Raji Ram
Active member
தையல் வல்லுனர்!
தன் பிறந்தநாள் உடை தைக்க,
அவன் நாடினான் ஒரு தையல்
வல்லுனரை! அளவு பார்த்தவன்,
'இல்லை இதில் வேண்டிய துணி!
நான் தைக்க முடியாது!' எனக் கூற,
தன் உடை தைக்க வேண்டுமென
இன்னொரு வல்லுனரைக் கேட்க,
'இன்னும் இரண்டு நாட்களிலேயே
தயார் செய்வேன்!' எனச் சொல்லி,
தயார் செய்து கொடுத்துவிட்டான்!
தைக்கவே இயலாது என்று கூறிய
தையல் வல்லுனரிடம் சென்றவன்,
மிகக் கோபம் கொண்டு, கேட்டான்,
'மிக எளிதாக இன்னொருவன் என்
துணியில் உடை செய்து தந்தானே!
துணியே போதாது என்றாயே நீ?'
பெரிதாகச் சிரித்த அவன் கேட்டான்,
'இருப்பது அவனுக்குச் சின்ன மகன்!
என் மகனுக்கோ கல்லூரிப் படிப்பு!
நான் போதுமெனச் சொல்வேனோ?
ound: