வணக்கம்
உங்களின் அருமையான தமிழுக்கும்,மற்றும்பதில் பதிவுக்கும் நன்றி.மன்னிக்கவும்,தலைப்பை "தமிழன் யார்" என்று அளித்து விட்டு,ஒரு பதிவு கூட தமிழில் வரவில்லையே,என்ற ஆவலின் பேரில்
என் எண்ணவோட்டத்தை,பதிவிட்டேன்.அப்படி தமிழில் வந்திருந்தால்,உங்கள் செய்தியில் உள்ளதுபோல் மேலும் சில நல்ல தமிழ் வார்த்தைகளைப் பார்த்திருக்கலாம்,அல்லவா.நாம் சொல்லவிரும்புவதை,பிறர்க்கு புரிய வேண்டுவதற்காக பயன்படுத்தும் கருவி தான் மொழி என்று சொல்லும் நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்,இந்தி திணிப்பு என்று எழுதுகிறீர்கள்.மற்றும் அரசியலைப்பற்றி எழுதுகிறீர்கள்.தமிழ் நாடு இந்தியாவை சார்ந்தில்லையா அல்லது இந்தியும் தமிழைப்போல் மற்றுமொரு மொழி என்பதை மறுக்கிறீர்களா?மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் இந்தியை திணிப்பதாக கொண்டாலும்,இந்தியாவின் மற்றப்பகுதிகளுமே,தமிழ்நாடைப்போலத்தான்,கூறியிருக்கவேண்டுமே,?இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதை லகுவாக்க,ஆங்கிலேயர்கள்,ஏற்படுத்திய இருவசதிகளான,அஞ்சல் மற்றும் ரயில் இணைப்புகள்,பெரிதும் உதவியுள்ளது.ஏனென்றால்,இந்த இரு வசதிகளால்,இந்தியாவின் மொழி,மற்றும் மதத்தைக் கடந்து எல்லோரும்,மற்ற பகுதிக்கு சென்று வர,அவர்களுடன் பேச ,அவர்களைப்பற்றி அறியவும் உதவியது.காந்தி அடிகளுக்கும் இந்தியாவின் பல பகுதியில் வாழும் மக்களை ஒன்று திரட்ட வசதியாய் அமைந்தது. அப்பொழுது ஆங்கிலம் தான் அதிகம் பயன் பட்டிருக்கும்.அதன் தொடர்ச்சிதான் சுதந்திர இந்தியாவிலும் இன்று வரை தொடர்கிறது.வளர்ந்த நாடுகளான சீனா,ரஷ்யா போன்றவை,தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள்.அவர்கள் வளரவில்லையா?உலகில் சூரியன் உதிக்காத இடமே ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லை என்ற போதிலும்,சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவு நாடுகள் தாய் மொழி கல்வி மூலம் தங்களை உயர்த்திக்கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய ப்ரச்சசனையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!இதனால் இந்திக்ககு ஆதரவாளர் அல்ல.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.