Subramaniasamys mistake at a marriage | ???? ????????? ?????????????: ???? ?????? ?????? ?????????? | Dinamalar
It is about Dr Swamy...We need translators here
திருநெல்வேலி: பரபரப்பான பேச்சுக்கும் பேட்டிக்கும் பெயர் பெற்ற பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, செய்த இன்னொரு காரியம் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை சுப்ரமணியசாமி கோவிலில் இன்று காலை ஒரு திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சுப்ரமணியசாமியும், சந்திரலேகாவும் நேற்றே நெல்லை வந்து சேர்ந்துவிட்டனர்.
இருவரும் இன்று காலை திருமணத்திற்கு வந்தனர். அப்போது, திருமண வீட்டார் ரொம்ப பவ்யமாக சுப்ரமணியசாமியை அணுகி, தாலியை எடுத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் சந்தோஷம் பொங்க தட்டில் வைக்கப்பட்டிருந்த தாலியை எடுத்து, கையில் வைத்து கும்பிட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நேராக மணப்பெண்ணிடம் தாலியை கட்டுவது போல் சென்றார். நிலைமை விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அறிந்த, சாமியின் அருகில் நின்றிருந்த சந்திரலேகா, சாமியை ஒரு தட்டு தட்டி உஷார்படுத்தி, தாலியை மணமகன் கைகளில் கொடுக்கும்படி கூறினார்.
சுதாரித்துக் கொண்ட சுப்ரமணியசாமி, தான் செய்ய இருந்த தவறை உணர்ந்தபடி, சிரித்துக் கொண்டே, மணமகனின் கைகளில் தாலியை கொடுத்தார். மணமகனும் தாலியை கட்டினார். சாமியின் செயலால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பெண் வீட்டார். அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் சாமியும், சந்திரலேகாவும் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.