது. அப்படி நம்முடைய மூளையில் நிலைநிறுத்தியதை தக்க சமயத்தில் வெளிப்படுத்துவது. இந்த மூன்றும் மூளைக்கு கட்டாயம் தேவை.*

*இதற்குத்தான் மேதா என்று பெயர் இந்த மூன்றும் சேர்ந்தது. அனைத்து உலக விஷயங்கள் வித்தைகள் எல்லாவற்றையும் சரியான முறையில் நம்முடைய புக்தி சக்தியானது சரியான முறையில் கிரகிக்க வேண்டும். படிக்கப் படிக்க நமக்கு அது மறந்து கொண்டே வருகிறது என்றால் அது புரோஜனம் படாது. அப்படி இருந்தால் வேடிக்கையாக அனைத்தும் படித்தவன் என்று சொல்வது.*

*அதை சரியான சமயத்தில் வெளிப்படுத்த தெரியவேண்டும். இந்த சக்தியை இந்திரன் ஆனவர் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். அதற்கு தகுந்தார்போல் என்னுடைய மேத்தா சக்தி இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கின்றது அதாவது ஒவ்வொருவருடைய மூளையும் 10

கம்ப்யூட்டருக்கு சமம். ஆனால் அதை நமக்கு வெளிப்படுத்த தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லாமல் நன்றாக நமக்கு அதை புத்தி சக்தியுடன் நானே கிரகிக்கும் படியாக ஆக வேண்டும்.*

*எதற்கு என்னுடைய படிப்பை வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்து மரணத்தை நான் ஜெயிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தியை இந்த இந்திரன் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.*

*அதற்கு ஆதாரமாக உள்ளது இந்த சரீரம் தேகம். இந்த சரீரம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற காரியங்களில் நாம் ஈடுபட முடியும். அதற்கு என்னுடைய அனைத்து இந்திரியங்களும் சரியான முறையில் செயல்பட வேண்டும். நம்முடைய உடம்பில் என்னென்ன அங்கங்கள் இருக்கின்றன அவ்வளவும் சரியான முறையில் ஆரோக்கியமான முறையில் செயல்பட வேண்டும்.*

*என்னுடைய வாக்குகளில் இருந்து நல்ல வார்த்தைகளே வரவேண்டும். மற்றவர்களுக்கு ஒரு கோபத்தையோ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. என்னுடைய காதுகள் மூலம் எப்போதும் நல்ல விஷயங்களையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் தான் என்னுடைய காதில் விழவேண்டும்.*

*இவ்வளவு அனு கிரகத்தையும் செய்ய முடியும் என்கின்ற இடத்திலுள்ள இந்திரனே, நீ எங்கு இருக்கிறாய் என்றால் பரமேச்வரனுடைய ஸ்தானத்திலே இருக்கிறாய். ஈஸ்சானாம் சர்வ வித்யானாம் என்று பரமேஸ்வரனை வேதம் சொல்கிறது. அனைத்து வித்தைகளுக்கும் அதிபதி வித்தைகள் ஆக உள்ளவர் யார் என்றால் பரமேஸ்வரன்.*

*பஞ்சபூதங்களாக உள்ளவர் பரமேஸ்வரன். அந்த இடத்தில் நீ இருப்பதினால் இந்த அனுபவங்கள் அவ்வளவையும் எனக்கு நீ செய்ய வேண்டும். மேலும் சில அனுபவங்களையும் எனக்கு செய்ய வேண்டும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*








































https://www.facebook.com/stories/21...H7YGj2hV6C_KQo_iTqJTv3e1rhS-yNo&__tn__=<<,P-R

https://www.facebook.com/vembu.raja...7YGj2hV6C_KQo_iTqJTv3e1rhS-yNo&__tn__=-]C,P-R
https://www.facebook.com/vrajaraman...7YGj2hV6C_KQo_iTqJTv3e1rhS-yNo&__tn__=-]C,P-R

https://www.facebook.com/photo/?fbi...AyH7YGj2hV6C_KQo_iTqJTv3e1rhS-yNo&__tn__=EH-R
 
*31/12/2020 & 01/02/2021 No Broadcasting.*
*02/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளையும் மேலும் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக தொடர்கிறார்.*

*அதில் இதுவரை ஆவஹந்தி ஹோமத்திற்கு அங்கமாக சொல்லப்பட்ட, ஜெபத்தின் உடைய அர்த்தங்களையும் அந்த மந்திரத்தின் பெருமைகளையும் பார்த்தோம். அடுத்ததாக ஹோமம் செய்யக்கூடிய மந்திரத்தின் பொருளை பார்க்கப் போகிறோம்.*

*12 ஆகுதிகளாக அந்த மந்திரம் அமைந்துள்ளது. அதாவது 12 ஹோமங்கள் செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் அற்புதமாக பிரார்த்திக்கின்றது. இதையெல்லாம் பிரார்த்தனை செய்கிறது என்றால், விபூதியை அதாவது ஐஸ்வர்யத்தை பிரார்த்திக்கின்றது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*

*ஸ்ரீஹீ என்றால் கிரகம் வீடு வாகனம் மனைவி குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் ஸ்ரீஹீ என்ற பெயர். லெட்சுமிஹீ என்றால் நம் வாழ்க்கைக்கு பயன் படக்கூடிய தான பணம். புஷ்டிஹீ என்றால் தேக ஆரோக்கியம். கீர்த்திஹீ என்றால் நல்லோர் உடைய சேர்க்கை/அறிவுரைகள் இந்த நான்குக்கும் தான் விபூதி என்று பெயர்.*

*இவைகளெல்லாம் கொடுக்கக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் பலன். அந்த வஸ்துக்களில் எல்லாம் ஈஸ்வரன் வாசம் செய்கிறார். அனைத்தையுமே அதாவது அனைத்து வஸ்துக்களையும் நாம் ஈஸ்வரனாக பார்க்கவேண்டியது என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*

*அனைத்து வகுப்புகளிலும் தேவதா அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் நாம் காலையில் எழுந்தவுடன், பூமியைப் பார்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் அதிலே தேவதைகள் இருக்கிறார்கள். ஜலத்தை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தண்ணீரில் தேவதைகள் வாசம் செய்கிறார்கள்.*

*சாதாரணமாக ஒரு இடத்திலே நான் உட்காருவதற்கு ஒரு ஆசனம் போட்டுக் கொள்கிறோம். அது பாய் துணி அல்லது பலகாய் இதை போட்டுக் கொண்டு உட்கார்ந்தாலும் அதில் தேவதை அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் ஆசனத்தை காலால் இழுத்துப் போட்டு உட்காரக்கூடாது. வெளியில் எங்கோ செல்கிறோம் அங்கு ஒரு ஆசனம் போட்டு இருக்கிறது அதை நம் காலால் இழுத்து போட்டுக்கொண்டு உட்காரக் கூடாது.*

*அப்படி உட்கார்ந்தால் பைல்ஸ் வியாதியினால் நமக்கு கஷ்டப்பட நேரிடும். அதனால்தான் காலால் அதை இழுக்கக் கூடாது தேவதைகள் அதிலே வாசம் செய்கிறார்கள். இப்படி அனைத்து வஸ்துக்களிலும் தேவதைகளாக பார்க்கவேண்டும் என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*


*இப்படி இந்த ஐஸ்வர்யங்களில் ஈஸ்வரனாக பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் அர்த்தம், ஐஸ்வர்யா ரூபமாகவும் அக்னி ரூபமாகவும் உள்ள அந்த தேவதையை நாம் பிரார்த்திக்கின்றோம். அனைத்தையும் எனக்கே அடையும் படியாக உள்ள சக்தியை அதிகப்படுத்தக்கூடிய உள்ள என்னிடம் என்ன வஸ்துவாக இருக்கிறதோ அது பணம் காசு ஆக கூட இருக்கலாம், வீடு வாசல் ஆக இருந்தாலும் சரி, அதை ஸ்திரமாகவும் அதிகப்படுத்தும் படியாகவும் நீ செய்ய வேண்டும்.*

*நீண்ட காலமாக என்னிடம் இருக்கக்கூடிய வஸ்து எனக்கே உள்ளதாக ஆக வேண்டும். கொஞ்சநாள் என்னிடமும் பிறகு மற்றவரிடம் போகாமல் இருக்கவேண்டும். என்னிடத்தில் நீண்டகாலம் ஸ்திரமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் படியாக செய்ய முடியும் உன்னால். அப்படி எனக்கு செய்ய வேண்டும்.*

*என்கிட்ட உள்ள ஐஸ்வர்யத்தை எப்படி எல்லாம் நீ கொடுக்க வேண்டும் அப்படி என்றால் உடம்பை மறைக்க கூடியதான நல்ல வஸ்திரங்கள். பணம் நிறைய இருக்கிறது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி இல்லை என்றால் புரோஜனம் இல்லை. அப்படி நாம் பார்த்திருக்கிறோம் ஒரு காலத்தில்.

சென்னையிலே வெள்ளம் வந்தது விட்டது வெள்ளம் எல்லோர் வீட்டுக்கும் வந்து விட்டது பேங்கில் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் ஒரு ரூபாய் கூட நமக்கு பயன்படாமல் இருந்தது. ஒரு உணவு கிடைக்கவில்லை ஈரத் துணியை கட்டிக் கொண்டு எவ்வளவு கஷ்டப் பட்டோம்? அப்படி ஒருநாள் இருந்தது நமக்கு பணம் இருந்தும் இல்லாதது போல் தான் இருந்தோம். ஏழை பணக்காரன் எல்லோரும் சமமாக இருந்த காலம் அது.*

*அப்படி இருக்கக் கூடாது. நினைத்த போது எனக்கு வஸ்திரங்கள் கட்டிக் கொள்ளும் படியாக இருக்க வேண்டும். நல்ல பல விதமான பசுக்களுடன் நிறைந்து நான் இருக்க வேண்டும். நான் சாப்பிடக்கூடிய பாலானது நல்ல சுத்தமான வஸ்துவாக இருக்கவேண்டும். பால் என்கின்ற

நிறத்தில் அது இருக்க கூடாது. பாலை கொடுக்கக்கூடிய சக்தி பசுக்களுக்கு தான் உண்டு நாம் நினைத்தால் உற்பத்தி செய்ய முடியுமா? பண்ண முடியாது மாடுகள் தானே என்று பசுக்களை குறைவாக நினைக்கிறோம். மாடுகள் விஷயத்திலேயே நமக்கு அலட்சியம் ஜாஸ்தியாக

இருக்கிறது ஸ்ரத்தை வரவில்லை இன்றுவரையில். அதாவது முழுமையான ஈடுபாடு நமக்கு வரவில்லை மாடு புல் வைக்கோல் அதாவது நாம் ஒதுக்கக் கூடிய வஸ்துக்களை சாப்பிட்டு, பால் என்கின்ற ஒரு உத்தமமான வஸ்துவை கொடுக்கின்றது. அதுபோல் நம்மால் ஒரு இயந்திரத்தை தயாரிக்க முடியுமா?*

*ஒரு பக்கம் வைக்கோலை நாம் போட்டால் மறுபக்கம் பாலாக வந்து கொட்டும் எந்திரத்தை நாம் கண்டுபிடித்துவிட்டோமா? இன்னும் இல்லை அதை செய்யக்கூடிய சக்தி மாட்டுக்கு தான் உண்டு. பசுக்கு தான் அந்த சக்தி உண்டு அதனால் எனக்கு பால் இருந்தால் போதும் என்று நினைக்காமல், சுத்தமான பசுக்களும் எனக்கு வேணும்.*

*எப்போதும் நல்ல ஆரோக்கியமான உணவு/தண்ணீர் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். அப்படி நீ செய்ய வேண்டும். மேலும் இந்த ஐஸ்வர்யங்களை முதலில் சொன்னது போல வீடு வாகனம் மனைவி குழந்தைகள் உலகத்திற்கு புழங்கக்கூடிய பணத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்லோர் உடைய சேர்க்கையையும் தொடர்ந்து நீ எனக்கு கொடுக்க வேண்டும்.*

*எப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்றால் நல்ல பூமி நல்ல குழந்தைகள் நல்ல ஐஸ்வரியம் இவைகளோடு கூட பசுக்களோடு கூட இவ்வளவு ஐஸ்வரியங்களையும் எனக்கு கொடுத்து அதை என்னிடத்திலே ஸ்திரமாக இருக்கும் படி நீ செய்ய வேண்டும் என்று அந்த ஆகுதியை சொல்லி ஸ்வாஹாஹா.*

*இது முதல் மந்திரத்தினுடைய அர்த்தம். இரண்டாவது மந்திரத்தினுடைய அர்த்தத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
*03/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரத்தின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*

*மிகவும் அற்புதமான மந்திரம். ஒரு தடவை அந்த மந்திரங்களை ஜெபம் செய்தால் நம்முடைய ஆயுள் காலம் முடிய எல்லாவற்றையும் ஸ்திரமாக நமக்கு அளிக்கக்கூடிய சக்தி அந்த மந்திரங்களுக்கு உண்டு.*

*அவைகள் பணங்காசு ஆக இருக்கட்டும் தேக ஆரோக்கியமாக இருக்கட்டும் மனைவி குழந்தைகளாக இருக்கட்டும் நல்லோர் உடைய சேர்க்கை நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்பவர்கள் இவர்களை ஸ்திரமாக இருக்கும் படி நாம் செய்ய வேண்டும்.*

*அப்படி இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன. முதலில் நாம் செய்த ஆகுதி நல்ல வஸ்திரம் கட்டிக் கொள்வதற்கு. நல்ல பால் கொடுக்கக்கூடிய பசுக்கள். சாப்பிடுவதற்கு யோக்கியமாக உள்ள

அன்னம். அதனியியம் அதாவது சாப்பிடும் படியாக இருக்க வேண்டும். அரிசி என்றால் இப்பொழுது ரப்பரில் வருகிறது அது சாப்பிடக்கூடய வஸ்துவா அலங்காரத்திற்கு ஒரு பாக்கெட்டில் மாட்டி வைக்கலாம். காருக்குள்ளேயே கொத்துக்கொத்தாக திராட்சைகள் தூங்கும் பிளாஸ்டிக்கில். பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர சாப்பிடுவதற்கு லாயக்கில்லை.*

*நமக்குப் பசி வந்தால் அதிலிருந்து ஒரு திராட்சை எடுத்து சாப்பிட முடியுமா முடியாது பார்க்கத் தான் முடியும். அப்படி இல்லாமல் சாப்பிடுவதற்கு யோக்கியமாக அன்னம். குடிப்பதற்கு நல்ல தண்ணீர். அது இல்லாமல் நல்ல பூமி நல்ல சொல்பேச்சு கேட்கும் படியான குழந்தைகள். நம் மனது போல் நடந்து கொள்ளும் மனைவி. இவர்கள் எல்லாம் எனக்கு அமைய வேண்டும் என்று முதல் மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*

*அடுத்து வரக்கூடிய தான மந்திரங்கள் நல்லோருடைய சேர்க்கை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றது மற்ற ஆகுதிகளில் வரக்கூடிய மந்திரங்கள்.*

*ஆமாயந்து அப்படி என்றால், பிரம்மச்சாரி அதாவது நம் சொல் பேச்சு கேட்டு நம்மிடத்தில் உள்ள வித்தையைக் கற்றுக் கொள்ளக் கூடியவன். அவனுக்குத்தான் பிரம்மச்சாரி என்ற பெயர்.*

*நாம் படித்த படிப்பை நம்மிடம் சொல்லிக் கொள்வதற்கு மாணவர்கள் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றால், இது மூன்றாவது ஆகுதி. விமாயந்து வி என்றால் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். அசடாக இருக்கக்கூடாது.*

*மேதா சக்தி அதிகமாக உள்ளவனாக இருக்கவேண்டும். இது நான்காவது ஆகுதி. பிரமாயந்து பிரம்மச்சாரினஹா என்றால், சொல்லிக் கொடுக்கக் கூடிய படிப்பை அவன் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.*

*ஏதோ படித்தோம் எதற்காக என்றால் ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கும் என்ற காரணத்திற்காக படிப்பது. அல்லது இவ்வளவு சம்பளம் வரும் ஸ்டைபன்டு வரும் என்று படிப்பது என்பது கூடாது. அப்படி இல்லாமல் அந்தப் படிப்பை படித்து முடித்த பிறகு பயன்படுத்த கூடியவனாக இருக்க வேண்டும்.*
*அவன் கற்றுக்கொண்ட படிப்பை திரும்பவும் சொல்லிக்கொடுக்கும் படியாகவும் அவன் படிக்க வேண்டும். என்னிடத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பையும் வஸ்துக்களையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி உள்ளவனாக இருக்கவேண்டும். மேலும் நல்லதையே நினைப்பவன் ஆக இருக்க வேண்டும்.*

*நாம் ஓரிடத்தில் சென்று படிக்கிறோம், அந்தப் படிப்பு நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும். மேலும் அந்த வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் அந்த படிப்பு என்கின்ற எண்ணத்தோடு உள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாணவன் எனக்கு கிடைக்க வேண்டும்*

*இப்படியாக நம்மிடம் வித்தையை கற்றுக் கொள்ளக்கூடிய மாணவனை பற்றியும் பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். மேலும் இம் மந்திரம் எப்படி பிரார்த்திக்கின்றது என்றால், எனக்கு எப்பொழுதும் உதவி செய்வதற்கு என்னை சுற்றி எப்போதும் மாணவர்களும் மற்றும் எல்லோரும் இருக்க வேண்டும். அவர்கள் ஆலோசனை சொல்பவர்கள் ஆக வேலையாட்கள் ஆக மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அந்தேவாசினஹா என்று பெயர்*

*தக்க சமயத்தில் அவர்கள் எனக்கு ஆலோசனை சொல்ல கூடியவர்களாக கிடைக்க வேண்டும். வேலையாட்கள் எப்போதும் எனக்கு நிறைந்து இருக்க வேண்டும். இவர்களெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் அவரே கஷ்டப்படுகிறார். அப்படி இருக்கக் கூடாது. நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் உடனே அதைக் கொடுத்து உதவி செய்பவராக இருக்க வேண்டும் நம்மிடத்தில் இருக்கக் கூடியவர்.*

*வேலையாட்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்றால் சம்பளத்துக்காக அவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்று இருக்கக்கூடாது. சம்பளம் என்பது தேவைதான் ஆனால் அதுவே முக்கியம் என்று நினைக்காமல், இவ்வளவு நாள் நமக்கு சம்பளம் கொடுத்து நம்மை காப்பாற்றியிருக்கிறார், அப்படிப்பட்ட நல்ல எண்ணத்தோடு என்ன சுற்றி இருக்க வேண்டும் அவர்கள். அவர்கள்

உண்மையாக வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். என்னிடத்தில் ஒரு மாதிரியாகவும் வெளியில் சென்றால் வேறுவிதமாகவும் பேசக் கூடியவர்களாக இருக்கக்கூடாது.*
*எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். தமாயந்து எப்பொழுதும் நமக்கு உண்மையாக உழைக்க கூடியவராகவும், ஓரிடத்தில் வேலை

செய்யும்பொழுது அந்த முதலாளி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவராகவும், நானும் என் முதலாளியும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று என்ன கூடியவரும், முதலாளி நஷ்டபட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நம்மால் முடியவில்லை என்றால் அவரே கொடுத்து உதவி செய்யக் கூடியவராகவும் எனக்கு அமைய வேண்டும் என்னை சுற்றி உள்ளவர்கள்.*

*இப்படி இரண்டு விதமான அர்த்தங்களையும் இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது. மேலும் யசஹா என்றால் என்னைப் பற்றி நல்லவிதமாக, அனைவரும் பேச வேண்டும். ஜனங்களுக்கு மக்களுக்கு மத்தியில் என்னைப் பற்றி நல்லபடியாக பேசம்படியாக நான் இருக்க வேண்டும்.*

*ஸ்ரேயான் என்றால் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை நான் அடைய வேண்டும். என்னை சுற்றியுள்ள சினேகிதர்கள் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் ஈஸ்வரன் இடத்திலேயே பக்தியோடு நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு

சினேகத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நண்பர்களை எனக்கு நீ ஏற்படுத்த வேண்டும் இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது மேற்கொண்டு மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன அவை என்ன என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
*05/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமையும் அது சொல்லக்கூடிய முறையும் அர்த்தங்களையும் பார்த்துக் கொண்டு வருவதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*

*12 ஆகுதிகள் செய்து முடித்த பிறகு உபஸ்தானம் செய்ய வேண்டும். மிகவும் முக்கியமானதொரு மந்திரம் இது. மிகவும் அற்புதமாக பிரார்த்திக்கின்றது.*

*நாம் உபயோகிக்கக் கூடிய அனைத்து வஸ்து களுக்கும் அபிமானி தேவதா பஹஹா. என்னை நீ எப்பொழுதும் என் அருகிலேயே இருந்து காத்தருள வேண்டும். என்னை அனைவருக்கும் தெரியும் படியாக நீ செய்ய வேண்டும். நான் படித்த படிப்பு அனைவருக்கும் உபயோகமாக இருக்க வேண்டும்,

படிப்பு விஷயமாக நான் பட்ட சிரமங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் அப்படி நீ என்னை செய்ய வேண்டும். எப்பொழுதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் என்னை விட்டு விலகி சென்று விடக்கூடாது என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கின்றது.*

*இப்படியாக இந்த உப ஸ்தானத்தை முடித்து, பிறகு ஜெயாதி முதற்கொண்டு உத்திர தந்திரத்தை செய்து அந்த கோபத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.*

*இதுதான் ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறை. அடுத்ததாக இந்த ஹோமத்தை யார் யாரெல்லாம் செய்யலாம் எப்பொழுது செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.*

*இந்த ஆவஹந்தி ஹோமத்தை அனைவருமே செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து செய்யலாம். அதேபோல எந்த வேத காரர்களும் செய்யலாம். எந்த சூத்திர காரர்களும் செய்யலாம்.*

*இது யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டதினால், அவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அனைத்து வேதக்காரர்களும் இதை செய்யலாம்.*

*தன்னுடைய வேதம் மற்றும் சூத்திரத்தில் இல்லாவிடில் மற்ற வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் எல்லா வேதகாரர்களும் இதை செய்யலாம் ஆனால் முதலில் அந்த மந்திரங்களை அத்தியனம் செய்து கொள்ள வேண்டும்.*

*ஒரு குருவை வைத்து அந்த மந்திரங்களை அத்தியனம் செய்து கொண்டு இந்த ஹோமத்தை செய்ய வேண்டும். அவரவர்களுடைய ஆசாரப்படி அந்த அக்னி முகத்தை செய்து இந்த ஹோமத்தை செய்து கொள்ள வேண்டும்.*

*ஏனென்றால் இந்த விஷயத்தில் சாஸ்திரங்கள் நமக்கு நிறைய தகவல்களைத் தருகின்றது. இதற்கு அதி தேசம் என்று பெயர். ஒரு இடத்தில் ஒரு விஷயம் சொல்லியிருந்தால் அதை எடுத்து இன்னுமோர் இடத்தில் செய்யலாம்/ எடுத்துக்கொள்ளலாம்.

அந்த முறையில் இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்ற படியால், யஜுர் வேத முறைப்படி அக்னி முகம் செய்து செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை.*

*அந்த பிரதானத்தை மட்டும் தான் யஜுர்வேதத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்த அக்னி முகம் போன்றவற்றை நம்முடைய சூத்திரப்படி செய்ய வேண்டும். அதற்கு தர்மாதிதேசம் என்று சாஸ்திரங்களில் சொல்லுகின்ற வழக்கம்.*

*கல்பாத்தி தேசமென்று இருக்கிறது. இதற்கு அதிதேசஹா என்று சாஸ்திரங்களில் சொல்கிறார்கள். இந்த பிரதானத்தை மாத்திரம் எடுத்து செய்வது. இந்த ஆவஹந்தி ஹோமத்தினுடைய ஜபம் ஹோமம் உபஸ்தானம் இதை மட்டும் எடுத்து நம் சூத்திரப்படி முகம் செய்து இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்.*

*அதனால் எல்லா வேதத்தவர்களும் இதை செய்யலாம். எப்போது இதை செய்வது, இப்பொழுது வழக்கத்தில் அனுஷ நட்சத்திரத்தன்று செய்வது என்று வைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஏனென்றால் மகாபெரியவா தான் இதை நமக்கு ஆவஹந்தி ஹோமம் என்று கண்டுபிடித்தது சொல்லி உள்ளார்கள். அதனால் மகாபெரியவாவின் அனுஷ தினத்தில் நாம் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம்.*

*இப்பொழுது சிராவணம் என்று ஆவணி அவிட்டம் அன்று நாம் செய்கிறோம். பௌர்ணமி அன்று செய்கிறோம். அன்றைக்கு தான் மகரிஷிகள் நமக்கு வேதத்தை உபதேசித்த தினம் அதனால் அன்று அந்த உபாகர்மாவை செய்கிறோம். அதுபோல் இதை அந்த அனுஷ நட்சத்திர தினத்தன்று செய்யலாம்.*

*அதே போல் நம்முடைய ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யலாம். அல்லது கிருஷ்ணபக்ஷ திரயோதசி அன்று செய்யலாம் என்று மந்திர சாஸ்திரம் காண்பிக்கின்றது.

கிருஷ்ண பக்ஷ திரயோதசி அன்று நாம் எந்த மந்திரத்தை ஜெபம் செய்தாலும் எந்த அனுஷ்டானத்தில் செய்தாலும் மிகவும் உயர்ந்த பலனை அது கொடுக்கின்றது என்று மந்திரோபதேசம் வாங்கிக் கொள்வதற்கான நாட்களை சொல்கின்ற பொழுது ஒரு குரு முகமாக மந்திரத்தை நாம் உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும்.*

*என்றைக்கு மந்திரோபதேசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று மந்திர சாஸ்திரம் காண்பிக்கின்றது என்றால் கிருஷ்ணபக்ஷ திரயோதசி அன்று. அதனால் இந்த தினத்தில் இந்த ஹோமத்தை செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது.*

*மிகவும் அற்புதமான மந்திரங்கள் பிராத்திக்கின்றது அதனால் அனைவரும் இதை செய்ய வேண்டும். அனைத்து வேத காரர்களும் மற்றும் சூத்திரகாரர்களும் இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்து நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவையான ஐஸ்வர்யங்களை/ஆரோக்கியம்/மனவலிமையை இந்த அனுஷ்டானத்தில் மூலம் சுலபமாக அடைந்து விடலாம் என்பதை நாம் விரிவாக பார்த்தோம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
06/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளையும் மந்திரத்தினுடைய அர்த்தங்களையும் இதுவரை விரிவாக பார்த்தது என்னவென்று தெரிந்து கொண்டோம்.*

*இந்தப் பதிவில் சில சந்தேகங்கள் ஆவஹந்தி ஹோமத்தை எப்பொழுது செய்ய வேண்டும் காலம் யார் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலாக பார்க்க இருக்கிறோம்.*
*அதில் கேள்வி என்ன என்றால் இந்த ஹோமத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்
டும். எந்த அக்னியில் இதை செய்ய வேண்டும் என்றால் அக்னி பலவிதமாக உள்ளது. ஹௌபாசனா /

சமிதாதானா / லௌகீகா அக்னி என்று இருக்கிறது. எந்த அக்னியில் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும். பிரம்மச்சாரி அல்லது கிரகஸ்தன் இதில் யார் இந்த ஹோமத்தை செய்யலாம். இப்படி நிறைய பேர் சந்தேகங்கள் கேட்டு இருப்பதினால், அதற்கான பதிலைப் பார்ப்போம்.*

*இந்த ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய காலமானது காலை வேளையில் தான் செய்ய வேண்டும். நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் எந்த ஒரு அனுஷ்டானத்திற்க்கும் காலம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அனுஷ்டான திற்கும் ஒவ்வொரு காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.*

*அதிலே ஹோமங்கள் செய்வதற்கு காலம் காலை வேளையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.*
*மாத்தியானிக்க*
*காலத்திற்கு முன்பாக ஹோமங்களை முடிப்பதாக செய்ய வேண்டும். பொதுவாகவே ஸ்மார்த்த கர்மா, ஸ்மார்த்தம் என்றால் தனிப்பட்ட முறையில் காலம் சொல்லப்படாத கர்மாக்களுக்கு பிராதஸ்காலம் தான். சூரிய உதயத்தில் ஆரம்பித்து மாத்தியானிக்க காலம் முடிவதற்கு முன்பாக செய்துவிடவேண்டும் அபரான்ன காலத்திற்க்கு போகக்கூடாது.*

*அதாவது மத்தியானம் பன்னிரண்டே முக்கால் மணியை தாண்டக்கூடாது எந்த ஒரு அனுஷ்டானமும். ஸ்மார்த்த கர்மாக்கள். அதற்கான காலம் சொல்லப்பட்டால் அதில் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலங்களிலும் ஒரு அனுஷ்டானம் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய உதயத்திற்கு முன்னர் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள் இருக்கின்றன. சூரிய உதயத்தில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள். சூரிய உதயம் ஆனவுடன் செய்ய வேண்டிய

அனுஷ்டானங்கள் அதாவது சங்கம காலம். மாத்தியானிக்க/குதப்ப/அபரான்ன/சாயங்காலத்தில்/சூரிய அஸ்தமன வேளையில்/ முன்/பின்/நடு ராத்திரியில் இப்படி அனைத்து காலங்களிலும் அனுஷ்டானம் சொல்லப்பட்டு இருக்கிறது,*

*நாம் ஒரு ஜபம் பூஜை ஹோமம் செய்ய வேண்டுமானால், வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். அந்தக் காலங்களை நாம் தெரிந்து கொண்டு செய்யாவிட்டால் நல்ல பலன்கள் ஏற்படுகின்றனவோ இல்லையோ கெடுதல்கள் நிறைய வரும்.*

*மருத்துவர் நமக்கு மாத்திரை கொடுத்தால் ஒரு மாத்திரை சாப்பிட்ட பிறகு அடுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய காலத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை எழுதிக் கொடுத்தால் மூன்று வேளையும் ஒரே நேரத்தில் நாம் சாப்பிட முடியுமா? மூன்று

வேளைக்கு பதில் இரண்டு வேளை என்று நாம் அப்படி மாற்றக்கூடாது. அப்படி செய்தால் டாக்டர் சொல்வதை நாம் செய்யவில்லை என்கின்ற ஒரு காரணம் மேலும் இரண்டு வேலை சாப்பிடதன் மூலம் வேறு விதமான பாதிப்புகள் வந்து சேரும்.*
*இப்படி இரண்டு விதமான நஷ்டங்கள். இதே போல தான் அந்தக் கர்மாக்களுக்கும் எந்த நேரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதோ அப்போது தான் செய்ய வேண்டும். சில கர்மாக்கள் வேண்டுமானால் நேரம் தவறி செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.*

*அதைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்படி இந்த ஆவஹந்தி ஹோமம் செய்வதற்கு காலை வேளைதான் காலம். சூரிய உதயத்திற்குப் பிறகு மாத்தியானிக்க காலம் முடியும் முன்பு செய்து முடிக்க வேண்டும்.*

*இது அனைத்து ஸ்மார்த்த கர்மா களுக்கும் பொருந்தும். இதுதான் காலம். எந்த அக்னியில் செய்வது. ஹௌபாசன அக்னியில் சில அனுஷ்டானங்களை தான் செய்யலாம் எல்லாவற்றையும் அதில் செய்யக்கூடாது. சப்த பாத யஞ்யங்கள் என்று உள்ளது. இவைகளை அவ் ஹௌபாசன அக்னியில் தான் செய்ய வேண்டும். கல்யாணம் ஆனவுடன் அவருக்கு வரக்கூடிய அக்னியை தான் ஹௌபாசன அக்னி என்று சொல்கிறோம்.*

*ஆவஹந்தி ஹோமம் இதில் செய்யக்கூடாது. இதற்கு தனியாக அக்னி வைத்து செய்ய வேண்டும். ஹௌபாசன அக்னியில் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.*

*யார் யாரெல்லாம் இதை செய்யலாம் என்றால் பிரம்மச்சரரி கிரகஸ்தன் அனைவருமே செய்யலாம். ஆவஹந்தி ஹோம மந்திரத்தை அத்தியனம் செய்திருக்க வேண்டும். அக்னி முகம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி முறையாக தெரிந்திருந்தால் ஷட் பாத்தர பிரயோகம் என்று ஒரு முறை இருக்கிறது.*

*இதை செய்து அந்த ஹோமத்தை செய்ய வேண்டும். வேறு விதமாக செய்யக்கூடாது. பிரம்மச்சாரிகள் செய்யலாம் இந்த முறையில் செய்ய வேண்டும். மந்திரங்களை அத்தியனம் செய்யவில்லை என்றால் அத்தியனம் செய்தவர்களை கொண்டு செய்ய வேண்டும்.*

*அதற்கும் பலன் உண்டு. யாரும் செய்யலாம். ஒருவரை நியமனம் செய்து எனக்காக நீங்கள் செய்ய வேண்டுமென்று செய்ய சொல்வது. அப்படியும் செய்யலாம் ஆவஹந்தி ஹோமம் என்பது மிகவும் முக்கியம். துரிதமான பலனைக் கொடுக்கக் கூடியது என்பதினால்தான் மகா பெரியவா நமக்கு இதை அனுக்கிரகம் செய்து இருக்கிறார்கள். ஆவஹந்தி ஹோமம் எல்லா இடங்களிலும்

நிறைய நடக்க வேண்டும் என்று சொன்னதற்கான காரணம் இந்நாளில் வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு என்ன மிகவும் தேவையோ எதை நாம் அடைய வேண்டும் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றோமோ அந்தப் பலனை சுலபமாக அடைவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம்.*

*ஏனென்றால் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற ஒரு குழப்பமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் அப்படித்தான் இருக்கின்றன.

காலத்தைப் பார்த்தால் இப்பொழுது மழை பெய்கின்றது இது மார்கழி மாதம். காலம் மாறிப் போய் விட்டது மார்கழி மாதத்தில் மழை பொழிகின்றது. ருது தர்மங்கள் மாறிப் போய்விட்டன. அதுபோல வருடம் முழுவதும் மரங்கள் காய்க்கின்றன. அனைத்து காயும் பழமும் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. மனுஷன் செய்த தவறா அல்லது காலத்தின் மாறுபாட என்று தெரியவில்லை.*

*ஆனால் அப்படி இருக்கக் கூடாது. எந்த சமயத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்க வேண்டும். வருடம் முழுவதும் மாம்பழம் கிடைக்கின்றது என்றால் அது நம் உடம்பிற்கு ஆரோக்கியமல்ல. மாம்பழம் சாப்பிட கூடிய காலம் என்று உள்ளது. அந்தக் காலத்தில்தான் மாம் பழம் காய்க்க வேண்டும் சாப்பிட வேண்டும். அதற்கு சீசன் என்று சொல்கிறோம் அந்த சீசனில் அது கிடைக்க வேண்டும்.*

*வருடம் முழுவதும் கிடைக்கின்றது நல்லதுதானே என்றால் நம்முடைய தேகத்திற்கு அது ஆரோக்கியமற்றது. இப்படி கால தர்மங்கள் எல்லாம் மாறிப் போய்விட்டன. நம்முடைய தேகம் ஒழுங்காக செயல்பட வேண்டும் இந்த காலங்கள் மாறிப் போய் இருந்தாலும். அப்படி என்றால் இவைகள் எல்லாம் தாண்டி நமக்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது.*

*மனதளவிலும் உடலளவிலும் நமக்கு நிறைய சக்திகள் தேவைப்படுகிறது. அந்த சக்தியைக் கொடுக்கக் கூடியது இந்த ஆவஹந்தி ஹோமம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதனால்தான் மகாபெரியவா நமக்கு இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும் என்று காண்பித்திருக்கிறார். அதனால் யார் யாரெல்லாம் இந்த ஹோமத்தை முறையாக கற்றுக் கொண்டு செய்ய முடிந்தால் செய்யவும் அதற்கு கட்டாயம் பலன் உண்டு.*

*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top