இதுவல்லவோ Relationship!
ராமனுக்கு லக்ஷ்மணன் போல
கணேஷுக்கு ஒரு குமரேஷ்!
என்ன perfect understanding!
என்ன perfect synchronization!
ஈருடல் ஓர் உயிர் என்பது போல.
அவர் நினைத்தது இவர் விரலில்!
பிறக்கும் போதே வயலினுடன்
பிறந்திருப்பர்களோ என்னவோ?
எத்தனை ஸாஹசம் அந்தத் தந்திகளில்!
எத்தனை விதமான் இனிய நாத அலைகள்!
நாம் வாசித்தால் உள்ளே ஒரு பூனைக் குட்டி
ஒளிந்துகொண்டு "மியாவ்! மியாவ்!" என்னும்!
இவர்கள் வயலினில் மட்டும் எப்படி இனிய
குழலும், யாழும் ஒலிக்கின்றன? தெரியவில்லை!
பக்க வாத்யக்காரர்களைத தட்டிக் கொடுத்து
பக்குவமாக, பக்காவாக drill வாங்கினார்கள்!
Relationship என்ற தலைப்பு வெகு பொருத்தம்.
இருவர்களிடமும், நால்வர்களிடமும் அதை
எல்லோராலும் காணமுடிந்தது மகிழ்ச்சி!
சாதாரணமாக உடன் வரும் spouse ஹாலில்
third prize அடித்தவர் போல் சோகமாகவோ
மிகவும் self conscious ஆகவோ இருப்பார். :spy:
பளீர் புன்னகையுடன் Smt. ஜயந்தியைக் கண்டது
மனத்துக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது! :thumb: