15. கனியாத பக்தி.
“ஹரியும் சிவனும் ஒண்ணு ; இதை
அறியாதவன் வாயில் மண்ணு !”
என்று கூறுவார் முன்னோர்கள்;
என்றாலும் சிலர் கேட்பதில்லை.
கனியாத பக்தி உடைய ஒருவன்,
தனியாக சிவபிரானை மட்டுமே
கனிவோடு தொழுது வந்ததான்;
பணியான் வேறொரு கடவுளை.
ஒரு நாள் சிவனே நேரில் தோன்றி
“ஒன்றே தெய்வம் என்றறியாயோ?”
என்ற போதிலும் மீண்டும் அவன்
எந்தக் கடவுளையும் வணங்கவில்லை.
சங்கர நாராயணனாய் வந்தபோதும்,
சங்கரனை மட்டுமே வணங்கினான்;
ஹரியை விடுத்து விட்டான் அவன்;
ஹரனாலும் மாற்ற முடியவில்லை.
தீவிர பக்தியும், மாறாத வெறுப்பும்,
தூண்டிவிட்டது மற்றவர்களையும்!
“விஷ்ணு! விஷ்ணு!” என்ற நாமத்தை
வெறுப்பேற்ற வேண்டிக் கூறலாயினர்.
காதில் அப்பெயர் விழாமல் இருக்க,
காதில் இரண்டு மணிகளை அணிந்து,
காதுகளை ஆட்டிச் சப்தம் செய்தவன்,
'கண்டா கர்ணன்' எனப் பெயர் பெற்றான்.
கண்டா கர்ணனைப் போன்றே பல
கண்மூடித்தனமான வேறு பக்தர்களும்
இறைவனிடம் காட்டும் வினோத பக்தியில்,
வெறுப்பே விருப்பையும் விட அதிகம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/15-கனியாத-பக்தி/
“ஹரியும் சிவனும் ஒண்ணு ; இதை
அறியாதவன் வாயில் மண்ணு !”
என்று கூறுவார் முன்னோர்கள்;
என்றாலும் சிலர் கேட்பதில்லை.
கனியாத பக்தி உடைய ஒருவன்,
தனியாக சிவபிரானை மட்டுமே
கனிவோடு தொழுது வந்ததான்;
பணியான் வேறொரு கடவுளை.
ஒரு நாள் சிவனே நேரில் தோன்றி
“ஒன்றே தெய்வம் என்றறியாயோ?”
என்ற போதிலும் மீண்டும் அவன்
எந்தக் கடவுளையும் வணங்கவில்லை.
சங்கர நாராயணனாய் வந்தபோதும்,
சங்கரனை மட்டுமே வணங்கினான்;
ஹரியை விடுத்து விட்டான் அவன்;
ஹரனாலும் மாற்ற முடியவில்லை.
தீவிர பக்தியும், மாறாத வெறுப்பும்,
தூண்டிவிட்டது மற்றவர்களையும்!
“விஷ்ணு! விஷ்ணு!” என்ற நாமத்தை
வெறுப்பேற்ற வேண்டிக் கூறலாயினர்.
காதில் அப்பெயர் விழாமல் இருக்க,
காதில் இரண்டு மணிகளை அணிந்து,
காதுகளை ஆட்டிச் சப்தம் செய்தவன்,
'கண்டா கர்ணன்' எனப் பெயர் பெற்றான்.
கண்டா கர்ணனைப் போன்றே பல
கண்மூடித்தனமான வேறு பக்தர்களும்
இறைவனிடம் காட்டும் வினோத பக்தியில்,
வெறுப்பே விருப்பையும் விட அதிகம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/15-கனியாத-பக்தி/