V
vignesh2014
Guest
பெய்ஜிங்: சீனாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் ஆள் எடுக்கிறார்கள். வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். அதை விட முக்கியமாக சில வகை ராசிக்காரர்களை வேலைக்கே எடுப்பதில்லை. பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளது. ஒருவருக்கு வேலையில் நாட்டம் இருக்குமா, அவர் சரியாக வேலை பார்ப்பாரா, அவரால் நிறுவனத்திற்கு லாபம் இருக்குமா, சக ஊழியர்களுடன் ஒத்துப் போவாரா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க ஜாகத்தையே பெரும்பாலான நிறுவனங்கள் நம்புகின்றன.
மேலும் சிலர், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களை வேலைக்கே சேர்ப்பதில்லையாம். இதை வைத்து ஆன்லைனில் பலரும் கலாய்க்கும் சம்பவங்களும் தற்போது சீனாவில் நடந்து வருகிறது. தங்களது திறமையைப் பாருங்கள் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். மற்றவர்களை விட நாங்கள்தான் சின்சியராக வேலை பார்ப்போம், அன்பு காட்டுவோம், கோபப்பட மாட்டோம், நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் சொல்லி குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வேலை கேட்கும் சம்பவம் சீனாவில் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.