• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

How to worship Kali to get rid of Rahu Dosha!

ராகுதோஷம் நீங்க காளியை வணங்கும் முறை!

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம்.

குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.

எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை தரும் என்பது நம்பிக்கை.

எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது.

இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம்.

கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:

காளியம்மன் மந்திரங்கள் :

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம்.

ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும் அவளை வாங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன.

காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு.

ஆனால் உண்மையில் உக்ரவடிவில் உள்ள காளியின் படத்தை தான் வீட்டில் வைக்கக்கூடாது.

சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை வைத்து வணங்குவதில் தவறில்லை.

காளியை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும்.

இதோ அந்த சக்திவாய்ந்த காளி தேவி காயத்திரி மந்திரம்.

காளி காயத்ரி மந்திரம் :

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை திங்கட்கிழமையிலோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ சொல்ல துவங்குவது நல்லது.

அமாவாசை அன்று சொல்ல துவங்கினால் மேலும் சிறப்பு.

மந்திரத்தை சொல்ல துவங்கும் முன்பு விநாயகரை வணங்கி பூஜை செய்துவிட்டு பின் ஜெபிக்கவேண்டும்.

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளியை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக கேட்ட வரம் கிடைக்கும்.

நினைத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்க உதவும் காளியம்மன் ஸ்லோகம்:

ஜயா ச விஜயா
சைவ ஜயந்தீ
சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ.

இந்த காளி ஸ்லோகத்தை தினமும் 10 முறையாவது சொல்லி வந்தால் நினைத்த காரியத்தில் நல்ல வெற்றியை அடையலாம்.

அனைத்தும் ஜெயமாகும்.

ஆகம கிரந்தங்களில் காளி தேவியைப் பற்றி பல தியானங்கள் இருக்கின்றன.

அவற்றில் பத்ரகாளி தியானம் அனைவராலும் சொல்லப்படுகிறது.

" ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி! "

இந்த தியான விதிப்படி காளிக்கு எட்டு கைகள், மூன்று கண்கள், டமருகம், சூலம், கபாலம் கையில் ஏந்தியபடி, அபய வரத ஹஸ்தங்களுடன் காட்சி தருபவளாகச் சொல்லப்பட்டுள்ளது.

உத்தரகலாமிருதத்தில் காளி வழிபாடு:

உடலில் பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை வரவழைக்கும் காளி வழிபாடு பற்றி ஒரு துதியால் அறிய முடிகிறது.

" காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்."

கருத்து: ‘காமேஸ்வரக் கடவுளின் இடது பாகத்தை அலங்கரித்திருப்பவளும்,
தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அடையாளமாகச் சங்கு சக்கரம் கொண்டு வரம் அளிப்பவளும், பிறை நிலவு தரித்து, பிரகாசமாக விளங்கும் முக்கண்களோடு, சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும், சூரிய வம்சத்தில் பிறந்த விக்ரமாதித்த அரசனைக் காத்து நன்மை தருவதில் அக்கறை உடையவளுமான காளிதேவியை வணங்குவோமாக!’

வெற்றி தரும் காளி அஷ்டகத் துதி: –

கடந்த நூற்றாண்டில் காஞ்சிப் பெரியவரின் நண்பராக இருந்த ஸ்ரீசெம்மங்குடி முத்துசுவாமிகள் என்பவர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் சேவகம் செய்து வந்தார்.

முத்துசாமி சிவாச்சாரியார் என்றும் செம்மங்குடி சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் மதுரகாளிதேவியைப் பற்றி சக்தி வாய்ந்த அஷ்டகத்தைப் பாடி உள்ளார்.

காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் இந்தத் துதியை பூஜை முடிவில் மும்முறை கூறிட, துர்சக்திகள் அகன்று இன்பமே சூழும் – எல்லா நலன்களும் சித்திக்கும்.

இந்தத் துதிக்கு ஜெய மதுராஷ்டகம் என்று பெயர்.

நமஸ்தே ஏகவக்த்ரே, சிகிஜ்வால சிகே, சுபே

வாமரூபே, கபாலதஹனே, ஸர்வாபரண பூஷிதே

க்ரூரதம்ஷ்ட்ரே, ரக்தமல்யே, அஷ்டாதஸ புஜகரே

மங்கள காரணே, மாத்ரே, மாதர் பலே ரக்ஷகே

குங்குமப்ரியே, குணவாஸினே, குலவ்ருத்தி காரணே, ச்ரியே

சூலம் டமருகஞ்சைவ, கபாலம் பாசதாரிணே

ஓம்காரரூபிணே, சக்திவரரூபே, வராபயே

ஸூகாஸனே, சாமுண்டே, ஸுந்தரி, யோகதீஸ்வரீ

ஸிம்ஹ வாஹனப்ரியே, தேவீ, ஸ்யாமவர்ணேச சாம்பவீ

மதுரகாளீ ஸ்மாசனவாஸே, மாத்ருகா, மஹாமங்களீ

சிறுவாச்சூர் வாஸப்ரியே, சீக்ரவரமண்டிதே

பூர்வபுண்ய தர்சனே தேவீ, மஹாமங்கள தர்சனீ

ஜ்யோதிர்மயே, ஜயகாளிகே, துக்க நாஸனப்ரியே, சிவே

ஜன்ம லாப வரேகாந்தே, மதுரே ஜ்யோதிரூபிணே

ஸர்வக்லேச நாசினே, மாதே, ஸாவித்ரீ, அபீஷ்டானுக்ரஹே

ஷோடசானுக்ரஹே தேவீ, பக்தானுக்ரஹ அர்ச்சிதே

ஏகமாஸம் சுக்ரவாரே ஸௌபாக்யம் காளிதர்சனம்

சுக்ர, ஸோம தினம் ஜப்த்வா ஸர்வமங்கள நிதி பாக்யதம்

இஷ்டபூர்ணம் ஜபேத் நித்யம், அஷ்டஸித்தி ப்ராப்திதம் சுபம்.

இதி ஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம்

ஸம்பூர்ணம்
 

Latest ads

Back
Top