today there are N numbers of odes to perumal/andal on being the beginning of margazhi. this one caught my eye for its beauty and nostalgia, let alone simplicity and fervour.
all the more surprising since it was written by thangam thennarasu, prominent and high up in DMK. xxx'x must be turning in his grave. if you like to read it, i am sure, you will enjoy it as much as i did. perhaps a few can even relate to it...
i read it in Facebook, and shared it there. now it is TB forum's turn .. and here is thangam thennarasu's....
மார்கழி மலர்ந்து விட்டது !!
" பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே" சொல்லி மார்கழிக் குளிருக்கு இதமாக எங்கள் வீட்டின் எதிரே உள்ள பெருமாள் கோவில் பட்டரிடத்தில் சுடச் சுடச் வெண்பொங்கல் வாங்கிச் சாப்பிட்ட என் பால்ய கால நினைவுகள் ஒவ்வொரு மார்கழியிலும் என்னைத் தட்டிப் பார்க்கத் தவறுவதில்லை.
அதைப்போலத்தான் ஆண்டாளும் அவள் பாடிய பாசுரங்களும் !
'திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்து திருப்பாவை முப்பதும் செப்பிய ' ஆண்டாள் எங்கள் மண்ணுக்குச் சொந்தம் என்பதால் எப்போதும் வாஞ்சை மிகுந்த பாசம் அவள் மீது உண்டு
பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருத்தியாக இருந்தாலும் பிராட்டிமார் வரிசையிலும் இடம்பிடித்தத் தனிச்சிறப்பு அவளுக்கு மட்டுமே உண்டு ! தன் காலத்திற்கும் மிகப் பின்னால் உதித்த இராமானுஜருக்குத் தான் தங்கையான பெருமையும் அவளுக்கே !!
'மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் ' என்ற கொள்கை இருந்த காலத்தில் ," மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும், நாற்றமும் " தைரியமாக வேண்டி நின்ற பெண் கவி அல்லவா அவள் !
" கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி " என்று திருமணக் கனவு காணும் பெண்ணிவளோ என்று எண்ணும் போதே , "மானிடருக்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் " என்று திட்டவட்டமாய் மறுத்துவிட்டப் புரட்சிப் பெண்ணும் இவள் தானே !!
என்னவெல்லாம் பாடுகிறாள் ....
" மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் .." என்று முதல் பாட்டைத் துவங்கும் போதே அந்த மார்கழி மாதத்தின் முதல் நாள் ஒரு பௌர்ணமியாக அமைந்திருக்கும் சேதியைச் சொல்லும் அவள் " வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று "என்று அவள் காலத்தைக் கணிக்கும் வானியல் குறிப்பையும் விட்டுவைக்கவில்லையே !
செந்நெல்ஊடு உகளும் கயலும் , கீசு கீசு எனும் ஆனைச்சாத்தனும், மென்னடை அன்னமும், புழக்கடை வாவியும் , கண் படுத்தப் பொறிவண்டும் , வள்ளல் பெரும் பசுக்களும் .....அவள் பாட்டில் காணும் இடம் எல்லாம் இயற்கை செய்யும் ஆட்சியின் மாட்சிக்குச் சாட்சியங்கள் அல்லவா !!
இதெல்லாம் கூட ஒருபக்கம் இருக்கட்டும் ....
FaceBook நண்பர்கள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்திலேயே "உன்னோடு தோழமை கொள்வேன் குயிலே ! உலகளந்தான் வரக் கூவாய் !! " என்று ஒரு குயிலுடன் தோழமை கொண்டாளே....
அந்த சிநேகிதம் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !!