வால் அறுந்த நரிகள்!
பொறியில் மாட்டிக் கொண்டது ஒரு நரி;
பறிபோய் விட்டது அழகிய நீண்ட வால்!
out:
வால் இல்லாத நரியும் ஒரு நரியா???
வாலில் தானே அதன் அழகே உள்ளது!
அமர்ந்து ஆலோசித்து தயார் செய்தது
அற்புதமான கற்பனைக் கதை ஒன்றை!
"வானில் எத்தனை நட்சத்திரங்கள்!!!
வந்து பாருங்கள்!" என்று அழைத்தது. :lie:
"பொய் சொல்கிறாய் நீ " என்று சொன்ன
பொல்லாத நரிகளிடம் சொல்லிற்று,
"வால் இருந்தால் காணமுடியாது
வானில் மின்னும் நட்சத்திரங்களை!
வாலைத் துறந்தால் காணமுடியும்
வானில் மின்னும் தாரகைகளை!"
எதையும் நம்புவதற்கென்றே எங்கும்
எப்போதும் இருப்பார்கள் பலர் அன்றோ?
உற்சாகமாக வாலைத் தியாகம் செய்தும்
கற்பனைத் தாரகைகளைக் காணோம்!
"வாலும் போயிற்று! தாரகைகள் இல்லை!"
வாய் வரவில்லை இதைச் சொல்லுவதற்கு.
"இத்தனை நட்சத்திரங்களை நான்
இதுவரை கண்டதே இல்லை!" என்றன!
வால் அறுந்த நரிகள் கூறுவதில் ஒரு
நூல் அளவு உண்மை கூட இருக்காது!!! :nono: