7
Next comes Sankalpa. We tell it to ourselves what we are going to do and with what purpose. This emphasizes the fact that we should be clear of our goal in every act, this being the first requirement of Sraddha.
It says that through removal of our sins we propitiate God. Simply by praying to God, our sins do not vanish. Through karmas, our sins are removed. Then only God is pleased with us.
When the mind is entrusted with a routine work, it tends to escape from the drudgery. Either it goes to sleep or it ruminates on the past or dreams of future. It never lives in the present. While doing Sandhya vandanam, the mind should be awake. So it is designed in such a way as to avoid routineness now and then.
So far, every word accompanied a different action. Now during the entire Sankalpa, there is only one action.
Secondly, one has to be aware whether it is morning, midday or evening and add the relevant word in the Sankalpa.
“அடுத்தது ஸங்கல்பம். எந்த வேலை செய்யறதாயிருந்தாலும் என்ன செய்யப் போறோம், எதுக்காக செய்யறோம்னு மனசிலே தீர்மானம் பண்ணிக்கணும். நமக்கு நாமே ஞாபகப்படுத்திக்கணும். அதுக்காகத் தான் இந்த ஸஙகல்பம்.”
“மமோபாக்தன்னு ஆரம்பிக்கறதே, அதுவா?”
“அது மமோபாத்த ன்னு சொல்லணும். மம உபாத்த ன்னு சொன்னா என்னாலே அடையப்பட்ட ன்னு அர்த்தம்.
“என்னாலே அடையப்பட்ட எல்லாப் பாவங்களும் நீங்கறது மூலமா பரமேஸ்வரனை அல்லது நாராயணனைப் ப்ரீதி பண்றதுக்காக இதை நான் பண்றேன்னு அர்த்தம்.”
“மாத்திச் சொல்றேளா தாத்தா? பாவம் நீங்கறது மூலமா பகவானை ப்ரீதி பண்றதா, பகவானை ப்ரீதி பண்றது மூலமா பாவம் நீங்கறதா?
“சரியாத் தான் சொன்னேன். நம்ம பாவம் நீங்கினா பகவான் சந்தோஷப்படறார். வெறுமனே பகவானை ஸ்தோத்ரம் பண்ணினா பாவம் நீங்காது. கர்மாக்களைப் பண்ணி பாவத்தைப் போக்கிண்டா பகவான் ப்ரீதியாயிடறார். இது தான் அதுக்கு அர்த்தம். இது சம்பந்தமா நெறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசையிருந்தா இந்த
லிங்க்லே 19வது பக்கம் பாரு.
“இந்த மனசு இருக்கே, இது எப்பவும் கடந்த கால நினைவுகளை அசை போட்டுண்டு இருக்கும். இல்லாட்டா, வருங்காலத்தைப் பத்திக் கனவு கண்டுண்டு இருக்கும். அது நிகழ்காலத்திலே இருக்கறது ரொம்ப அபூர்வம் தான். புதுசா எதையாவது செய்யும்போது மனசு நிகழ்காலத்திலே இருக்கும். பழக்கமாகிப் போன விஷயங்களைச் செய்யும்போது அது அந்த வேலையை ஆட்டோ பைலட் கிட்ட ஒப்படைச்சுட்டு தூங்கப் போயிடும் அல்லது மேயப்போயிடும்.
“ஸந்தியாவந்தனம் பண்ணும்போது அந்த மாதிரி நடக்காம, முழுக் கவனத்தோட மனசு இருக்கணும்கிறதுக்காக பெரியவா ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கா. ஒரே மெக்கானிக்கலா இல்லாம அங்கங்கே ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்கா.
“இது வரைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு செயல்னு வந்துதா? இப்போ ஸங்கல்பம் முடியற வரைக்கும் கை அசையாம மடிமேலேயே இருக்கணும்.
“அப்பறம் இன்னொண்ணு, இப்போ என்ன வேளைங்கிறது நினைவிலே இருக்கணும். ப்ராதஸ் ஸந்த்யாம் உபாசிஷ்யே, மாத்யான்னிகம் கரிஷ்யே, ஸாயம் ஸந்த்யாம் உபாசிஷ்யே அப்டிங்கறதிலே அந்தந்த வேளைக்குத் தகுந்தாப்பல சொல்லணும். மனசு முழிச்சிண்டு இருந்தாத் தான் அதை சரியா சொல்ல முடியும்.