[h=1]அகமும், முகமும்![/h]
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்;
முகத்தின் அழகை விடவும் அதிகமாக!
முயற்சி செய்தாலும் மறைக்க முடியமா
முன்னே வந்து நிற்கும் அந்த அக அழகை?
அசலும், நகலும் என்று வேறுபடுத்தி
அறியவே இயலாத வண்ணம் இன்று,
அற்புதமான பொருட்கள் பலவற்றை
அழகுத் துறையில் நாம் கண்டிடலாம்!
பட்டாம்பூச்சிகள் போல இறகடிக்கும்;
போலி கண் இமையின் நீள் நுனிகள்!
நாணம் கொண்ட ஒரு சிறு பெண் போல,
நாளெல்லாம் திகழும் இரு கன்ன நிறம்!
இருப்பதை மறைத்து வரையப்பட்ட,
வில் போன்ற நீண்ட புருவங்கள்!
கனிந்த ஆப்பிள் பழம் போல் ஒரு
கணத்தில் உருப்பெறும் இரு உதடுகள்!
தோலின் நிறத்தையே மாற்றும் சில
தோல் சலவை திரவங்கள், பொடிகள்;
மொழு மொழு எனத் தோன்றிடத் தேவை,
மெழுகு வகைகள் சிலவற்றின் சேவை!
இலை போன்ற மிகத் தட்டையான வயிறு;
இல்லாதது போன்ற ஒரு உடுக்கை இடுப்பு;
நகங்களுக்கும் உண்டு பல நிறப் பூச்சு,
நாளெல்லாம் இதே மூச்சு, இதே பேச்சு!
மாறிக் கொண்டே இருப்பதன் பெயர் தான்
மாண்பு மிகு நம் ‘சரீரம்’ என்று அறிவீரா?
மாறிக் கொண்டே இருக்கும் ஒன்றுக்காக
மனிதனின் பொருள், நேரம் வீணாகலாமா?
உடல் கிடைத்தது நல்ல சாதனை புரியவும்,
உலகம் உய்ய நல்ல சேவை செய்யவுமே!
உழைத்து, உடலைக் காட்சிப் பொருளாக்கி,
உலகத்தோருக்கு காண்பிப்பதற்கு அல்ல!
மணி வெளுக்க சாணை உண்டு,
மனம் வெளுக்க வழியும் உண்டோ என
மனம் வெதும்பிப் பாடுகின்றார் அல்லவா
மனம் கவர்ந்த தமிழ்க் கவி பாரதியார் ?
மனம் வெளுத்தால் நம் அகம் அழகுறும்.
முகத்தில் தெரியும் அந்த அகத்தின் அழகு!
முயற்சிகள் எத்தனை செய்த போதிலும்,
முக அழகு என்றும் அக அழகை வெல்லாது!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Source: my blog of Tamil poems <visalramani.wordpress.com>
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்;
முகத்தின் அழகை விடவும் அதிகமாக!
முயற்சி செய்தாலும் மறைக்க முடியமா
முன்னே வந்து நிற்கும் அந்த அக அழகை?
அசலும், நகலும் என்று வேறுபடுத்தி
அறியவே இயலாத வண்ணம் இன்று,
அற்புதமான பொருட்கள் பலவற்றை
அழகுத் துறையில் நாம் கண்டிடலாம்!
பட்டாம்பூச்சிகள் போல இறகடிக்கும்;
போலி கண் இமையின் நீள் நுனிகள்!
நாணம் கொண்ட ஒரு சிறு பெண் போல,
நாளெல்லாம் திகழும் இரு கன்ன நிறம்!
இருப்பதை மறைத்து வரையப்பட்ட,
வில் போன்ற நீண்ட புருவங்கள்!
கனிந்த ஆப்பிள் பழம் போல் ஒரு
கணத்தில் உருப்பெறும் இரு உதடுகள்!
தோலின் நிறத்தையே மாற்றும் சில
தோல் சலவை திரவங்கள், பொடிகள்;
மொழு மொழு எனத் தோன்றிடத் தேவை,
மெழுகு வகைகள் சிலவற்றின் சேவை!
இலை போன்ற மிகத் தட்டையான வயிறு;
இல்லாதது போன்ற ஒரு உடுக்கை இடுப்பு;
நகங்களுக்கும் உண்டு பல நிறப் பூச்சு,
நாளெல்லாம் இதே மூச்சு, இதே பேச்சு!
மாறிக் கொண்டே இருப்பதன் பெயர் தான்
மாண்பு மிகு நம் ‘சரீரம்’ என்று அறிவீரா?
மாறிக் கொண்டே இருக்கும் ஒன்றுக்காக
மனிதனின் பொருள், நேரம் வீணாகலாமா?
உடல் கிடைத்தது நல்ல சாதனை புரியவும்,
உலகம் உய்ய நல்ல சேவை செய்யவுமே!
உழைத்து, உடலைக் காட்சிப் பொருளாக்கி,
உலகத்தோருக்கு காண்பிப்பதற்கு அல்ல!
மணி வெளுக்க சாணை உண்டு,
மனம் வெளுக்க வழியும் உண்டோ என
மனம் வெதும்பிப் பாடுகின்றார் அல்லவா
மனம் கவர்ந்த தமிழ்க் கவி பாரதியார் ?
மனம் வெளுத்தால் நம் அகம் அழகுறும்.
முகத்தில் தெரியும் அந்த அகத்தின் அழகு!
முயற்சிகள் எத்தனை செய்த போதிலும்,
முக அழகு என்றும் அக அழகை வெல்லாது!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Source: my blog of Tamil poems <visalramani.wordpress.com>