OP
OP
V.Balasubramani
Guest
ஸ்ரீ குருப்யோ நமஹ
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
மஹா பெரியவா சரணம்.!!
ஒரு கிராமத்தில் முகாம்.. ஏழை விவசாயி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். தன் சொந்த சாகுபடியில் விளைந்த வரகு அரிசியைக் கொண்டு வந்து சமர்ப்பித்து, "சாமி சாப்பிடணும்" என்று வேண்டிக் கொண்டார்..
பெரியவாள் வரகு அரிசியை வடிக்கச் சொன்னார்கள்.. அதனுடன் புளிக் காய்ச்சல் சேர்த்து, 'வரகு அரிசி புளியஞ்சாதம்' செய்யச் சொன்னார்கள்..
அன்றைய தினம் ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு அந்தப் புளியஞ்சாதம் நைவேத்யமாயிற்று.. பொரி வேண்டாம் என்று சொல்லி, வரகுச் சோற்றையே பிக்ஷையாக எடுத்துக் கொண்டார்கள்...
அணுக்கத் தொண்டர்களின் இதயம் கசிந்தது.. ஓர் ஏழை விவசாயியின் அன்பு நிறைந்த வேண்டுகோளை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட பெரியவாளின் எளிய தன்மையை நினைத்து, நினைத்து நெகிழ்ந்து போனார்கள்...
எல்லையில்லா கருணைப் பேரருள் பெரியவா சரணம் சரணம்!
---------------------------------------------------------------------------------------------------------------------
பெரியவா சரணம்
தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்யும் விசுவநாத சிவாச்சாரியாருக்குக் காஞ்சிபுரம் கோயிலில் பூஜை முறை உண்டு..
தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த பெரியவா, ஒரு நாள் ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்துக்குச் சென்றார்கள்.. அன்றைக்கு விசுவநாத சிவாச்சாரியார் 'முறை'..
சிவாச்சாரியாருக்குக் கொள்ளை சந்தோஷம்.. தான் பூஜை முறையில் இருக்கும் போது பெரியவா தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள்..
தற்செயலான வருகை.. முன் கூட்டி சொல்லி விட்டு வரவில்லை.. ஏகம்பன் அருளால் பெரியவாளுக்குத் தரிசனம் பண்ணி வைக்கும் மகத்தான பேறு கிடைத்திருக்கிறது.. உள்ளம் நெகிழ்ந்தார் சிவாச்சாரியார்..
"பெரியவா, உள்ளே வந்து தரிசனம் பண்ணிக்கலாம்.." பணிவுடன் வேண்டினார் சிவாச்சாரியார்..
"அது கர்பக்ருஹம்.. ஆகம சாஸ்திரப்படி சிவாச்சாரியார்கள் தான் கர்பக்ருஹத்துக்குள் போகலாம்.. சில கோயில்களில் கர்பக்ருஹத்துக்குள் போவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கு.. ரொம்ப காலமாக, இந்தக் கோயிலில் அந்த உரிமை இல்லை.. இங்கிருந்தே ஆனந்தமாய் தரிசனம் கிடைக்கிறது... " பெரியவா புன்னகையுடன் கூறினார்..
பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை...
Source: Sri Sri Sri Maha Periyava/Face Book
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!