• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Nice words

  • Thread starter Thread starter talwan
  • Start date Start date
Status
Not open for further replies.
talwar,
what is the significance in repeating the nice words twice? is there any special meaning to sound it again? thank you.
Kunjuppuji,
It is a typo error.My mistake I copied twice.Otherwise no significance for repetetion.
Alwan
 
Worrying does not solve Tomorrow's Trouble.
It takes Today's Peace.

Alwan
 
மீண்டும் வள்ளுவம்!

இனிய சொற்கள்

இனிய சொற்கள் பேசுவதே அறமென, வள்ளுவர்
இனிதே எடுத்துரைக்கி
ன்றார், தம் திருக்குறளில்.


மாசில்லா மனதில்தான் அன்பும் மலரும்; அதுவே
மாசில்லா இன்சொற்களைப் பேசவும் வைக்கும்.

'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்', என்ற இரு வரிகளில்,

நம் முகம் மலர்ந்து நோக்கி, இனிய சொற்களை
நம் அகம் மலரக் கூறுவதே அறம், என்கின்றார்!

:grouphug: . . . :)
 
Hi,Sandhhya,
Welcome to this forum.You are free to post NICE WORDS known to you.We will get benifitted.
Alwan
 
Be very careful what we wish for..cos wishes get answered when we cant do anything about it.
Renukaji,
Can you elaborate the one you have mentioned.I really do not understand.
Alwan
 
Always aim at complete harmony of thought and word and deed. Always aim at purifying your thoughts and everything will be well.
- Mohandas K. Gandhi
 
#31. நேர்மையும், வாய்மையும்.


நேர்மை என்பது நம் மனம், மொழி,
செயல்களை ஒருமைப்படுத்துவதே.
நேரில் ஒன்றும், மறைவில் ஒன்றும்,
செய்யாதிருப்பதே நேர்மை ஆகும்.

பேச வேண்டும், நாம் எண்ணியதையே;
பேச்சும், எண்ணமும் வேறுபடக் கூடாது!
பேசியதையே நாம் செய்ய வேண்டும்;
பேச்சும், செயலும் மாறுபடக் கூடாது!

ஒன்றை நினைத்து, மற்றதைப் பேசினால்;
அழிந்து போகும் நம் வாக்கின் நேர்மை!
ஒன்றைப் பேசி, மற்றதைச் செய்தால்;
அழிந்து போகும் நம் உடலின் நேர்மை!

தன் நெஞ்சு அறிந்து பொய் சொன்னால்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றாலும்;
பொய்மையும் உயிர்களுக்கு நன்மை செய்தால்,
வாய்மையே ஆகும், இது வள்ளுவன் வாக்கு!

வாய்மை என்பது எந்த உயிர்களுக்கும்,
தீமை பயக்காததைச் சொல்வதே ஆம்.
வாய்மையை விடவும் சிறந்தது ஒன்று
வலை விரித்துத் தேடினாலும் கிட்டாது.

மனம், மொழி, செயல்கள் மாறுபடும்போது,
மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன.
ஒருமைப்பாட்டையும், வாய்மையையும்
ஒருங்கிணைத்து நாம் வாழ்ந்திடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


STRAIGHT-FORWARDNESS AND TRUTHFULNESS.

Straight – forwardness implies the uniformity of our thoughts, words and actions. Our actions and words in front of a person and behind his back should not differ in any way.

We must speak our genuine thoughts and we must act according to our genuine words. The thoughts and words must not contradict so also our words and actions must not disagree. If we think and speak differently our words get defiled. If we talk and act differently, our actions get defiled.

One should always be true to himself. If it is certain that a truth revealed is sure to hurt some one, then we are allowed to speak a harmless ‘white-lie’ to defuse the situation.

When a person’s thoughts, words and actions differ he will tend to become a split personality – truthful neither to himself nor to the others around him.
 

நேர்மறை எண்ணங்கள்...

நேர்மறை எண்ணங்களைக் கொள்ளப் பெரியோர் அறிவுறுத்துவார்;

எதிர்மறை எண்ணங்களால், மனமும் கெட்டு, உடல் நலமும் கெடும்.

மன வேறுபாடுகளே, பகைமை வளர்த்துவதில் முதன்மையானவை!
மன வேறுபாடுகளைக் குறைத்து, நட்புணர்வு வளர்க்க முனைவோம்!

:grouphug:

 
Last edited:
எல்லாவற்றிலும் நல்லதே பார்க்க எனக்கு அறிவு கொடுக்கவேண்டும்.
 

கண்களைக் கண்களாக்குவோம்!


ஆண்டவன் அருளால் நமக்கு இரு கண்கள்;

வேண்டும் அவற்றில் அருட் பார்வைகள்.

தோற்றத்துக் மட்டும் அவை தெரியும் எனாது,
ஏற்றமான அருளை பார்வையில் வைப்போம்!

கண்களைப் புண்ணுக்கு நிகர் ஆக்கிவிடாது,
கண்களால் கருணைப் பார்வை காட்டுவோம்!

உலக வாழ்வில் மரமாக நாம் நின்றுவிடாது,
உலக மக்களிடம் அன்பு காட்ட அறிவோம்!

கண்ணிருந்தும் அந்தகர்போல வாழ்ந்திடாது,
கண்ணில் நல்ல கண்ணோட்டம் கொள்வோம்!

வள்ளுவம் காட்டும் நல்வழிகள் அறிந்து, நாம்
செல்லுவோம் நல்ல அறவழிப் பாதையில்!

:car:


 
Renukaji,
Can you elaborate the one you have mentioned.I really do not understand.
Alwan


Ok I will give you a simple example..a person wishes he becomes rich and he actually does only after finding out that he is dying soon.So his wish got answered but he cant enjoy that wealth.

Another example..someone wishes for true love and finds it only after marriage(but the true love is not his spouse) and cant reciprocate.
 
Last edited:

தூய மனமே அடிப்படை!

தூய மனத்தில் தூய எண்ணம் வரும்;

தூய எண்ணத்தால் தூய சொல் வரும்;


தூய சொல்லால் தூய நட்பு வரும்;


தூய நட்பால் தூய செயல் வரும்;


தூய செயலால் தூய விளைவு வரும்;


தூய விளைவால் தூய வாழ்வு மலரும்!


:peace:

 
Life is all about sensation
Now and then its full of botheration
What you think, speak and do
Now and then its full of perception
Lif is all about sensation....

Nothing can mean life without any sense
Now and then should there be some innoncense
What you feel, feed and form
Now and then should there be some perfection
Nothing can mean life without any sense...

Life is all about experiencing
Now and then its full of persevering
What you realize, analyze and finalize
Now and then its full of compromising
Life is all about experiencing...

"The Perfect Art Of Living Is, To Feel That We Exist, Even In Pain..."

 
nice words

Ok I will give you a simple example..a person wishes he becomes rich and he actually does only after finding out that he is dying soon.So his wish got answered but he cant enjoy that wealth.

Another example..someone wishes for true love and finds it only after marriage(but the true love is not his spouse) and cant reciprocate.

Thanks Renukaji for explaining in detail.

Alwan
 

அழகுக் குறிப்பு!

அழகாகத் தோற்றம் அளிக்க விரும்பாதவரும் உண்டோ?
அழகுக் கலையால் நம் முகம் களையாக்க முனைவோமே!

எளிய வழியில் அழகு மிளிர, ஒரு சிறந்த உபாயம் இருக்கிறது;
இனிய எண்ணங்களும், கருணை மனமும் கொள்ளுவதே, அது!

அக அழகால், முக அழகு பெறுவோம்! :thumb:

 
A wish may be granted, but in a totally different way, by the Almighty! Here is one boon granted!

(I have posted this, as soon as I entered this forum, in one of my threads)

கேட்டதும் கிடைத்ததும்!

வேடிக்கையாகப் பொழுது போக்குவதையே
வாடிக்கையாகக் கொண்டவன் ஒருவன்.

பள்ளிப் படிப்பிலும் கவனம் இல்லாமல்,
துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்ந்தான்!

ஆண்டுகள் உருண்டு ஓட, இவனும் வளர்ந்து
ஆண் மகனாகி, வேலைக்கு அலைந்தான்.

உல்லாச வாழ்க்கை வாழ நினைத்தவன்,
செல்லாக் காசாகிப் போனதில் உடைந்தான்!

பெரிய ஒரு ஞானியின் உரைகள் ஒரு முறை
பெரிதாகத் தன் காதில் விழ, கவனித்தான்.

இறைவனை முழுதாய் நம்பி வேண்டினால்,
குறையின்றி அவனும் அருளுவது அறிந்தான்.

ஒருமனதாகத் தினம் தியானம் செய்தான்;
ஒரு நாள் இறைவனை நேரில் கண்டான்!

சுற்றிலும் இளம் பெண்களும், தான் ஊர்
சுற்றி வரப் பெரிய வாகனமும், மேலும்

பை நிறையக் காசும் தினமும் வேண்டுமெனப்
பைய வரம் கேட்டவனை, இறைவன் நோக்கினார்!

'அவ்வாறே ஆகட்டும்', என்று உரைத்த அவரும்,
இவ்வாறு அவனுக்கு வேலையை அமைத்தார்!

சில்லறைக் காசுகள் பையை தினம் நிறைக்க,
சில்லென்று குளு குளுப் பேருந்து கிடைக்க,

சுற்றிலும் இளம் பெண்கள் நடந்தனர் - அதில்
சுற்றி வந்த இவனே அந்தப் பேருந்தின் நடத்துனர்!

:pray: . . . :hail: . . . :crazy:


 
Each one has to find his peace from within. And peace to be real must be unaffected by outside circumstances.

Mohandas Gandhi
 
Act with kindness, but do not expect gratitude.
- Confucius​
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top