V
V.Balasubramani
Guest
'7 மணி நேர நரகமாக மாறிய போக்குவரத்து நெரிசல்!' - ஃபேஸ்புக்கில் கொதிக்கும் சென்னைவாசிகள்
கடந்த 10 நாட்களாக தினமும் கொட்டிவரும் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன்பு சென்னையில் பெய்ததா என்பது சந்தேகமே. ஒட்டுமொத்த சென்னையே மழைநீரின் வடிகாலாக மாறிவிட்டதோ என்று கூறுமளவிற்கு உள்ளது.
மழை அவசியமான ஒன்றே... யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் 'மா மழை போற்றுதும்....' என்றும், 'பெய்யெனப் பெய்யும் மழை என்றும்...' நமது இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சிய மழை என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்த நிலை சென்னைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று(திங்கள்) பெய்த கனமழையால் சென்னை வாகன ஓட்டிகள் பட்ட அவஸ்தை, மாலை தொடங்கி இரவு முழுக்க நீடித்தது பெரிய துயரமே. அண்ணாசாலை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி நூறடி சாலை, அடையாறு - திருவான்மியூர் சாலைகள் என்று மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைவெள்ளக்காடாய் மாறிப்போயின. அதே போல சென்னைப் புறநகர்ப் பகுதிகளும் இந்தத் துயரத்திலிருந்து தப்பவில்லை.
Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=55489