புது வண்டி வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை.
இன்றைய இளைஞர்கள், புதுசாக வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வாங்கிய புது வண்டியை அதே வேகத்தோடு கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தில் மோதி விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். வண்டியோடு பிரச்சினை போனால் பரவாயில்லை. வண்டி ஓட்டி செல்பவர்களுக்கு, காயம் ஏற்பட்டு சில பேருக்கு உயிருக்கு ஆபத்தாக கூட முடிந்து விடுகிறது.
வண்டி வாகனம் வாங்கிய பிறகு அந்த வண்டி வாகனம் விபத்தில் சிக்க கூடாது என்றால், வண்டி வாகனம் வாங்க நல்ல நாளை எப்படி பார்ப்பது. வண்டியில் எந்த பொருட்களை வைத்தால் வண்டி விபத்தில் சிக்காமல் இருக்கும். ஒரு சில ஆன்மீகம் சார்ந்த டிப்ஸ் இந்த பதிவில் உங்களுக்காக.!!!*
வாகனம் வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
அஷ்டமி, நவமி, திதிகளில் வண்டி வாங்கக்கூடாது.
புதுசாக எந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும், அந்த நாளில் அஷ்டமி நவமி திதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அஷ்டமி நவமி இருந்தால் புது வண்டி வாகனம் வாங்க வேண்டாம்.
உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் இருக்கக்கூடிய நாளில் வாகனங்கள் வாங்க கூடாது.
கரிநாள், மரணயோகம் இருக்கக்கூடிய நாளிலும் புது வண்டி வாங்கக்கூடாது.
சரி, எந்த நாளில் தான் வண்டி வாங்குவது.
செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, திங்கட்கிழமை இந்த மூன்று கிழமைகள் வாகனங்கள் வாங்க சிறந்த நாளாக உள்ளது.
இந்த மூன்று நாட்களில் மேல் சொன்ன திதிகள் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்பாராமல் வரும் வண்டி வாகன விபத்தில் இருந்து தப்பிக்க ஆன்மீகத்தில் சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளது.
அதிலிருந்து ஒரு சில உங்களோடு இந்த பதிவில் பகிர்ந்து கொள்ளலாம்.
மகம் நட்சத்திரத்தன்று எமகண்ட நேரத்தில் அகத்திக்கீரை வாங்கி எருமை மாட்டிற்கு கொடுங்கள்.
எதிர்பாராத வாகன விபத்தால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.
அடிக்கடி வண்டி வாகனத்தில் சிக்குபவர்கள் இதை ஒரு முறை செஞ்சிடுங்க.
ஆஞ்சநேயர் பறந்து செல்வது போல ஒரு ஸ்டிக்கரை வாங்கி உங்களுடைய வண்டியில் ஒட்டிக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லை, என்றால் முருகரது ‘ரத பந்தம்’ ஒரு ஸ்டிக்கர் வாங்கி உங்களுடைய வண்டியில் ஒட்டிக் கொள்ளலாம்.
இந்த இரண்டு தெய்வங்களும் நிச்சயம் உங்களுடைய வண்டி வாகனத்தை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி கொண்டவை.
வண்டி வாகனத்தை இயக்கத் துவங்கும் போது, அதாவது வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது கருட பகவானே துணை என்று,
கருட பகவானை மனதார நினைத்து வண்டி வாகனத்தை ஓட்ட துவங்கினாலும் வண்டி வாகனத்தில் விபத்து ஏற்படாது.
இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விமானத்திலேயே நீங்கள் பயணித்தாலும் சரி, மேல் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு பொருந்தும்.
வண்டி ஓட்டுபவர்களும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றலாம்.
வண்டியில் பயணிப்பவர்களும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.
இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.