நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள்
அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு
Excerpts:......
கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து
சபை காவலர்களால், அவர்களை வெளியேற்ற முடியவில்லை. சபையை ஒத்தி வைத்து, சபாநாயகர் வெளியேறினார். அதன்பின், கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றினர். சபாநாயகர் இல்லாத போது, காவலர்கள் உள்ளே நுழைந்ததும் விதிமீறல்.
சபாநாயகர் இருக்கும் போது மட்டுமே, உறுப்பினர்கள் வெளியேற்றம் என்பது நடைபெற வேண்டும். மேலும், சபாநாயகர் ஒட்டுமொத்தமாக, அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூறுவதும், விதிமீறலே. அவர், தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே, வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும்; அதை, அவர்பின்பற்றவில்லை.
இதே போல், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போது, பெயர் குறிப்பிடாததால், சபையில் இல்லாதவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ரகசிய ஓட்டெடுப்பு
இதை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு,உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு பதில் கூற முடியாமல், அரசு தவித்து வருகிறது. இச்சூழ்நிலையில், மீண்டும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
சட்டசபையில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் என, நான்கு கட்சிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள, மூன்று கட்சிகளும், 'ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஓட்டெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்' என, வலியுறுத்தின.
இதை, ஏன் சபாநாயகர் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்றால், ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1714922