drsundaram
Active member
நீதியரசர் சூரியமூர்த்தி கூறுகிறார்,""எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில்,எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்!!!இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?? என்று நான் கேட்டபொழுது, உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால்!! பிறகு வா பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக
பாண்டிச்சேரியின் நீதிபதியாக
உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சைவசமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது!!! உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா??? என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், போய் குளித்துவிட்டு வா உனக்கு உபதேசிக்கிறேன் என்றார். நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை!!! ஏனெனில் அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்!!!

. அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே எனக்கேட்க?? ,அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக்கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன் என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்''.
இன்னதென்று தெரியவில்லை!!, அதன் அர்த்தமும் தெரியவில்லை!! அதன் மூலமும் உணரவில்லை!!! ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கிறது. """தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்''''இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்???
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக, ""விதியை வெல்வது எப்படி???'' என்று ஒரு புத்தகம்(பெட்டகம்) சில காலங்களுக்கு முன் வெளியானது. சகாய விலையில் கிடைக்கும் அந்த புத்தகம் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். அதில் எந்த பதிகம் எந்த பலனை அளிக்கும்?? என்று விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் வாங்கி ஓதி வாருங்கள் நலம் கிடைக்கும்

a face book fwd