• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Compositions of sri. K. R. Narayanan. (Haridasa Narayanan)

Status
Not open for further replies.
# 16.

ராகம்: ஹரிகாம்போதி. 28 வது மேளகர்த்தா.
தாளம்: ஆதி.

S r2 g3 m1 p d2 n2 s - s n2 d2 p m1 g3 r2 s
ஸ ரி கு ம ப தி நி ஸ - ஸ நி தி ப ம கு ரி ஸ

பல்லவி:
அவதாரம் எடுத்தது |ஏனோ | ராமா ||
அவனியில் அதர்மம் | அழிந்து | போகவோ ||

அனுபல்லவி:
சிவன் வில்லை வளைத்து | சீதையை | மணக்கவோ ||
ப4வ ப4யம் தீர்த்து உன் | ப4க்தரைக்| காக்கவோ ||

சரணம்:
பரசுராம கர்வம் | பங்கம் | செய்யவோ||
அரசுரிமையைத் தம்பி| பரதனுக் | களிக்கவோ ||
அரக்கர் குலம் அதனை | வேருடன் | அழிக்கவோ ||
ஹரி பரந்தாமனாய் | சீருடன் | விளங்கவோ
 
# 17.

ராகம் : பாகேஸ்ரீ. 22 வது மேளமாகிய கரஹரப்ரியாவில் ஜன்யம்.
தாளம்: ஆதி.

S r2 g2 m1 p d2 n2 s - s n2 d2 m1 p d2 m1 g2 r2 s
ஸ ரி கி ம ப தி நி ஸ - ஸ நி தி ம ப தி ம கி ரி ஸ

பல்லவி :
; இனிமேலாயினும் | ; மனமிரங் | காதா ||
; கனிவு வரா | தா | வரதா||

அனுபல்லவி:
; பன்னிரண்டாண்டுகள்| ; தனியே | சிறையில்||
; பரிதவித்த ராம | ; தாசனைக் | காத்தவா ||

சரணம்:
; அவனியில் பல பிறவி | ; எடுத்துழன் | றேன் நான்||
; தவமும் செய்யவறியேன் | ; தானமும் | ஈய வல்லேன்||
; பவக் கடல் கடந்திட| ; ஹரி பரந் | தாமனின்||
; தவப்பத கமலமே | ; தஞ்சம் என் | றடைந்தேன் ||
 
# 18.
ராகம்: கல்யாணி. 65 வது மேளகர்த்தா.
தாளம்: ஆதி.

S r2 g3 m2 p d2 n3 s - s n3 d2 p m2 g3 r2 s
ஸ ரி கு மி ப தி நு ஸ - ஸ நு தி ப மி கு ரி ஸ

பல்லவி:
; உலக வாழ்வை | ; மெய்யென் | றெண்ணி ||
; உத்தம சீலனை | ; மறந்தாய் | ; மனமே ||

அனுபல்லவி:
; பலகலைகள் கற்றும் | ; பயனொன்று | மில்லை || அ (வன்)
; மலரடிகள் பற்றிப் | ; பணிவாய் | நீயே ||

சரணம்:
; அலைகள் ஓய்ந்த | ; அலைகடல் | போலும்||
; அசையா தீப | ; ஜ்வாலை| போலும் ||
; அலைகடல் துயிலும்| ; ஹரிபரந் | தாமனை||
; அனுதினம் நினைந்து | ; உருகுவாய் | நீயே ||
 
# 19.
ராகம்: தோடி. 8 வது மேளகர்த்தா.
தாளம்: மிஸ்ரா சாபு.

S r1 g2 m1 p d1 n2 s - s n2 d1 p m1 g2 r1 s
ஸ ர கி ம ப த நி ஸ - ஸ நி த ப ம கி ர ஸ

பல்லவி:
; ; எதுக்கித் || தனைகோபம் || ; ; எந்தன் மீ || து ஸ்வாமி||
; ; தோதகம் || என் செய்தே || னோ ஸ்ரீ || ரகு ராமா ||

அனுபல்லவி:
; ; ஆதி மு|| தலாய் என்னை || ; அடிமை கொண் || டவன் என்றுன்||
; ; பாத கம || லந்தனை || ; கதி என்று || நம்பி வந்தேன் ||

சரணம்:
; ; முன்நின்ற || தாடகையை || ; வதைத்து ||வேள்வி காத்தாய்||
; ; உன்னருள் || வேண்டி நின்ற || ; சபரிக்கு || முக்தி அளித்தாய் ||
; ; உன்னைச் ச || ரணடைந்த || ; வீடணனுக்கு || அபயம் தந்தாய்||
; ; என்றும் உனைத் || துதி செய்யும் || ; ஹரி தாசனுக் || கருள் செய்வாய்||
 
# 20.

ராகம்: கரஹரப்ரியா. 22 வது மேளகர்த்தா.
தாளம்: ஆதி.

S r2 g2 m1 p d2 n2 s - s n2 d2 p m1 g2 r2 s
ஸ ரி கி ம ப தி நி ஸ - ஸ நி தி ப ம கி ரி ஸ

பல்லவி:
தாயே ஜகதீஸ்வ || ரி எந் | தன் மீது ||
; தயை புரிவாய் அம் |பா சங் | கரி ||

அனுபல்லவி:
நீயே ஜகத் ரக்ஷகி | நீயே ஜ | கத் காரிணி||
நித்ய சுகம் அளிக்கும் | சத்யஸ்வ | ரூபிணி ||

சரணம்:
; பரமபதம் அளிக்கும் | ; பாவனி | உன் தொண்டர் ||
; துரிதங்களை அகற்றி | தூய்மை அ |ளிக்கும் இரு ||
; சரண கமலங்களை | ; சிந்தையில் | நினைந்திடும் ||
; ஹரிதாசன் அனு | ; தினமும் | போற்றிடும் ||
 
# 21.

ராகம்: மாயாமாளவகௌளம். 15 வது மேளகர்த்தா.
தாளம்: ரூபகம்.

S r1 g3 m1 p d1 n3 s - s n3 d1 p m1 g3 r1 s
ஸ ர கு ம ப த நு ஸ - ஸ நு த ப ம கு ர ஸ

பல்லவி:
; யாரறிவார் || உன் மஹிமையை || ; ஆனந்த நட || ராஜா ||

அனுபல்லவி:
; அரவமணிந்து || ஆடிய பாதனே ||
; அம்புவி எங்கும் || நிறைந்த தேவனே||

சரணம்:
; பாதி மதி || தனைச் சூடி|| ; பரமானந் || தமாகவே ||
பாதித் திருமேனி || மங்கைக்கருளிய || ; வானவர் || கோவே ||
; ஆதியந்தமும் || இல்லாது விளங்கும் || ; ஆதி பரம || ஜோதியே ||
; கோதில்லாத || ஹரிதாசனைக் || ; காத்தருளும் || மஹாதேவா||
 
# 22.

ராகம்: காம்போதி. 28 வது மே
மான ஹரிகாம்போதியில் ஜன்யம்.
தாளம்: ரூபகம்

s r2 g3 m1 p d2 s -- s n2 d2 p m1 g3 r2 s
ஸ ரி கு ம ப தி ஸ-ஸ நி தி ப ம கு ரி ஸ

பல்லவி:
; ராகவன் || பெருமையை || அகமகிழ்ந் || துரைத்தால் ||
ஸகல பாக்கியம் || பெறலா || மே..........|| .........................||

அனுபல்லவி:
ரகுபதி || ஸகல லோக || அதிபதி || குண நிதி ||
மகபதி தொழும் || மலர்பாதன் ||
மங்கை ஜானகி || மனோகரன் ||

சரணம்:
; அரக்கர் குலம் || வேரறுக்க ||
; அவனிதனில் || அவதரித்தோன் ||
; இருடிகள் து || யரம் நீக்கி ||
சுரர்களைக் || காத்தோன் ||
வரம் அருளும் த || யாள சீலன் ||
வரதன் தச || ரத பாலன் ||
ஹரிதாசன் || புகழ்ந்து போற்றும் ||
ஹரி பரந்தா || மன் ராமன் ||
 
# 23.

ராகம்: சஹானா. 28 வது மேளமாகிய ஹரிகாம்போதியில் ஜன்யம்.
தாளம்: ரூபகம்.

S r2 g3 m1 p m1 d2 n2 s - s n2 d2 p m1 g3 m1 r2 g3 r2 s
ஸ ரி கு ம ப ம தி நி ஸ - ஸ நி தி ப ம கு ம ரி கு ரி ஸ

பல்லவி:
; ராமா எனைக் || காக்க வேணும் || ரவி குல ஸோ || மா ......||

அனுபல்லவி:
; காமாதி || வைரிகள் செய்யும் ||
; கொடுமையினால் || அடையும் கலக்கம் ||
; போமா உனக் || கிது நியாயம் ||
; ஆமா இன்னும் || பாராமுகம் ||

சரணம்:
; தஞ்சமடைந் || தவரைக் காக்க ||
; வஞ்சனை செய்வ || தழகாமா ||
; குஞ்சித பதம் || தனைத் தொழுதால் ||
; நெஞ்சில் க்ருபை வ || ராமல் போமா ||
; சஞ்சலம் தனை || நீக்கி ஆள ||
; அஞ்சினால் என் || பாபம் போமா ||
; ஆஞ்சநேய || வரதா ஹரி ||
; தாசன் போற்றும் || பரந்தாமா||
 
# 24.

ராகம்: கமாஸ். 28 வது மேளமாகிய ஹரிகாம்போதியில் ஜன்யம்.

தாளம்: ஆதி.

S m1 g3 m1 p d2 n2 s - s n2 d2 p m1 g3 r2 s
ஸ ம கு ம ப தி நி ஸ - ஸ நி தி ப ம கு ரி ஸ

பல்லவி:
வீணாய்ப் போகலாகு | மா.... மா | னிட ஜன்மம் ||

அனுபல்லவி:
; வேணு கான லோலனை | ; விமல பொற் | பாதனை ||
; கனவிலும் நினைவிலும் | மனதிலும் | நினையாமல் ||

சரணம்:
; ஸத்திய ஸ்வரூபனை | ; தர்ம பரி | பாலனை||
; நித்திய நிரந்ஜனனை | ; நிர்மல | னை...........||
; முக்தி தரும் ஹரி பரந் | தாமனைப் | பணிந்து ||
; பக்தி செய்து மனமாரப் | புகழ்ந்து போற் | றிடாமல்||
 
# 25.
ராகம்: காம்போதி
28 வது மேளமாகிய ஹரிகாம்போதியில் ஜன்யம்.
தாளம்: ஆதி.

s r3 g3 m p d3 s - s n2 d3 p m g3 r3 s
ஸ ரு கு ம ப து ஸ -ஸ நி து ப ம கு ரு ஸ.

பல்லவி:
; கரிவதனா உந்தன்
| ; கழலினைத்| தொழுதேன் ||
; கருணை புரிவா|யே ....|... ||

அனுபல்லவி:
; பரமன் அருளிய பா|லா; ; கரு|ணாலவாலா ||
; வரும் வினைகளைத் துடைத்|; தருள் செய்யத்| தருணம் ||

சரணம்:
; எப்பணி இயற்றும் முன்| ; எவ்வித இடையூறும் ||
; அப்பனே உன்னை நினைத்தால்| ; அகன்றிடு |மே ||
; செப்பரும் சதுர் மறையில்| ; சிறந்து விளங்|கும் நாதா ||
; ஒப்புயர்வற்றவனே| ; ஓங்கார|ரூபனே
||
 
# 26.
ராகம்: மோஹனம்
28 வது மேளமாகிய ஹரிகாம்போதியில் ஜன்யம்.

தாளம்: ஆதி.

s r2 g3 p d2 s - s d2 p g3 r2 s
ஸ ரி கு ப தி ஸ - ஸ தி ப கு ரி ஸ.

பல்லவி:
; ஜக3ன் மோ
ன ரா|ம-மாம்|பாஹி||
; ஜகத3பி4 ராம|மனோபி4| ராம ||

அனுபல்லவி:
; க2க3பதி வாஹன|; கருணா ஸாக3ர||
; நக4 வர த4ர ஸ்ரீ|; நந்த3 கிஷோர||

சரணம்:
; கௌ3த3ம முனி ஸதி| ; சா'ப வி|மோசன ||
; கௌ3ரவாதி3 து3ஷ்ட| ; மனுஜ ஸம்|ஹரண ||
; பு3த4ஜனாவன| ; ஸரோஜ|நயன||
; ஸதா3 ஹரிதா3ஸ| ; ஸேவித| ச'ரண
||
 
# 27.
ராகம்: வசந்தா. 17 வது மேளமாகிய சூர்யகாந்தத்தில் ஜன்யம்.
தளம்: ஆதி.

S m1 g3 m1 d2 n3 s - s n3 d2 m1 g3 r1 s
ஸ ம கு ம தி நு ஸ- ஸ நு தி ம கு ர ஸ

பல்லவி:
; பஞ்சாக்ஷரம் ஜபித்| தால் பா | வமனைத்தும் ||
; பஞ்சாய் பறந்திடு | மே | மனமே ||

அனுபல்லவி:
; சஞ்சலம் தீருமுந்தன் | ; சித்தம் | நலமாகும்||
; செஞ்சிலம்பசைய நடம்| ; புரி சிவ | பதம் சேர்க் || கும்

சரணம்:
; உமையவள் அனுதினம் | உரைக்கும் | மந்திரம் ||
; கமலாஸனன் ஸதா |கூறும் | மந்திரம் ||
; நமனுக்குமஞ்ச வேண்டாம் | ; நற்கதி | அளித்திடும்||
: நேமமுடன் ஹரி | தாஸன் | புகழ்ந்திடும்||
 
# 28.

ராகம்: மோ
னம். 28 வது மேளமாகிய ஹரிகாம்போஜியில் ஜன்யம்.
தாளம்: ஆதி.

S r2 g3 p d2 s - s d2 p g3 r2 s
ஸ ரி கு ப தி ஸ- ஸ தி ப கு ரி ஸ

பல்லவி:
; ஆதி பராசக்தி | யே அன் | னபூரணி ||
; அடியேனைக் காத்தருள் | வாய் |....||

அனுபல்லவி
; பாதி மதி அணிந்த | ; பரமேஸ் | வரருடன்||
; ப்ரியமுடன் விளையாடும் | பர்வத ரா | ஜகுமாரி ||

சரணம்:
; சண்டமுண்டாசுரரைக் | ; கண்டனம் | செய்து ||
; அண்டர்களைக் காத்த | ; அகிலாண் | டேஸ்வரி ||
; தொண்டருக்கருள் செய்யும் | ; தாயே ஜ | கதீச்வரி ||
; புண்டரிகாக்ஷன் ஸ்ரீ | மாதவன் | ஸோதரி ||


 
Last edited:
# 29.

ராகம்:
ராகம்: புன்னாகவராளி.
8வது மேளமாகிய
ஹனுமத்தோடியில் ஜன்யம்.
தாளம்: ஆதி.

s r1 g2 m1 p d1 n2 - n2 d1 p m1 g2 r1 s n2.
ஸ ர கி ம ப த நி-நி த ப ம கி ர ஸ நி.


பல்லவி:
; சோதனை செய்யலாகு | மா ஏ | ழை என்னிடம்||
; வாது தொடுக்கலாகு | மா?| ....||

அனுபல்லவி:
; யாதவ குலத்துதித்த | ; மாதவ | னே உந்தன்||
; பாத கமலங்களை | ; கதியென்று |அடைந்தேனே||

சரணம்;
; அண்ட பகிரண்டம் அனைத்| தும் உண் | டு உமிழும் ||
; புண்டரீக தள நய | னா |...||
; அண்டினோரைக் காத்தருளும் | ; அண்டர்குல | நாயகனே ||
; தொண்டனுக்கருள் புரிய | ; தாமதம் | ஏன் சுவாமி ||
 
Last edited:
# 30.

ராகம்: சக்ரவாகம். 16வது மேளகர்த்தா ராகம்.
தாளம்: மிஸ்ர ஜம்பை.

S r1 g3 m1 p d2 n1 s - s n1 d2 p m1 g3 r1 s
ஸ ர கு ம ப தி ந ஸ - ஸ ந தி ப ம கு ர ஸ.

பல்லவி:
தே3வி த்ரிசூ'ல சக்ரதா4 | ரி | ணி அம்ப3 ||
த3யயாமாம் பாஹி தீ3 | ன த3 | யாபரி ||

அனுபல்லவி:
பாவனி ரவி ச'த கோடி தே |ஜோஜ் | வலே ||
ப4வானி ப்ரபன்னார்த்தி ஹா | ரிணி | விமலே ||

சரணம்:
த்வமேவ ஸர்வலோக ஜன | னி | ச'ங்கரி ||
த்வமேவ விச்'வ தா4ரிணி த்ரிபு | ர ஸுந் | த3ரி ||
த்வமேவ ஸர்வ ஹாரிணி தா3 | னவ | மர்த4னி ||
த்வமேவ மம ச'ரணம் ஹரிதா3 | ஸ | போஷணி ||
 

ஸ்ரீ. K .R. நாராயணன் (எங்கள் தத்தா)அவர்களின் 5 வர்ணங்களையும்,
25 கீர்த்தனைகளையும் தேர்வு செய்து, "பக்தி மணி மாலை'"
என்ற புத்தக வடிவில் எங்கள் அன்னை ஸ்ரீமதி. மீனாள் ராமன் வெளியிட்டுள்ளார்.

அதன் பதிப்பாசிரியர் "ராஜி ராம்" என்ற பெயரில் நம் இணைய தளத்தில் எழுதும் கவிஞர் (என் தங்கை) ஸ்ரீமதி. ராஜேஸ்வரி ராமசந்திரன்.

இவர் சங்கீத கலாநிதி Prof ஸ்ரீ. S. ராமநாதன் அவர்களின் சிறந்த மாணவிகளில் ஒருவர். தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 1976 ஆம் ஆண்டின் சிறந்த இளம் வீணை இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். விசாகப்பட்டணம் A.I.R இல் வீணைக் கச்சேரிகள் செய்து வந்தவர்.

ஸ்வர, ஸாஹித்யங்களை அவர் அளிப்பதே முறையாக இருக்கும் என்பதால், இனி இந்தப் பகுதியை, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அவரே தொடருவார்.

ஸ்வர, ராக, தாளக் குறிப்புக்களுடனும், தமிழ் அல்லாத கீர்த்தனைகளின் பொருளுடனும் தரப்படும் இவற்றை இசை ஞானம் உள்ளவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

நன்கு பயின்று பயன் அடையுமாறு வேண்டி, வாழ்த்தி, உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன், இந்தத் தொடரிலிருந்து.


உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 
இசை அன்பர்களுக்கு வணக்கம்.

இசைத் தொடரைத் தொடருமாறு என் சகோதரி பணிக்க,
இசைந்து கொண்ட என் கண்கள் ஆனந்தத்தால் பனிக்க,

ஒரு இடைவெளி வருமோ என்ற ஐயம் மனதில் பிறக்க,
ஒரு கோப்பாகவே முழுப் புத்தகமும் இன்று கிடைக்க,

இத்தனை விரைவில் அனுப்பிய * ராமன், ரூபா-வுக்கு,
எத்தனை நன்றி பாராட்டினாலும் தகும் என நினைத்து,

தொடர்கிறேன் 'பக்தி மணி மாலையை' இங்கு அளிக்க,
தொடர்ந்து இசை விரும்பிகள் தினந்தோறும் படிக்க!


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்

* ராமன், சகோதரியின் இளைய மகன். ரூபா, ராமனின் இல்லத்தரசி.

 
Last edited:
mail
 
Last edited:
Dear members,

My sister told me that she is not able to view the scanned pages of the book 'Bhakthi Mani Maalai', which I posted yesterday, in her PC.

It will be of great help if I get feed backs from other members viewing this thread, on this issue.

Thanks in advance.

Regards,
Raji Ram
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top