• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Amavasya tharpanam Can we offer Amavasya tharpanam in our house by self? What is the procedure?

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்





1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்

"சிரார்த்தம்" என்று எழுதுவது ரொம்ப தப்பு. சிரத்தையுடன் செய்யும் ஒரு காரியத்தை ஸ்ராத்தம் என்று சொல்லவேண்டும். துரதிருஷ்ட வசமாய் இந்த "சிரார்த்தம்" என்ற வார்த்தை எங்கிருந்தோ வந்து அர்த்தமில்லா ஒரு குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. ஆகையால் தயவுசெய்து ஸ்ராத்தம் என்றே பேசவோ எழுதவோ செய்யவும். நாம் நமது இளைஞர்களுக்கு சரியான முன்னுதாரணம் காண்பிக்கவேண்டும். தவறான வார்த்தை பிரயோகம் மொழியை கெடுத்துவிடும்.
 
நான் ஆகஸ்ட் மாதம் காசி ,கயா அலகாபாத் போக பேண்டும் என்று உத்தேசித்துள்ளேன் . அங்கு நமது தமிழ் சாமவேத வாத்யார்களின் பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தட்ஷனை விபரங்களும் கிடைக்கப்பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் காசியில் உள்ள வாத்தியார்களில் மிகவும் சிக்கனமான முறையில் நடத்தி தருபவர்கள் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
 
Is Pitru lokam same as Yama Lokam. After death, do the souls go to Pitru Lokam or Yama Lokam. Read from sources that Pitru Lokam is ruled by Aryaman. I wish to understand the journey after death. My observations are as follows. Correct me wherever I am wrong.

1. At the time of soul leaving the body, servants of Yama come to take the soul to Yama Lokam. There Yama asks his servants to take the soul back to the place where he/she lived.
2. The soul then observes what his/her sons are doing for the next 10 days.
3. During the course of these 10 days, the preta (soul) slowly gets human forms like head, face, hands, legs..
4. 11th day ritual, ekodishtam is done for getting the deceased out of pretatva ( from the state of being preta ).
5. 12th day ritual called sapandeekaranam is the process of joining the deceased with the ancestors in Pitru lokam
6. On the 13th day, the servants of Yama come back again to take the deceased back to Yama lokam and this process takes 1 yr time on earth. Depending on whether the son does the monthly shradhham or not, the journey of the deceased will be a tortorous/smooth one.
7. After the 1 yr journey when the deceased reaches Yama lokam, based on its karma it will be go to either hell or pitru lokam.

Are my above observations correct.

In pitru lokam, we have 3 generations of pitrus (great grandfather, grandfather and father) in the form of aditya, rudra and vasu. Once the life span of the son is over, the great grandfather moves away from pitrulokam to accommodate the son. Does Yama decide on the rebirth of the great grandfather at this point ? Or does the great grandfather go directly to Vaikuntam ?

Are the mantrams for amavasya tarpanam and surya/chandra grahanam same. if not where is the difference ?
 
In my humble opinion, it is slightly different. Pitrulokam is there. But I don't think heaven and hell exist. Pitrus acquire the power of God. They can take any number of forms to present themselves at the residence(s) of their any number of son(s) to receive ellu, jalam and akshatai [Thil, water & rice]. Pitrulokam is like the departure lounge or waiting hall before taking another birth. Once there it acts as the sole impartial arbiter of its good and bad deeds on earth. Accordingly, it rewards or punishes itself by deciding to take birth in a particular family. Since it [the Soul] is God Almighty, it can look into the past, present and the future. It can read our sanchita karma [carried-over karma from previous births], prarapta karma [that which has already started bearing fruits of our sanchita karma] and agami karma [that which we have earned now in the process of trying to get rid of carried-forward karma].

It takes a lump from our accumulated Karma and decides to suffer or enjoy its consequences. That's why kids born at the same time and in the same place [hospital etc] go through varying fortunes.

Wherever copulation [including rape] takes place, you have souls floating around to enter that specific yoni for taking birth. It may be the yoni of an insect, animal, poor human, rich and powerful human etc. The soul taking birth brings along with it fortune or disaster for the one who is giving it birth. So much so, you may find somebody becoming a pauper or rich immediately after a child is born. This applies in all sorts of relationships as well.

Just before the soul enters a Yoni, it splits itself into two -- man and woman. When, where and how they will come together to live out their karma is programmed in a chip which we cannot decipher. It is encrypted. Things start unrolling from the moment the soul is conceived in new yoni.

Children are indebted to their parents all their life because they are the ones who gave them a chance to expend their Karma through their union. [Remember, all those who copulate do not beget children].
But the parents are in no way obliged to their kids. If they discard their child immediately on birth, no sin accrues to them. It is the child's karma to be discarded thus.

God or Yama simply facilitates this operation of a soul's cycle of birth and death. Now tell me, can there be a better heaven than the residences of a Tata, Birla, Ambani, Adani, Bill Gates, White House, Rashtrapathi Bhavan, Governor's bungalow, an HIG/MIG flat etc? And can there be a more depraved hell than the slums we come across in our towns and cities?

This is a very interesting topic about which we can go on and on discussing. And it leads to understanding Advaita without any problem. Anyhow, I am happy that someone has started it. I look forward to reading more on the subject.
 
In my humble opinion, it is slightly different. Pitrulokam is there. But I don't think heaven and hell exist. Pitrus acquire the power of God. They can take any number of forms to present themselves at the residence(s) of their any number of son(s) to receive ellu, jalam and akshatai [Thil, water & rice]. Pitrulokam is like the departure lounge or waiting hall before taking another birth. Once there it acts as the sole impartial arbiter of its good and bad deeds on earth. Accordingly, it rewards or punishes itself by deciding to take birth in a particular family. Since it [the Soul] is God Almighty, it can look into the past, present and the future. It can read our sanchita karma [carried-over karma from previous births], prarapta karma [that which has already started bearing fruits of our sanchita karma] and agami karma [that which we have earned now in the process of trying to get rid of carried-forward karma].

I am still confused between Yama Lokam and Pitru Lokam. It is said Pitru Lokam exists between earth and heaven and it is ruled by Aryaman.
After the 13th day ritual, servants of Yama take the jeevatma with them and the journey takes 1 year (equivalent to that of earth) to reach Pitru Lokam. Throughout this journey, the jeevatma gets food and water courtesy the monthly shraddham and tarpanam.

Or is it that after the 13th day ritual, the jeevatma goes to Yama Loka where Lord Yama decides its fate based on the good or bad deeds done on earth. After enjoying the benefits or getting tortured, it then goes to Pitru Lokam and resides there till such time it takes rebirth. This is possible because 3 generations of pitrus reside in Pitru Lokam and once a new member comes, the oldest member is pushed out to take rebirth. Which of the above 2 is correct ?

Assuming after reaching Pitru Lokam, how long does the jeevatma reside there. Let us say father , grand father and great grand father are there in Pitru Lokam. Once the son dies, the great grand father moves out and the son joins the remaining two.
My understanding is the jeevatma of the great grand father goes to Yama Lokam from Pitru Lokam where Lord Yama decides the fate of the soul, whether to go to hell or heaven or back to earth for being born again based on the good or bad deeds done by him when he was alive on earth. Correct me if I am wrong

Since all dead people go to Pitru Lokam, we will have good and bad Pitrus (based on how they were on earth). Those Pitrus who did good things on earth alone will enjoy their time in Pitru Lokam and then once they move out. Lord Yama decides their fate. Then what about those Pitrus who are suffering in Pitru Lokam due to their bad deeds on earth. Do they suffer double punishment at the hands of Lord Yama once they move out of Pitru Lokam to Yama Lokam. Need clarification on this.
 
Last edited:
Saama vedha amavasai tharpana viviaram:சாம வேதம் அமாவாசை தர்ப்பண விவரம்.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.



.
அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று

புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத:

மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே

மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்)

ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்)

(அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர்

சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம்

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

ஆவாஹந மந்த்ரம்:ஏதபித்ர:ஸோம்யாஸ: கம்பீரேபி:பதிபி:பூர்விணேபி:த்த்தாஸமப்யம் த்ரவிணேஹ பத்ரம்,ரயிஞ்சந:
ஸ எவ்வீரம்நியச்ச உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமீதிமஹீஉஸன்

அஸ்மின் கூர்ச்சே வர்கத்வ்ய பித்ரூன் ஆவாஹயாமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி சில கட்டை தர்பங்களை தாம்பாளதிலுள்ள
கூர்ச்சதின் மேல் வைக்கவும்.

ஆஸந மந்த்ரம்: ஆய்ந்துந: பித்ர: ஸோம்யாஸ:அக்கினிஷ் வாத்தாஹ பதிபி:
தேவயானை:அஸ்மின் யஞ்ஞேஸ்வதயா மதந்து அதிப்ரூவந்துதே அவந்த்ஸ்மான் வர்கத்வ்ய பித்ரூணாமித மாஸனம்.

ஸகலாராதனை: சுவர்ச்சிதம்; கருப்பு எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.

பித்ரு வர்க்கம்:
கீழ் கண்ட ஒவ்வொரு கோத்ரம் கொன்ட மந்த்ரம் தர்ப்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளதிளுள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.

……………..கோத்ரான்…………..ஸர்மண: வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை.

……………கோத்ரான்…………..ஸர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை

…………………கோத்ரான்……………..சர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

கீழ் கண்ட மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

………………கோத்ரா: …………..நாம்நீ வஸு ரூபா: மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3 தடவை.

…………………கோத்ரா:…………….நாம்நீ ருத்ர ரூபா பிதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

………………….கோத்ரா:………….நாம்நீ ஆதித்ய ரூபா பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

கீழ் கண்ட மந்த்ரம் தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது

…………..கோத்ரா:…………..நாம்நீ வஸு ரூபா: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

……………..கோத்ரா:…………நாம்நீ ருத்ர ரூபா: பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

……………..கோத்ரா:………நாம்நீ ஆதித்ய ரூபா: பிது:ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

மாதா மஹ வர்க்கம்: தாயார் பிறந்த கோத்ரம்.

…………….கோத்ரான்…………ஸர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

………………….கோத்ரான்…………..ஸர்மண: ருத்ர ரூபான் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

………………கோத்ரான்…………….ஸர்மண: ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை.

……………கோத்ரா:………நாம்நீ: வஸூ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி3 தடவை.

………….கோத்ரா:………நாம்நீ: ருத்ர ரூபா: மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை/

……………….கோத்ரா:………….நாம்நீ: ஆதித்ய ரூபா: மாது ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.
மஹாளய தர்பணம் செய்யும் போது மட்டும் மேற் கூறிய தர்பணத்தை செய்த பிறகு இதையும் சேர்த்து செய்ய வேண்டும்.

தத்தத் கோத்ரான் தத்தத் ஸர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதீ வர்கத்வ்ய அவஸிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

ஞாதாக்ஞாத வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

பிறகு கீழ் வரும் மந்த்ரங்களை சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளதிற்குள் அப்பிரதக்‌ஷிணமாஹ சுற்றவும்.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம். (உபவீதி) ப்ரதக்‌ஷிண நமஸ்காரம்.

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நமஹ யாநி காநி ச பாபானி
ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்‌ஷிண பதே பதே.

பூணல் இடம். கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
யதாஸ்தான மந்த்ரம்.

உஷந்தஸ்த்வா நிதீமஹீ உஷந்து உஷத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வ்ய பித்ரூண் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

குசோதகம்: தாம்பாளத்திலுள்ள கூர்ச்சத்தை பிறித்து எடுத்து கை கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் விடவும்.

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந ச பாந்தவா: நாந்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை: த்ருயத த்ருப்யத த்ருப்யத. பூணல் வலம்.
.
தகுதிகேற்ப தக்‌ஷிணை , வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தத்தம் செய்து வைத்து கொண்டு வாத்யாரிடம் கொடுக்கவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புன்யஹ் பலதம் அதஸ் ஷாந்திம் ப்ரயஸ்சமே. அனுஷ்டித தில தர்பண மந்த்ர ஸாத்குன்யம் காமய மானஹ யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே ந மம.

காயேந வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை. ஶ்ரீமன் நாராயணாயேதி ஸமர்பயாமி
 
As per my brahaspathi :For amavasya tharpanam after bath straight away tharpanam to be done without donning vibhuthi and combing hair. For punya kala tharpanam viz chithra, adi, aipasi and thai masa pirappu and vishnupathi, shadaseethi and grahanam tharpanam is to be done after donning vibhudhi and combing or hair.
Always a few grains of rice is to be mixed with gingelly seeds for tharpanam.
Brahma yagnam has to be follwed after tharpanam.
The water and gingelly mix after tharpanam is to be thrown at a place where the seeds if at all germinate and grow should not be in a place whee you will normally see. The place whee the tharpanam was done has to be wiped off so that no one will walk on it.
 
I am still confused between Yama Lokam and Pitru Lokam. It is said Pitru Lokam exists between earth and heaven and it is ruled by Aryaman.
After the 13th day ritual, servants of Yama take the jeevatma with them and the journey takes 1 year (equivalent to that of earth) to reach Pitru Lokam. Throughout this journey, the jeevatma gets food and water courtesy the monthly shraddham and tarpanam.

Or is it that after the 13th day ritual, the jeevatma goes to Yama Loka where Lord Yama decides its fate based on the good or bad deeds done on earth. After enjoying the benefits or getting tortured, it then goes to Pitru Lokam and resides there till such time it takes rebirth. This is possible because 3 generations of pitrus reside in Pitru Lokam and once a new member comes, the oldest member is pushed out to take rebirth. Which of the above 2 is correct ?

Assuming after reaching Pitru Lokam, how long does the jeevatma reside there. Let us say father , grand father and great grand father are there in Pitru Lokam. Once the son dies, the great grand father moves out and the son joins the remaining two.
My understanding is the jeevatma of the great grand father goes to Yama Lokam from Pitru Lokam where Lord Yama decides the fate of the soul, whether to go to hell or heaven or back to earth for being born again based on the good or bad deeds done by him when he was alive on earth. Correct me if I am wrong

Since all dead people go to Pitru Lokam, we will have good and bad Pitrus (based on how they were on earth). Those Pitrus who did good things on earth alone will enjoy their time in Pitru Lokam and then once they move out. Lord Yama decides their fate. Then what about those Pitrus who are suffering in Pitru Lokam due to their bad deeds on earth. Do they suffer double punishment at the hands of Lord Yama once they move out of Pitru Lokam to Yama Lokam. Need clarification on this.

Need opinion from experts on the above query
 
I have a query related to Amavasya Tharpanam. Should this be done after 12 noon. Reason why I am asking this is like many of the office goers, I too have to leave for office by 7 AM. That being the case, I do sandhavandanam and Amavasya Tharpanam between 5 45AM to 6 30 AM. Is this acceptable.


I have one more question related to rebirth of an individual. Say the father of the son has passed away recently. So in pitru lokam the great grandfather, grand father and the father will reside. Does that imply re birth of the great grandfather will not take place till such time the son lives in the material world and that only after the son dies, the great grandfather will be born again ?
 
Last edited:
I also want to learn the mantras (please in Sanskrit/English) as I do not get any acharyas where I am living(out of India).
There are books available which give step by step guidance on how to do Amavasya Tarpanam at home. There are also videos available on YouTube which are very helpful.
 

Latest ads

Back
Top