புரட்டாசி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
புரட்டாசி மாத தொடக்கத்தில் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்வதும், பெருமாளை வழிபடுவதும் எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்கும்.
அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.
குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை :
ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமிதேவியை வணங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, பணமும், தானியமும் குறையாத அருளை பெறலாம்.
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவிக்கு கற்பூரத்தை காட்டி வணங்கி முழு வீட்டிற்கும் காட்டுங்கள். இதை செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.
வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் பணப் பஞ்சம் தீரும்.
வெள்ளிக்கிழமை மாலை லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது. மந்திரத்தை படிக்கும் போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது மிகச்சிறந்த பலனை தரவல்லது .
வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களை கொடுக்கலாம்.
செய்யக்கூடாதவை
வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவை கொண்ட பழங்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. அதேசமயம் வெள்ளிக்கிழமை இனிப்பு சுவை கொண்ட பொருட்கள், பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். மேலும், லட்சுமி தேவியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக்கூடாது.
வெள்ளிக்கிழமை யாரும் மறந்தும் கடன் கொடுக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வருவது கடினம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.