பானு ஸப்தமி 15-08-21 ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு ஸப்தமி , இந்த நாள் ஸூரிய க்ரஹண நாளுக்குத் துல்லியமானது ,
அதாவது இன்றைய நாளில் நாம் செய்யும் புண்ய நதி ஸ்னானங்கள், பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள், நாமஸங்கீர்தனங்கள், போன்றவை ஸாதாரண நாட்களில் செய்வதில் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் ஸுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை , இன்று காலையில் புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்வதும் ஸூரிய நமஸ்காரம் செய்வதும் , ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸூர்யனுக்கு உரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் , கோதுமை மாவால் செய்த பக்ஷணங்களை நிவேதனம் செய்வதும் தாமிரம் (செப்பு) பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும் , ஸூரியனின் அருளைப் பெற்றுத் தரும் , மேலும் கண்களில் பார்வையில் உள்ள கோளாறுகள் விலகும் , உயர்ந்த பதவிகள் கிடைக்கும் .
பானு சப்தமி நாளில் சூரிய பகவானை விரதமிருந்து வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடிய வாய்ப்பு கைகூடி வரும். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும்.
சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிற்றுக்கிழமை. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக இணைந்து வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது.
ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் என்ற சூரிய காயத்ரி மந்திரங்களையும் சொல்லி வணங்கலாம்.