P.J.
0
Some good habits of foreigners
வெளிநாட்டவரிடம் உள்ள சில நல்ல குணங்கள்..
1. அயல் நாட்டவர், எங்கு சென்ற போதிலும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுகின்றனர்.
2. அயல்நாட்டில், ஒரு அதிகாரியிடம் இரண்டு நாள் பழகிவிட்டு மூன்றாவது நாள் ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து நமக்கு தேவையான காரியத்தைசுலபமாய் சாதித்துக் கொள்ள முடியாது.
3. அலுவலகத்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அருகில் ஒரு பொருள் இருக்கிறது. அதை எனக்கு எடுக்க வேண்டும் என்றால் நானே எழுந்துச் சென்று தான் எடுக்க வேண்டும். " அதை கொஞ்சம் எடுக்கறியா" என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. நமது சுய தேவைக்கு ஒருவரை தொந்தரவு செய்வது அநாகரீகம். உதவி என்பது வேறு. இது வேறு. மேலாளர் தான் என்றாலும் இதைக் கொண்டு வா. அதை அங்கு வை. என கட்டளையிடும் உரிமை எவருக்கும் இல்லை.
4. எந்த சூழ்நிலையிலும் தேவையான இடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் தன் தாய்மொழியை விட்டுத்தர மாட்டார்கள்.
5. எனக்குப் பிடித்த மாணவன் என மதிப்பெண்ணை அள்ளி வழங்க மாட்டார்கள். பிடிக்காதவன் என கிள்ளியும் வழங்க மாட்டார்கள்.
6. எந்த நாட்டுச் கலாச்சாரத்தில் எது பிடித்திருந்தாலும் அதை இரசிப்பார்கள், அதுவும்... இரண்டாம் பட்சமாக மட்டுமே.
இது பிடித்தது என்று மறுநாளே அதற்கு மாறிவிட மாட்டார்கள்.
7. செக்யூரிட்டி வேலை செய்பவர் என்பதால், அவர் கதவை திறந்து விட்டு ஒவ்வொருவரையும் வணங்க வேண்டும் என்பதில்லை. கழிப்பறை சுத்தம் செய்பவர் எனினும், செக்யூரிட்டி எனினும் ப்ராஜெக்ட் மேனேஜர் எனினும் அனைவரும் சமமே.
இன்னும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது. நம்மிடம் அவர்கள் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் அவர்கள் இரசிப்பதை அவர்களுக்கு பிடித்ததை அவர்களுக்கு உகந்ததை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.
நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கவே இந்த பதிவே தவிர அயல்நாட்டவரின் அனைத்து கலாச்சாரத்தையும் ஆதரிப்பதற்கு அல்ல. மேற்சொன்ன எதையேனும் கற்றோமா? நாகரீகம், மேலை நாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் கண்ட படி உடுத்தவும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றவும், கண்ட இடத்தில் பிசா பர்கர் என கண்டதை உண்ணவும் கற்றுக் கொண்டோமே தவிர நல்லதைக் கற்க மறந்தோம்.
நம் நாட்டில் அரசியல் வாதிகள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என்றல்ல. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஊழல். அவற்றை முதலில் களையெடுப்போம்.
அயல் நாட்டைப் பார்த்து கற்கும் ஆசை வந்தால் நல்லதை மட்டும் கற்போம். அதுவும் ஆசைக்கே. நம் திருவள்ளுவர் எழுதி வைத்ததை கற்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. சிந்தனையில் மாற்றம் கொள்வோம். அதுவே உண்மையான நாகரீக வளர்ச்சி.
Some good habits of foreigners - வெளிநாட்டவரிடம் உள்ள சில நல்ல குணங