the other december cultural festival in chennai தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011
dec 15
please read the dec 15 dated blog about தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011.
not many of us would have heard of this...but i wish for once i was in chennai to witness this one..and it is free too
couple of excerpts as teasers, i provide here..
‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ என்ற பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையை நாங்கள் நடத்திவருகிறோம். நான் அதில் ஓர் அறங்காவலன். பேராசிரியர் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவர். பாரம்பரியம் என்று நாங்கள் பார்ப்பது இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை.
..........
இந்த ஆண்டு நிகழ்வு கீழே:
23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்
அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.
....
ரகுநாத நாயக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் நாயக்க மன்னர்களில் மிக முக்கியமானவர். பாடல் இயற்றுவார். பாடுவார். வீணை வாசிப்பார். பல மொழிகளை அறிந்தவர். தஞ்சையிலிருந்து ஆட்சி செய்தார். தெலுங்கு பேசும் அரசர்கள். இவருடைய மகன், தன் தந்தையின் வாழ்க்கையை யக்ஷகானமாக தெலுங்கில் பாடியுள்ளார். அதிலிருந்து அக்காலத் தஞ்சையின் வரலாறு பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்று ஸ்வர்ணமால்யா தமிழில் பேசுவார், பாடுவார், அபிநயம் புரிவார்..
பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருப்பவர். ஆனால் வரலாறுதான் அவருக்கு விருப்பமான துறை என்று நினைக்கிறேன். நாயக்கர் கலை பற்றிதான் அவருடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியே. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் பற்றி அவர் விவரிப்பது தாளமுடியாத ஆச்சரியத்தைத் தரும். அந்தந்தச் சிற்பங்களுக்குமுன் அவர் நின்றுகொண்டு பேசினால், அங்கிருந்து நகரவே உங்களுக்கு மனம் வராது.
....
இன்னொரு பேச்சைத் தரப்போவது ஸ்தபதி உமாபதி ஆசார்யா. இவர் விஸ்வகர்மா குடும்பத்தைச் சேர்ந்தவர். பரம்பரை பரம்பரையாகக் கோவில் கட்டுதல், சிலை வடித்தல் ஆகியவைதான் இவர்களுடைய தொழில். இன்றைய எஞ்சினியர்கள் வியக்கும் வண்ணம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சமைக்கப்பட்ட பல கோவில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவற்றை இந்த ஸ்தபதிகள் எப்படிக் கட்ட ஆரம்பிப்பார்கள்? எம்மாதிரியான பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்? ஒரு சிலையை வடிப்பதற்குமுன் என்ன செய்வார்கள்? எந்த மாதிரியைக் கொண்டு இவற்றை உருவாக்குவார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கெல்லாம் இந்தப் பேச்சில் விடை கிடைக்கலாம்.
hope this induces atleast one of the public here,to attend atleat one of the functions listed above, and provide feedback.
any takers?